எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 31 ஜூலை, 2013
திங்கள், 29 ஜூலை, 2013
தடாகத்தில் பூத்த தாமரை - 10
அதை நான் இங்கு அப்படியே பகிர்ந்துள்ளேன். எம்மை ஊக்குவிக்கும் கலைமகள் சகோதரிக்கும் , தடாகம் இலக்கிய வட்டத்துக்கும் அதன் செயலாளர் சகோதரர் ரமலான் தீனுக்கும் நன்றி.
///தாமரை-10
நான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மைலெக்ஷ்மணன்
இவர் , படித்தது இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)
தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்
சனி, 27 ஜூலை, 2013
துபாய் ஹைக்கூ சிறப்பிதழ். தமிழ்த் தேர்.
வியாழன், 25 ஜூலை, 2013
குற்றமும் தண்டனையும் (CRIME AND PUNISHMENT) எனது பார்வையில்.
சின்ன வயதில் மிக்கேல் ஷோலகோவ் கதைகளை (தமிழ் மொழிபெயர்ப்பு)என் அம்மா வாங்கித்தந்து படித்திருக்கிறேன்.உலகத்தைச் சுற்றிவரும் ஒரு சிறுவனின் கதையையும் படித்திருக்கிறேன்.அதற்குப்பின்
புதன், 24 ஜூலை, 2013
செவ்வாய், 23 ஜூலை, 2013
யாரோ இருவருக்குள்..
நிகழ்ந்தபடி இருக்கிறது சண்டை.
வேடிக்கை பார்த்தபடி
நகர்கிறார்கள் அனைவரும்.
சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
சிலர் தலை துண்டிக்கப்படுகிறது.
சிலர் வெடிவைத்துத் தகர்க்கப்படுகிறார்கள்.
சிலர் ராஜ்யக் கைதிகளாய்
சிலர் பிணைக் கைதிகளாய்
திங்கள், 22 ஜூலை, 2013
வெள்ளி, 19 ஜூலை, 2013
மனசு குறும்படம் எனது பார்வையில்
உணவு தானம் வழங்கும் அனைவரும் தாம் தேவையானவருக்கு வழங்குகிறோமா இல்லையா என சிந்திப்பதில்லை என நச் சென்று சொல்லி இருக்கும் குறும்படம் இது.
பசிக்காக பிரியாணி வாங்கி சாப்பிடும் ரவிக்குமார் அதைப் பசியோடு இருக்கும் இன்னொருவருக்குத் தர விரும்புகிறார்.தன் நண்பனோடு பைக்கில் பயணித்து ஒவ்வொருவராகக் கேட்க அவர்கள் கூறும் பதில்கள் வித்யாசம். ஒருவர் பணம் கேட்கிறார். ஒருவர் இவர்களையே உண்ண அழைக்கிறார். ஒரு பிச்சைக்காரர் உனக்கு வேணுமா பிரியாணி இதோ எடுத்துக்கோ என்கிறார். ஒரு கட்டிடத் தொழிலாளி நான் என்ன பிச்சைக்காரனா என்கிறார்.
வியாழன், 18 ஜூலை, 2013
தாய்மொழிப் பயன்பாடு பற்றி தினகரன் வசந்தத்தில் கருத்து..
விளம்பரங்களில் எழுத்துப் பிழை அதிகம். ”சீமாட்டி, புதிய பொழிவுடன் ”
என்று எழுதுகிறார்கள். விளம்பரப்பலகைகளைப் பார்த்தாலே ஆத்திரம்
ஏற்படுகிறது. 80 சதவிகிதம் எழுத்துப் பிழைகளோடு இருக்கின்றன.
புதன், 17 ஜூலை, 2013
நன்றி ஊடகம்.
தேனம்மை லக்ஷ்மணன், தமிழ் இணைய எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது படைப்புகள் பல்வேறு இணையதள பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. சமூக சிந்தினைக் கொண்ட இவரது எழுத்துக்கள் வாசிப்பவரை தன் வசமாக்கும். இவர் சும்மா என்கிற வலைப்பூவும, சமையல் கலைக்கு ஒன்று என இரு வலைப்பூ நடத்தி வருகிறார்.
ஊடகம்: நீங்கள் எழுத்து துறைக்குள் நுழைந்தது தற்செயலாகவா ? இல்லை எழுத்து மீது உங்கள் ஆர்வம் காரணமாகவா ?
