எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து  புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது.

புதன், 24 பிப்ரவரி, 2016

ஜெயங்கொண்டத்தில் ஜெயாம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

 ஜெயங்கொண்டத்தில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத வீரநாராயணப் பெருமாள் கோயிலில் நேற்று அம்மாவின் அறுபத்தெட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்குப் புடவை பரிசாக வழங்கப்பட்டது. 100 புடவைகள் இருக்கலாம். டோக்கன் வழங்கப்பட்டு சுமார் பத்துமணி அளவில் அவர்கள் அனைவரும் அங்கே மடைப்பள்ளி அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்கள்

சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அப்போது  நம் உறவினர்  விசாரித்தற்கு அங்கே அமர்ந்தால் டோக்கன் கொடுக்கப்பட்டு நமக்கும் புடவைகள் தரப்படும் என்றார் ஒருவர். விலைப்பட்டியலைப் பார்த்தோம் சுமார் 150 ரூபாய் புடவைகளும் அதோடு 50 ரூபாய் மதிப்புள்ள ரவிக்கைத் துணிகளும் பிணைக்கப்பட்டிருந்தன.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நம்பிக் கெட்டோம்.

அறையப்பட்டது நாங்களல்ல.
எங்கள் நம்பிக்கைகள்.

உண்ணும் உணவைப் புறக்கணிக்க வைத்தார்கள்
உச்சரித்த மொழியைப் புறந்தள்ள வைத்தார்கள்.
உடுப்பதையும் நடிப்பதையும் கற்றுக் கொண்டோம்
உறவுகளை ஒதுக்குவதில் பெருமை கொண்டோம்.


விதைகளைக் கொடுத்தார்கள்
உரங்களைக் கொடுத்தார்கள்
விஷங்களையும் வினைகளையும்
விலை கொடுத்து வாங்கிகொண்டோம்

சனி, 20 பிப்ரவரி, 2016

பிலாடெலி - PHILATELY - ALBUM -2,3. முக்கோணத் தபால் தலையும் தேசியத் தலைவர்களும்.

ஸ்டாம்பு கலெக்‌ஷனைத் துவங்க உந்துசக்தியாக இருந்தது எனது அம்மாவும் நாகு மாமாவும்தான். அவர்கள்தான் என் சின்ன மகனுக்கும் இதை அறிமுகப்படுத்தியது. :)

நாடுகள் வாரியாகத்தான் நாங்கள் அடுக்கி இருக்கின்றோம். ஆனால் பறவைகள், பூக்கள், ரயில், பழங்கள், நிகழ்வுகள், தேசியத் தலைவர்கள்  என ஒரு தீம் வைத்து ஸ்டாம்புகளைச் சேகரிப்பவர்களும் உண்டு. 

இனி ஆல்பம் 2, 3 இன் படங்கள். :) 




பங்ளாதேஷ் ,ஹங்கேரி நாட்டுத் தபால் தலைகள். சில சதுரத்திலும் இரு முனையிலும் செங்குத்தாய்ப் படங்கள். முக்கோணத் தபால் தலையும் கூட.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எங்கள் ப்ளாகில் பெண் பூக்கள் பற்றிய மதிப்புரை.


பெண் பூக்கள்

 



முள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.


அதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு.  பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..