எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 அக்டோபர், 2019

ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS.

பெல்ஜியம் ப்ரஸ்ஸில்ஸுக்கு யூரோப் டூர் சென்றிருந்தபோது சென்றோம்.

லண்டனில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக நாங்கள் ஜெர்மனியில் இருந்து ப்ரஸ்ஸில்ஸுக்குச் சென்று ஸ்டார் டூர்ஸ் கோச்சில் ஏறிக்கொண்டோம்.

மிக அருமையான ஊர். ரயில்வே ஸ்டேஷனையே காணக் கண்கோடி வேண்டும். இது ஒரு பக்க லான் தான். தரை முழுவதும் பச்சையும் மஞ்சளும் கட்டமிட்டிருக்க ஒரு பக்க சுவரில் பச்சையும் மறுபக்க சுவரில் சந்தன மஞ்சளும் என்று அமர்க்களம். இப்புறம் பார்த்தால் அவள் பச்சைக்கிளி அப்புறம் பார்த்தால் அவள் மஞ்சள் காட்டு மைனா.
இங்கே உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் காணக் கண்கோடி வேண்டும்.  அவ்வளவு அழகு.



இது ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மெக்டோனால்ட் கடையின் பக்கம் எடுத்தது.

மேனக்கன் பிஸ் ( MANNEKEN PIS ) என்பது அங்கே உள்ள ஒரு அழகான குட்டிப் பையனின் வெண்கலச் சிற்பம் . இவன் சிறுநீர் கழிப்பது போன்ற இந்தக் குட்டிச் சிற்பத்தைக் காண ( அந்தக்கால ஃபவுண்டன் தொழில்நுட்பம் ) கொள்ளைக் கூட்டம். எங்களுக்கோ வெகு தூரம் நடந்து இதைப்பார்க்கத்தானா வந்தோம் என்று ஆகிவிட்டது :) இது இவர்களின் நகைச்சுவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறதாம். நல்ல நகைச்சுவை போங்க. :)

இந்த சிலை  1400 இல் இருந்து இருக்குன்னு ஒரு ஓவியத்தை வைச்சுச் சொல்றாங்க. அது குடிதண்ணீர் வழக்கும் ஃபவுண்டனா உபயோகமாச்சாம். அதுக்கப்புறம் 1600 களில் இது வெண்கலச் சிலையா மாத்தப்பட்டுச்சாம். இப்ப இருக்கும் இந்தச் சிலை 1770 இல் வைக்கப்பட்டதாம். 1965 இல் மாத்தப்பட்டுள்ள இப்போதிருக்கும் சிலையை வடிவமைச்சவர் ஜெரோம் டுக்குஸ்நாய் தெ எல்டர் என்ற சிற்பி.

இந்தச் சிலைக்கு விதம் விதமா காஸ்ட்யூம் எல்லாம் போட்டு அழகு வேற பார்த்திருக்காங்க வருடா வருடம் :) இதப்பார்த்து ஜப்பான் போன்ற நாடுகளிலும் இதுமாதிரி சிலைகளை நிறுவி இருக்காங்க.

எங்க திருமணத்தின் போது சூ சூ பாய் என்று இதே போல் ஒரு பொம்மையை குழந்தைகளுக்கான சாமான்களில் பரப்பி இருந்தாங்க. அந்த ப்ளாஸ்டிக் பொம்மை நாற்புறமும் மூடப்பட்ட ஒரு கதவுக்குள் நிற்கும். ஒரு கதவை திறந்தால் அது திரும்பி சூ சூ போகும். அதைப்பார்த்து அனைவரும் சிரிப்பார்கள். கீழே நீர் நிரப்ப ஒரு குட்டி தொட்டியும் உண்டு அச்சிலையின் கீழ். கதவைத் திறந்ததும் அந்த ப்ரஷரில் அது சிறுநீர் அடிக்கும். இத இப்பிடி வேற உலகமெல்லாம் ஃபேமஸ் ஆக்கி வைச்சிருக்காங்க.

இதனருகே இருந்த ஒரு வேஃபில் ஷாப்பில் படு கூட்டம். முப்பது நாற்பது விதமாக வைத்திருந்த வேஃபில்ஸை நாங்களும் வாங்கிச் சாப்பிட்டோம். :)


பத்துமணிக்கே விதம் விதமான உணவு வகைகள் க்யூ கட்டி நிக்குது. விண்டோ வழியா பார்த்துட்டு வந்துட்டோம். விண்டோ ஷாப்பிங். எதுல என்ன இருக்குமோன்னு பயம். :)

இங்கே இந்த ஜட்கா வண்டிகள் பிரசித்தம். இதில் சவாரி செய்யும் அளவு நேரம் எல்லாம் இல்லை.