தேனம்மை லக்ஷ்மணன்: எழுத்து என்பது கல்லூரிப் பருவத்திலேயே இருந்தது. 2008 அக்டோபர் மாதம்., பாரதி பதிப்பகத்தின் குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு புத்தகம் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக குமுதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.. அதை எழுதியவர் என்னுடைய கல்லூரிப் பேராசிரியை திருமதி எம் ஏ சுசீலாம்மா அவர்கள்.. புது தில்லியில் இருக்கும் அவர்களை தொலைபேசியில் வாழ்த்தியபோது வலைத்தளத்தில் எழுதி வருவதைக் குறிப்பிட்டார்கள்..பின்னர் நானும் அவர்கள் உதவியால் வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன்.
செவ்வாய், 16 ஜூலை, 2013
தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை.
அம்மாவை விமர்சிக்கலாமா.. உள்ளும் புறமும் அறிந்த அம்மாவாய் இருப்பின் விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. பிடித்தது பிடிக்காதது எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தாலும் மகளாய் இங்கே ரசனைப் பார்வை மட்டுமே மிச்சமிருக்கிறது.. அம்மாக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட தேவதைகள் என்பது இன்னொரு முறை நிரூபணமாகி இருக்கிறது.
திங்கள், 15 ஜூலை, 2013
கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கவிதை.. புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா.
புஜ்ஜுவின் அப்பா
என்றே அழைக்கப்படுகிறோம்
அக்கம் பக்கத்தவர்களால்
அவரவர்க்கெனப் பெயரிருந்தும்
புஜ்ஜுவின் தோழி
புஜ்ஜுவின் பூனை
எல்லாம் அவள் சார்ந்தே
குறிப்பிடுகிறோம்
நாமும் பெயரற்று..
புதன், 10 ஜூலை, 2013
நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.
செவ்வாய், 9 ஜூலை, 2013
திங்கள், 8 ஜூலை, 2013
பாலியல் பலாத்காரமும் அமில வீச்சும்..
வியாழன், 4 ஜூலை, 2013
பணம் செய்ய விரும்பு...
பணம் செய்ய விரும்பு...
அறம் செய விரும்பு என சொல்லி இருக்காங்க பெரியவங்க.. ஆனா இந்த கார்ப்பரேட் உலகத்துல நாம பணம் செய விரும்பணும்னு நாணயம் நாகப்பனும் புகழேந்தியும் சொல்றாங்க. நாணயம் நாகப்பன் சென்னை பங்குச் சந்தை இயக்குநர். புகழேந்தி பொறியாளர்.
ஒரு நாட்டோட பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் பங்குச் சந்தை முக்கியமானது.
தனி மனிதன் உயர்வதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் கூட பொருளாதாரம் இன்றியமையாதது.
பணத்தைப் பணத்தால் பெருக்கும் உபாயத்தை இதில் சொல்லி இருக்காங்க. நம்ம நாட்டுல இரண்டு சதவீதம் மக்கள்தான் பங்குச் சந்தையில் ஈடுபட்டு இருக்காங்கன்னு சொல்லி இருக்காங்க இவங்க.
புதன், 3 ஜூலை, 2013
சாலைகளைப் பின்தொடராதீர்கள்...
சாலைகளைத் துரத்தத் துவங்குகிறீர்கள்
உங்கள் அந்தரங்கத்தை மறைக்கும்
லங்கோடு போல அது நீண்டு கிடக்கிறது.
அதே பாதையில் சென்று சுற்றிச் சுற்றி
உங்களை முடிந்துகொள்கிறீர்கள்.
இரத்தினக் கம்பளங்களில்., சிவப்பு விரிப்புகளில்
மையல் கொள்கிறீர்கள்.
பூக்களும் முட்களும் புற்களும் கொண்ட
பாதையைத் தவிர்க்கிறீர்கள்.
செவ்வாய், 2 ஜூலை, 2013
நன்றி வீடு திரும்பல் மோகன்குமார்.
கேள்வி:தொடர்ந்து கவிதை எழுதுவது எப்படி சாத்தியமாகிறது? அத்தகைய மனதை தொடர்ந்து தக்க வைப்பது கடினமாயிற்றே?
பதிவர் தேனம்மை லட்சுமணன்கவிதை என்பது ஒரு சம்பவம் போல என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சி., துக்கம்., சோகம்., விரக்தி, வெறுப்பு., அசூயை., கோபம்., வீரம்., தன்னம்பிக்கை ., என எல்லா நிலைகளிலும் சில உணர்வுகள் கவிதைவரிகளாய்ப் பிரசவிக்கின்றன.




