எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 அக்டோபர், 2019

வாசகசாலை: காரைக்குடி இலக்கிய சந்திப்பு கலந்துரையாடலில் எனது சிறுகதை.

#வாசகசாலை வழங்கும் "காரைக்குடி இலக்கியச் சந்திப்பு" மாதாந்திரத் தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில், இன்று காலை நடைபெறவுள்ள பதினொன்றாவது நிகழ்விற்கான அழைப்பிதழை உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம்.
இந்தமுறை நிகழ்வில் உரையாட உள்ள கதைகளுக்கான சுட்டிகள்:
தேனம்மை லெக்ஷ்மணனின் "சுப் சிப் ஆனந்தம்":
http://www.vasagasalai.com/sup-chip-anandham
சுரேஷ் பிரதீப்பின் "446 A":
http://vallinam.com.my/version2/?p=5224
ஈவண்ட் லிங்க்:
வாய்ப்புள்ள காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. மகிழ்ச்சி..!


காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். நன்றி கற்பகவள்ளி, வாசகசாலை, இளமதி. ஆங்கிலக் கலப்பு அதிகம் இருப்பதால் அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்திய வினைதீர்த்தான் அண்ணன் அவர்கட்கு நன்றி.

நான் பெங்களூரில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் உண்டு.
சுப் சிப் ஆனந்தம் என்ற என்னுடைய சிறுகதை பற்றி உரையாடிய இளமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி


பார்வையாளர்கள்.

வினைதீர்த்தான் அண்ணன் அவர்களின் கருத்துப் பகிர்வு.

கற்பகவள்ளி அவர்களின் முன்னுரையும் நன்றியுரையும்.

இதில் ஆச்சர்யப்படவும் மகிழவும் வைத்த விஷயம் என்னவென்றால் என் அம்மா, அப்பா, அழகப்ப சித்தப்பா, வள்ளியப்ப அய்த்தான் என்று எங்கள் குடும்பத்தினர் நான் சொல்லாதபோதும் தானாகக் கலந்து கொண்டு வீடியோவும் ஃபோட்டோவும் அனுப்பியதுதான்.


கலந்து கொண்டு கருத்துப் பகிர்வு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்.அம்மா இளமதி அவர்கள் பேசியதை வீடியோ எடுத்து அனுப்பி இருந்தார்கள்.முழுமையாகக் கேட்க முடியவில்லை என்றாலும் கிடைத்ததே அமிர்தம்தான்.  மீண்டும் நன்றி இளமதி, கற்பகவள்ளி, வாசகசாலை. என் குடும்பத்தினருக்கும் என் அம்மாவுக்கும் கூட நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...