எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 அக்டோபர், 2019

ஓம் சாயி சரணம்


அற்புதத் திருவே
ஆனந்தத் திருவே
ஓம் சாயி சரணம்

பொற்பதத் திருவே
புண்ணியத் திருவே
ஓம் சாயி சரணம்


நீரினை ஊற்றி
விளக்கினை எரித்தாய்
ஓம் சாயி சரணம்

விறகினை எரித்து
உதியினைத் தந்தாய்
ஓம் சாயி சரணம்.

அணையா விளக்கே
தணியா ஒளியே
ஓம் சாயி சரணம்

பணிந்தால் என்றும்
துணையாய் வருவாய்
ஓம் சாயி சரணம்

நினைக்கும்போதே
நோயினைத் தீர்ப்பாய்
ஓம் சாயி சரணம்

நெறிகொண்ட வாழ்க்கை
நித்யமும் அருள்வாய்
ஓம் சாயி சரணம்

புறம் பேசுவதும்
பொய்மையும் தடுப்பாய்
ஓம் சாயி சரணம்

அறநெறி கூறி
ஆட்கொண்டருள்வாய்
ஓம் சாயி சரணம்

ஒன்பதுவித பக்தி
ஒழுகிட உரைப்பாய்
ஓம் சாயி சரணம்

தன்பதம் சேர்ந்தார்
துயரம் தீர்ப்பாய்
ஓம் சாயி சரணம்

உயிர்களுக்கெல்லாம்
உணவு தந்தருள்வாய்
ஓம் சாயி சரணம்

இருமதம் இணைத்து
இன்னருள் புரிந்தாய்
ஓம் சாயி சரணம்

மனமதைப் படித்து
குணமது செய்வாய்
ஓம் சாயி சரணம்

விரும்பும் கடவுளாய்
தரிசனம் தருவாய்
ஓம் சாயி சரணம்

4 கருத்துகள்:

 1. அறநெறி கூறி
  ஆட்கொண்டருள்வாய்
  ஓம் சாயி சரணம்

  பதிலளிநீக்கு
 2. நன்று.

  அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி கோமதி மேம்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...