எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள். தினமலர். சிறுவர்மலர் - 37.


புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள்.

எவ்வளவுதான் கற்றறிந்திருந்தாலும் சமயோஜிதமான நடவடிக்கையால் நாம் நமக்கு வரும் இடர்களைக் களைய முடியும். அப்படித்தான் சாவித்ரி என்னும் பெண் தனக்கு வந்த கஷ்டத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் ஜெயித்தாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மத்ராபுரி என்னும் நாட்டை அஸ்வபதி என்னும் மன்னர் ஆண்டு வந்தார். நெடுநாளாகக் குழந்தைப்பேறில்லாமல் இருந்த அவர் பல யாகங்கள் பூஜைகள் செய்ததன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சாவித்ரி என்று பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார்.

பெண்குழந்தை என்று எண்ணாமல் நாட்டின் இளவரசியாக அவளுக்கு சகல உரிமைகளையும் கொடுத்திருந்தார். எனவே அவள் தோழிகளுடன் நகர் உலா வருவாள். ஒருமுறை அவர்கள் தங்கள் நகர் உலாவிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள். கானகம் ஆரம்பமாகிவிட்டது.

அக்கானகத்தில் ஒரு அழகான இளைஞன் தன் கண்ணிழந்த பெற்றோருக்குச் சேவை செய்வதைப் பார்த்தாள். அவனுடைய பணிவும் அன்பும் தொண்டுள்ளமும் சாவித்ரியைக் கவர்ந்தது. அவன் சாளுக்கிய தேசத்து அரசன்  சத்யவான் எனவும் பகைவர்களுடன் நடந்த போரில் நாட்டைவிட்டு வந்துவிட்டார்கள் எனவும் அறிந்தாள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

யார் உயர்ந்தவர் ? தினமலர் சிறுவர்மலர் - 36.

நதிகள் சொல்லித்தந்த பாடம்.

யார் உயர்ந்தவர்?

மனிதர்களுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி பொறாமை ஏற்படுவதுண்டு. ஆனால் ஒருமுறை நதிகளுக்குள்ளே யார் உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதை யாரிடம் சொல்லித் தீர்வு காணலாம் என யோசித்தன. அந்த நேரம் பார்த்து திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் ஒரு புஷ்கரமேளா நடைபெறவிருந்தது.

அனைத்து நதிகளும் அத்திருக்கழுக்குன்றத்தில் கோயில் கொண்டிருக்கும் வேதபுரீஸ்வரரிடம் சென்று யார் உயர்ந்தவர் என்பதைக் கேட்கலாம் என முடிவு செய்தன. வாருங்கள் குழந்தைகளே நாமும் சென்று யார் உயர்ந்தவர் என்று வேதபுரீஸ்வரர் கூறினார் எனப் பார்ப்போம்.

புதன், 19 செப்டம்பர், 2018

கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். தினமலர் சிறுவர்மலர் - 35.


கோவர்த்தன வில்லை ஒடித்த விதுரர். :-

சீதையை மணக்க ராமபிரான் வில்லை ஒடித்தது தெரியும். ஆனால் மகாபாரதத்தில் விதுரர் வில்லை ஒடித்தார். அது எதற்கென்று தெரியுமா.? அதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் குழந்தைகளே.

அஸ்தினாபுர அரண்மனை. அரசிளங்குமரிகளான அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் புத்திரர்கள் திருதராஷ்டிரனும் பாண்டுவும் ஆவார்கள். அவர்களின் தம்பி விதுரன். ஆனால் அவரது தாயார் ஒரு பணிப்பெண். அதனால் அவருக்கு நாடாளும் யோகம் கிட்டவில்லை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சித்தப்பாவான அவர் தான் வகுத்த விதுரநீதியைக் கூறி அவர்களை நெறிப்படுத்தி வந்தார்.

விதுரர் சிறந்த வில்வித்தை வீரர். சிறந்த விஷ்ணு பக்தரான விதுரருக்கு விஷ்ணு கோவர்த்தன் என்ற வில்லைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வில் அர்ஜுனனின் காண்டீபம் என்னும் வில்லை விட வலிமை வாய்ந்தது. அதற்கு இணையான சக்தி கொண்ட வில் எதுவுமே கிடையாது.  விதுரர் நேர்மை தவறாதவர். வாக்கும் தவறமாட்டார். பொறுமையும் பண்பும் மிக்கவர்.

பாண்டுவின் புத்திரர்களான பாண்டவர்களுக்கு அரசாளும் உரிமையை மறுத்தார்கள் திருதராஷ்டிரனும் கௌரவர்களும். அவர்களுக்காகப் பரிந்து பேசிவந்தார் விதுரர்.

காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.

