எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

அரசியலில் பெண்களின் பங்கு.

அரசியலில் பெண்களின் பங்கு.


நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் நாடாளுமன்றத்தில் 9 சதமும் பாராளுமன்றத்தில் 11 சதமுமே பெண்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள். ஆனால் மக்கள் தொகையில் நாம் சரிபாதி இருக்கிறோம்.
பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்பிலிருந்து பொதுமக்களுக்கான களப்பணியில் இருக்கும் வரை எத்துறையில் பெண்கள் ஈடுபட்டாலும் அரசியல் என்றால் கொஞ்சம் பின்வாங்கவே செய்கின்றார்கள். சமூக சேவையில் ஈடுபடும் பெண்கள் கூட அரசியல் என்றால் தேர்தல் குளறுபடிகள், கொலைகள், அடியாட்கள் அராஜகம், சட்டமன்ற அமளி , பாராளுமன்ற ஒத்திவைப்பு, புறக்கணிப்பு போன்றவை பார்த்து ஒதுங்கி விடுகிறார்கள்.
பார்க்கப் போனால் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்து வந்தே இருந்திருக்கிறது என்றாலும் அது கணிசமான அளவு உயரவில்லை. அதியனை நேர்ப்படுத்திய ஔவை, ஜனகரின் அவையில் இருந்த கார்க்கி வாசக்னவி இவர்கள் மட்டுமல்ல, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மங்கையர்க்கரசியார், ஆகியோரும் கூட அரசாட்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்களே.

சனி, 30 மார்ச், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் கூட்டாக ஒரு சேமிப்பு.

இந்த வாரமும் திரு விவி எஸ் சார் உங்களுக்காக சேமிப்பு பற்றிக் கூறுகிறார்கள். 

போவோமா ஊர்கோலம் !

”வாங்க, அந்த வீட்டுக்குள்ள போய்ப் பார்க்கலாம்.  அதுவும் நம்ம வீடு மாதிரிதாங்க.  அங்க பாருங்க,  ஹால்ல லைட் போட்டே இருக்கு.   காலைல 7 மணிக்கே அணைச்சிருக்கலாம்.  இப்ப மணி 9.  ரெண்டு மணி நேரமா வேஸ்ட்டா எரிஞ்சிருக்கு.”

அதோ அங்க டைனிங் டேபிள்ல ஒரு bowl நெறைய ஃபுரூட்ஸ் இருக்கு.  ஆனா வாடிப் போய் இருக்கு.  ஒண்ணு நேத்தைக்கே யூஸ் பண்ணி இருக்கணும்.  இல்லேன்னா மக்கும் குப்பைய என்ன செய்யணும்மோ அதச் செய்யணும்.

இது மார்ச் மாசம்.  அடுத்த மாசம் ஸ்கூல் லீவ் உட்டுடுவாங்க.  பசங்களோட இந்த வருஷ புக்ஸ்-ஸ என்ன செய்யப் போறாங்க-ன்னு கேட்டுப் பாருங்க.  பழைய புக்ஸ் கடைல போடணும்ன்னு வெச்சிருக்கோம்ன்னு சொல்வாங்க.  ஆனா கடைக்குப் போகத்தான் நேரம் இருக்காது. 

இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதான்.  குறிப்பா வாய்ப்பகுதி பிய்ந்து போன பிளாஸ்டிக் குடங்கள்.  ஒரு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்றாவது இருக்கும்.  அதற்குக் காரணம் மொத்த குடமும் ஒரே அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.  வாய்ப்பகுதியைப் பிடித்தோ அல்லது அழுத்தியோ குடத்தைத் தூக்கும் போது அது பிய்ந்து கொள்கிறது.

வெள்ளி, 29 மார்ச், 2019

தேசாபும் தேமோரும்.

2121. தேசாப் என்றொரு படம் என் இரத்தநாளங்களைக் கொதிப்படையச் செய்தது. அதேபோல் சண்டைக்கோழி, டங்கல்.இதே போல் ஒரு பத்ரிக்கையின் வீடியோ பத்துநாட்களாக கோபம் உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.  அந்தப் பெண்ணின் குரலும் அந்தப் பையனின் அம்மாவின் புலம்பலும் கூட இம்சிக்கின்றன.

முகநூல் & வாட்ஸப்புக்கும் தணிக்கை தேவை.

