எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கடனில் ஆழ்த்தும் நுகர்வுக் கலாச்சாரம்.

கடனில் ஆழ்த்தும் நுகர்வு கலாச்சாரம்
தொலைக்காட்சியில் பெண்கள் ஃபாஷன் டிவியில் வருவதுபோல் புடவை கட்டி வரிசையாக நடந்துகொண்டே இருக்கிறார்கள். “ அடி இந்தச் சேலைதான். இதுவும் நல்லா இருக்கு. அட இதுவும் நல்லா இருக்கு “ எனச் சொல்ல மகள் உடனே அந்தத் தொலைபேசி எண்ணுக்கு புடவைகள் எண்ணைக் குறிப்பிட்டு எஸ் எம் எஸ் கொடுக்கிறார். அடுத்த நாளே பார்சல் வருகிறது. பணம் கொடுத்து வாங்கிப் பார்த்தால் எல்லாம் கண்ணை உறுத்தும் நிறங்களில் உயரம் குறைவான சேலைகள்.
”என்னடி இது ஆயிரம் ரூவாயையும் முழுங்கிட்டானா.. ” ”ஆயிரம் ரூவாய்க்கு அஞ்சு சேலைன்னு நீதான வாங்கச் சொன்ன “ மகள் அம்மாவிடம் முறைக்கிறார். தான் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்று இதை அம்மா புலம்ப அந்த வீட்டுக்காரம்மாவோ ”அதையேன் கேக்குறீங்க மல்லிகாக்கா. வாட்ஸப்புல என் ஃப்ரெண்டு ஒருத்தி சேலை விக்கிறேன்னு படம் அனுப்புனா. பாங்குல அவ அக்கவுண்ட்ல பணம்போட சொன்னா. படத்துல வயலட் கலர்ல இருந்தது வந்ததும் பார்த்தா ப்ளூ கலரு. ஃபோட்டோவுல அப்பிடித்தாம் இருக்கும்னுட்டா. அதே கலர்ல என்கிட்ட பல சேலை இருக்கு. சொளையா மூவாயிரம் ரூபா போச்சு “ என்று இருவரும் அலுத்துக் கொண்டிருக்கும் வேளையில் “ அம்மா கூரியர் “ என்ற சத்தம்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

இராம கீதை - ஒரு பார்வை.


இராம கீதை – ஒரு பார்வை.

பகவத்கீதை படித்திருக்கிறோம். அதென்ன இராம கீதை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இராமன் உதாரபுருஷனாய் வாழ்ந்து காட்டியதே இராம கீதை. அப்படி லட்சியபுருஷனாய் வாழ்ந்து வரும்போது உறவுடையோருக்கு, உறவு கொண்டோருக்கு ஏன் பகைவருக்குமே வழங்கியதுதான் இராம கீதை.

உரையாடலே உபதேசமாகக் கூறப்பட்டுள்ளதனால் இது இராமோபதேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பகவத்கீதையின் சுலோகங்களுடன் இராமனின் மொழியாடலும் ஒப்புமை சொல்லப்பட்டுள்ளது இதில். செயல், கடமை, கடவுள் ஆகியன பற்றிய விளக்கங்கள் அற்புதம்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்

நமது மண்வாசம் மஞ்சளும் குங்குமமும் கேள்வி பதில்கள்
1.தண்ணீரில் கோலம் போடப் பயன்படுவது எது ?
ஃப்ரெஞ்ச் சாக் பவுடர்
2. அத்தப்பூக் கோலம் எங்கே போடப்படுகிறது ?
கேரளாவில் -  திருஓணம் திருவிழாவில்.
3. ஸைமோதெரஃபி என்றால் என்ன ?
கோலங்களைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதியையும் குணப்படுத்தும் சிகிச்சை.
4. அரிக்குலோதெரபி என்றால் என்ன?
காதை மையமாக வைத்து அக்குபங்க்சர் முறையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு அரிக்குலோதெரபி என்று பெயர்.

புதன், 5 பிப்ரவரி, 2020

சூல் – ஒரு பார்வை

சூல் – ஒரு பார்வை

சூல்

இந்த நூலின் கதாநாயகன் கதாநாயகி எல்லாம் கண்மாய்தான். கம்பர் சரயூ நதியைத் தெய்வமாகப் புனைந்து பாடிய பாடல்கள்போல் இந்தக் கண்மாயும் தெய்வதத் தன்மை பெறுகிறது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல் கண்மாய் வரண்டதும் அனைவரின் வாழ்வும் வரண்டு போய்க்கொண்டே இருக்கிறது என்பதைக் கறாராகப் பதிய வைத்த சுற்றுச்சூழல் நாவல் இது

பழங்கதைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், வரலாறு, அரச குடும்பம், கிராமத்து வாழ்வியல், வழிபாடுகள் அனைத்தும் கருக்கொண்டது.  யதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளது.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர். தினமலர் சிறுவர்மலர் - 50.

தங்க வட்டிலை விட்டெறிந்த ஸ்ரீவத்சாங்கர்


தன்னிடம் இருக்கும் வேண்டாத குப்பைகளைக் கூட தூரப் போடாமல் சேர்த்து வைத்துக் கொண்டிருப்போர் பலர். ஆனால் தங்கத்தால் ஆன வட்டிலைக் கூட வேண்டாம் என்று விட்டெறிந்தார் ஒருவர். தன்னைச் செருக்கு ஆக்கிரமித்துவிடக் கூடாதே என்பதற்காக தன் சொத்து முழுவதையும் தானம் வழங்கிய தனவந்தர். அவர் யார் ? ஏன் அப்படிச் செய்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கூரம் என்ற இடத்தில் பிறந்தவர் கூரேசர். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவி பெயர் ஆண்டாள். மனமொத்த தம்பதிகள் இருவரும். செல்வந்தரான இவர் தினமும் அன்னதானம் செய்து வந்தார். எல்லா நாட்களிலும் எல்லா வேளைகளிலும் இவர் இல்லத்துக்கு வரும் அடியவர்களுக்கு உணவிடுவதையே தன் பெரும் பேறாகக் கொண்டிருந்தார்.
இவரது செல்வத்தையும் அன்னதானத்தையும் பார்த்து ஊரார் பிரமித்தார்கள். ”குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பார்கள். இந்தக் கூரேசர் தன் சொத்தை எல்லாம் அன்னதானத்திலேயே கரைக்கிறார். துளிக்கூடக் கரையக் காணோம். இவர் போல் சிறந்த அன்னதாதா யாருளார் ? “ என்று அனைவரும் சிலாகிக்கிறார்கள்.