1041. சிவபதவி/ சிவபதவி வண்டி - ஒருவர் இறந்ததும் அவர் சிவபதவி ( சிவனின் திருவடி ) அடைந்தார் என்று கூறுவது வழக்கம். சிவபதவி வண்டி என்பது அவரது பூத உடலை மயானம்/ மின் மயானம் / சுடுகாடு / இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் வண்டி. 

1042. கேதம் - மரணம், துக்கம், சாவு, இறப்பு, இழவு, ஈமக் கிரியை. 

1043. துட்டி, துஷ்டி - துக்கம், இறப்பு, விபத்தின் மூலம் மரணம் போன்ற துக்க நிகழ்வு. 

1044. சாரித்தல் - துக்கம் விசாரித்தல், இழவுகார வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிப்பது. போகும்போது சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ( அதாவது போயிட்டு வரேன் என்றோ வரேன் என்றோ சொல்லிக் கொண்டு போக மாட்டார்கள். ) சொல்லிக் கொள்ளாமல் போவார்கள் அல்லது போறேன் என்று சொல்லிப் போவார்கள். ( அடுத்தும் அவர்கள் வீட்டில் துக்கம் திரும்ப வந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணம் ) .

1045. பதனப்படுத்துதல் - இப்போது எல்லாம் ஐஸ் பாக்ஸ் வந்துவிட்டது. அப்போது எல்லாம் இறப்பு நிகழ்ந்ததும் குளிப்பாட்டி விபூதி பூசி சிவப்புத்துணியால் உடலைச் சுத்தி கை காலைக் கட்டி வைப்பார்கள். மகன் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் வர தாமதமாகும் என்றால் உள்ளுறுப்புகள் காற்று ஏறி ஊதிப்போகா வண்ணம் மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றைக் கொண்டு கிட்டித்து  நவதுவாரங்களை அடைப்பார்கள். கண்கள் மூடியிருக்க சந்தனம் வைத்து, காதிலும் மூக்கிலும் பஞ்சால் அடைப்பார்கள். சுற்றிலும் பன்னீர் தெளிப்பார்கள். சில இடங்களில் விராட்டியும் வைப்பதுண்டு. தெற்கில் தலைவைத்துப் படுக்க வைத்துத் தலைமாட்டில் ஒற்றை முகமாக குத்துவிளக்கை ஏற்றி வைப்பார்கள். 

1045. தண்டக்காரன் - இறப்பு நிகழ்வுகளின் போது இறப்புச் சடங்குகள் , ஈமக் கிரியைகள் செய்ய உதவுபவர். சங்கூதுதல், பாடை கட்டுதல், தலையில் எண்ணெய் சீயக்காய் தொட்டு வைக்கச் சொல்லுதல், குளிப்பாட்டுதல், பட்டம் சுத்தச் சொல்லுதல், பந்தகால் நடுதல், இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லுதல். 

திங்கள், 17 செப்டம்பர், 2018

பனகல் பார்க்கில் ஒரு பொடி நடை.

சிலஆண்டுகளுக்கு முன் காலையில்  கட்டாய வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. சென்னை டி நகர் , பி கே ஆரில் தங்கியிருந்தபோது பக்கத்தில் இருக்கும் பனகல் பார்க்கில் வாங்கிங் சென்று வந்தோம். ரொம்பப் புத்துணர்வா இருந்தது. இப்ப எல்லாம் மக்கள் ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மூத்த குடிமக்கள் அநேகர் அங்கே கான்வாஸ் ஷூ போட்டு வாக்கிங் போயிட்டு இருந்தாங்க. சிலர் உடற்பயிற்சி செய்துட்டு இருந்தாங்க. அங்கே வாக்கிங் செய்த்துட்டு வந்தப்புறம். காலை நேரப் புத்துணர்வு வெகு நேரம் நீடித்தது.

சுமார் ஒன்றேகால் கோடி ரூபாயில் 2009இல் இது புதுப்பிக்கப்பட்டிருக்கு. 3 பக்கமும் எண்ட்ரி ஆகலாம். நாலாபக்கமும் சாலைகள், சொல்லப்போனா ஆறு பக்கம் பெரிய சாலைகள் இருக்கு.

உஸ்மான் ரோடு, வெங்கட்ரமணா சாலை, ஜி என் செட்டி சாலை, தியாகராஜா சாலை, தெற்கு உஸ்மான் ரோடு, துரைசாமி சாலை என்று.

பரபரப்பான சென்னை மாநகரின் நடு மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவை உருவாக்கியவர் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சரா இருந்த பனகல் அரசர். அதுனால அவருக்கு அங்கே சிலை ஒண்ணு எழுப்பி இருக்காங்க. ( விவரத்தைத் தெலுகுல எழுதி இருக்காங்க.)


நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும்.