இங்க க்ராண்ட் பேலஸ் எனப்படும் மியூசியம். ஏதோ ரிப்பேர் வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் மூடி இருந்தது. இத ராயல் ஸ்கொயர்னும் அழைச்சிருக்காங்க.

இது ரூ டி செனெ/இக்ஸ்ராட் என்னும் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருக்கு. ஆற அமரப் பார்க்க வேண்டிய இடம்.

இது ப்ரஸ்ஸில்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். இது உலகத்தின் ஏழாவது ஃபினான்ஷியல் செண்டர்.


ம்யூசியத்தின் சுவர்களிலும் சிற்பங்கள் வெகு அழகு. சுற்றிலும் கடைகள் கடைகள் கடைகள்.

ப்ரஸ்ஸில்ஸ் பார்லிமெண்ட் பில்டிங். லக்ஸம்பர்க் ஸ்கொயர் என்ற இடம் இது.

கொடிகள் பறக்கும் இதை ப்ளாஜே பில்டிங்குன்னு சொல்றாங்க.


இதன் பக்கம்தான் ப்ரஸ்ஸில்ஸ் வேர்ல்ட் ட்ரேட் செண்டர் , அட்டாமியம், மினி யூரோப் எல்லாம் இருக்கு.


இந்த அட்டாமியம் 1958 இல் உலக எக்ஸ்போ நடந்த போது அமைக்கப்பட்டது.

இது 103 மீட்டர் ( 338 அடி ) உயரமுள்ள மாடர்ன் அமைப்பு. இது ஹைஸல் ப்ளேட்டோ என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கு. இதில் ஒன்பது கோள உருண்டைகள் சமமான தூரத்தில் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கு. எந்தப்பக்கம் பார்த்தாலும் ஒன்பதும் தெரிவது சிறப்பு. ஆண்ட்ரே வாட்டர்கெயின் என்ற அறிவியலாளர் இதை வடிவமைச்சிருக்கார். ஆண்ட்ரே & ஜீன் போலக் ஆகிய ஆர்கிடெக்ட்களும் இதன் வடிவமைப்பில் உதவி இருக்காங்க.


இதன்பக்கத்தில் அமைந்திருக்கும் மினி யூரோப்பில் ஐரோப்பாவில் உள்ள அனைத்து சிறப்பான கட்டிடங்களின் மினியேச்சர்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


அட்டாமியம் நெருக்கத்தில்.

இந்த ஸ்பியர்ஸ் எனப்படும் கோளங்கள் 3 மீட்டர் நீளக் குழாய்களால் நடுமையக் குழாயோடு இணைக்கப்பட்டிருக்கு. இதன் 8 கோளங்களிலும் ம்யூசியமாகவும் கண்காட்சியாகவும்  வைக்கப்பட்டிருக்கு. உயர இருக்கும் கோளத்தில் ரெஸ்டாரெண்ட். இதிலிருந்து ப்ரஸ்ஸில்ஸ் நகரின் அழகைப் பார்த்து வியக்கலாம்.

அட்டாமியத்தின் அருகில் அமர்ந்து ஒரு க்ளிக்.  ஆட்டம்களின் இணைப்பை விளக்கும் அழகான கட்டிடக் கலை. 


மீண்டும் ஃப்ளாஜே பில்டிங்குக்குப் போவோம்.

இங்கேயிருந்துதான் ஸ்டார் டூர்ஸ் பிக்கப் பாயிண்ட். எனவே அங்கே இருந்த செயற்கைத் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னங்கள். அதன் கரையோரப் பூக்களோடு ஒரு க்ளிக் எடுத்துட்டுப் போவோம்.

இன்னும் இங்கே பார்க்க வேண்டிய இடம் ஏராளம் இருக்கு.

மிக அழகான நகரம் ப்ரிஸ்ஸில்ஸ். இதை யூரோப் போனா பார்க்க மறக்காதீங்க.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.



















4 கருத்துகள்:

  1. அருமையான காட்சிகள் ...உங்கள் வழியாக யூரோப் டூர் எங்களுக்கும் ...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் உலகம் சுற்றும் வாலிபி .....!

    பதிலளிநீக்கு
  3. நன்றி அனு :)

    நன்றி பாலா சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...