சிலரது கண்கள்
பேசும் சிலரது கண்கள் புன்னகைக்கும். ஆனால் சில நடிகைகளின் கண்கள் எள்ளலும் துள்ளலுமாய்
இருக்கும்.
என்னால் மறக்கமுடியாத
அந்த விழிகளின் மொழிகள் பத்தி கொஞ்சமே கொஞ்சம் சொல்லிக்கிறேன்.
எத்தனையோ பேரிரிந்தும்
ஏன் இந்த மூவர்னு கேக்கலாம். ரெண்டு மூணு நாளா ஏனோ இவங்க கண்களைப் பத்தியே நான் நினைச்சிக்கிட்டு
இருக்கேன். இதுக்கு முன்னாடி வேற கண்கள் எல்லாம் சிறப்பானதா படல.
ரோஜாவோட கண்கள்ல
எள்ளலோட ஒரு போதையும் இருக்கும். ராதாவோட கண்கள்ல ஒரு கண்டிஷனல் எள்ளல் இருக்கும்.
கொஞ்சம் பயமா கூட இருக்கும். டயானா, சில்க், ஜோதிமீனாவின் பார்வைகள் எல்லாமே கொஞ்சம்
மயக்கும் ரகம்.
பல கண்கள் பசுவோடதுமாதிரி
மென்மையானவை. சில காதல் பார்வைக்கும் குறும்புக்கும் மட்டுமே சாத்தியம் கொண்டவை. ரொம்பப்
பாவமான பார்வைன்னா அது கமலா காமேஷின் கண்கள் மிகவும் பயந்தவை .
ஆனா ஒரு சீன் நடிக்கும்போதே
அந்த மொத்தக் காட்சியையும் இந்தக் கண்கள் மாத்திவிடும் வலிமை வாய்ந்தவை. அதுல முதல்ல
எள்ளல்னா என்னன்னு என் இளவயதிலேயே பாடம் போதித்தவர் பானுமதிம்மாதான்.
அப்பா என்னா பவர்ஃபுல்
பார்வை. மனுஷன் யாராயிருந்தாலும் அந்த எள்ளல் முன்னாடி ஒண்ணுமில்ல. ஆனா முகம் மட்டும்
க்ளாஸ்கோ பேபி மாதிரியே இருக்கும். எப்பிடிம்மா இப்பிடி J
குதிரையில் செல்லும்போதும்
அலட்சியப் பார்வை. சண்டையாகட்டும், காதலாகட்டும் எல்லாத்துக்குமே எள்ளலும் துள்ளலும்தான்.
ரெண்டாவதா நான்
ரசிக்கும் கண்களும் எள்ளலும் கோவை சரளாவினுடையது. இவர் பல படங்களில் வடிவேலுவுடன் நடித்திருந்தாலும்
அந்தக் குறிப்பிட்ட படம் பெயர் ஞாபகம் வரல.
ஒரு சாராயக் கடையில்
வடிவேலு அலப்பறை செய்வார். குடிசை போன்ற இடத்தில் ஒரு கடை. அங்கே ஊறுகாய், தின்பண்டங்கள்
விற்க கூடை வைத்து இரண்டு மூன்று பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.