2122. மௌனியை நினைத்துக் கொண்டேன் :)

நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். இங்கே ஒளிவீசிச் சுடரும் நட்சத்திரங்களாக. திகிலூட்டிய வால் நட்சத்திரங்களும் தோன்றுகின்றன. ஒன்றைத் தொட்டு ஒன்று என நினைவும் எழுத்தும்.. :)

வியாழன், 28 மார்ச், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

1161. பூச்சிபொட்டு - பூச்சிகள், சிறு வண்டுகள், பாம்பு, ஊர்வன.

1162. முட்டைச்சுவர் - சுவர் அமைக்கும்போது காரையுடன் முட்டையின் வெள்ளைக்கருவையும்  கருப்பட்டியையும் சேர்த்து அரைத்துப் பூசுவார்கள். அதனால் அவை பாலீஷ் போட்டதுபோல் இருக்கும் . வெள்ளை ( சுண்ணாம்பு ) அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

1163. அப்பைக்கி அப்ப - அப்போதைக்கு அப்போதே.

1164. சேயகொள்ள - திருமணம் செய்யக் கொள்ள, ஒருவேலையைச் செய்வது குறித்து மற்றும் உறவுகளுக்குள் பந்தம் கொள்வது.

1165. பொய்த்தாரேன், போயாறேன், வந்தாரோம் - பொய்த்தாரேன் - போய் வருகிறேன் , போயாறேன் - இதுவும் போய் வருகிறேன் என்று சொல்வதுதான். வந்தாரோம் - வந்துவிடுகிறோம் என உறுதி அளிப்பது.

1166. ஒருதடியா - ஒரு வழியாக, ஒரே தரமாக,

1167.சத்த - கொஞ்ச நேரம்.

1168. கடுசு - கடுமை கொண்டவரைக் குறிப்பிடுவது.  பொல்லாதவர்.

புதன், 27 மார்ச், 2019

அகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.

அகம்பாவம் தந்த அவமானம்
நமக்குக் கிடைக்கும் எந்த நன்மைக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். அதை விடுத்து நாம் பெரிய ஆள் அதனால்தான் எல்லாம் நடக்கிறது., எல்லாரும் பணிகிறார்கள், சேவகம் செய்கிறார்கள் என்று அகந்தையோடு நினைக்க கூடாது. அப்படி அகந்தையோடு நினைத்தான் ஒருவன் அதனால் அவனுக்கு அவமானம் மட்டுமல்ல உயிர் பயமும் நேர்ந்தது. அவன் யார் என்ன தவறு செய்தான் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
பஞ்சபாண்டவருள் ஒருவன் அர்ஜுனன். இவன் குந்தியின் மகன். இவனுக்குத் தருமன் என்ற அண்ணனும், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிமாரும் உண்டு. அஸ்தினாபுர அரண்மனையின் ஆட்சி உரிமைப் போட்டியில் குருஷேத்திர யுத்தம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்றது.
இருவருமே பெரியப்பா சித்தப்பா மக்கள்தான் என்றபோதும் கௌரவர்களுக்கு நாட்டின் இம்மி இடத்தைக் கூட பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் யுத்தம் வந்தது. அப்போது கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே கண்ணனின் துணை நாடிச் சென்றார்கள். துரியோதனன் கண்ணனின் படை பலம் முழுவதையும் தனக்காகப் போரிடுமாறு கேட்க அர்ஜுனனோ கண்ணன் மட்டும் தங்கள் பக்கம் இருந்து போரிட்டால் போதுமெனக் கேட்கிறான்.
இதற்கு ஒத்துக் கொண்ட கண்ணன் குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜுனனுக்கு தேரின் சாரதியாகி கீதா உபதேசம் செய்கிறான். முடிவில் பாண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். இதனால் அர்ஜுனனுக்கு அகந்தை வந்தது. ’தெய்வமே எப்போதும் என் கூடவே இருக்கிறது ஆகையால் நன்றி என்று நினைத்தான் இல்லை “ “தெய்வமே எனக்குத் தேரோட்டியதே அப்படியானால் இந்த உலகிலேயே நான்தான் மிகச் சிறந்த பக்திமான். என்னைவிட கண்ணனுக்கு சிறந்த பக்திமான் யாருமே இருக்க முடியாது” என்று அகம்பாவமாக நினைத்தான்.