இராம கீதை – ஒரு
பார்வை.
பகவத்கீதை படித்திருக்கிறோம்.
அதென்ன இராம கீதை. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்ததே பகவத் கீதை. இராமன் உதாரபுருஷனாய் வாழ்ந்து
காட்டியதே இராம கீதை. அப்படி லட்சியபுருஷனாய் வாழ்ந்து வரும்போது உறவுடையோருக்கு, உறவு
கொண்டோருக்கு ஏன் பகைவருக்குமே வழங்கியதுதான் இராம கீதை.
உரையாடலே உபதேசமாகக்
கூறப்பட்டுள்ளதனால் இது இராமோபதேசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. பகவத்கீதையின் சுலோகங்களுடன்
இராமனின் மொழியாடலும் ஒப்புமை சொல்லப்பட்டுள்ளது இதில். செயல், கடமை, கடவுள் ஆகியன
பற்றிய விளக்கங்கள் அற்புதம்.
