எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2020

”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.

சர்வதேச மகளிதின விழாவை ஒட்டி ( மார்ச் 8, 2020 ஆம் ஆண்டு ) ஞாயிறு அன்று மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பினர் மகளிர் தினம் கொண்டாடினர். அதில் எனது பதினொன்றாவது நூலான பெண் அறம் வெளியிடப்பட்டது.

தானம் அறக்கட்டளையும் ரிப்ளெக்‌ஷன் பதிப்பகமும் நமது மண்வாசமும் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.

உன்னத வளர்ச்சியில் ஒன்றிணைந்த பெண்கள் சக்தி என்பது இதன் தீம்.


முதலில் அறவழிபாடு.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கம்பராமாயணம் – இராமாவதாரம்


கம்பராமாயணம் – இராமாவதாரம்


 ம்பராமாயணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சென்னைக் கம்பன் கழகம் 1983 இல் வெளியிட்டுள்ளது. பைபிள் போல், பகவத் கீதைபோல் 1825 பக்கங்களில் கம்பராமாயணம் பாடல்கள் அனைத்தும் கொண்ட நூல் இது. விலையோ 100 /- ரூபாய்தான்.

சனி, 4 ஏப்ரல், 2020

ஒப்பிலாள் - பெண்களின் குரலில்.

ஒப்பிலாள்.

னா செட்டியார் கடுதாசில போட்டபடி நாளானைக்குக் கிளம்பி வாராகளாம். நாகப்பட்டினம் கப்பலடிக்குப் பிளைமவுத் கார் அனுப்பச் சொல்லித் தந்தி அடிச்சிருக்காக வெனையத்தாச்சி” என்றபடி தந்தி தபால் ஆபீசில் இருந்து வந்த ஊழியர் தந்தியை உடைத்துப் படித்தார். அரசப்பன் செட்டியாரின் ஆத்தா வெனையத்தாச்சி தபால்காரர் கையில் ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து "நல்ல சேதி சொன்னே தம்பி வைச்சுக்க" என்றார்கள்.

“அடி ஒப்பிலா. ஓசைமணி காளிக்குக் காசெடுத்து வையி. பாப்பாத்திக்குப் படைக்கோணும். முத்தாத்தாளுக்கு மாவெளக்கு வைக்கோணும்” என்றபடி தன் சேவல்கொண்டையைச் செருகிக்கொண்டே விபூதி பூசிக்கொண்டார் வினை தீர்த்தாள் ஆச்சி.

பிள்ளைகளுக்குத் தூக்குச் சட்டியில் பள்ளிக்கோடத்துக்குச் சாப்பாடு கட்டிக் கொண்டிருந்த ஒப்பிலா ஆச்சி ”அதான் தெரிஞ்ச விசயமாச்சே, மகனைக் காணமுன்னே ஆத்தா இந்தச் சத்தம் போடுறாக. மகனை கண்டுபிட்டா ஒரே ஆட்டபாட்டம்தான்” என மோவாயை இடித்தபடி உள்ளே சென்றாள்.

சேதியைக் கேட்ட பிள்ளைகளுக்கெல்லாம் கொண்டாட்டம். அப்பச்சி வந்தா மலயா ரிப்பன், முட்டாயி, ரப்பர், ப்ளேடு, ஸ்டிக்கர், டேப்பு, வெளையாட்டுச் சாமான், கைக்கெடிகாரம், பிஸ்கட்டு டின்னு, துணிமணி அம்புட்டும் வருமே. கேக்கும்போதே மலயா வாசம் அடித்தது அவர்கள் மனசுக்குள்.

மலயாச் சாமான் வைச்சிருக்கிற வளவறைக்குள்ள ஆத்தா விடுறதேயில்லை என்ற ஏக்கம் அவர்கள் நெஞ்சுமட்டும் நிரம்பி இருந்தது. அப்பச்சி வந்தா ரொட்டி முட்டாய் வேஃபர்ஸ் கிடைக்கும் என்ற இனிப்புக் கனவோடு பள்ளிக்கு வேண்டாவெறுப்பாய்க் கிளம்பினார்கள்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர். தினமலர் சிறுவர்மலர் - 58.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளி கொடுத்தவர்
சூரியனும் சந்திரனும்தான் ஏற்கனவே ஒளியோடு உலாவருகிறார்களே இதென்ன புதுக்கதை என்கிறீர்களா குழந்தைகளே. ஆம் புதுக்கதைதான். ஏற்கனவே ஒளியோடு இருந்த சூரியன் ஒளியிழந்தது எப்படி என்பதையும் அவன் திரும்ப ஒளி பெற்றதையும் பார்ப்போம். அதே போல் சந்திரன் ஒளிவீசித் திகழ்வது எப்படி என்பதையும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மதேவரின் மானஸபுத்திரர்களுள் ஒருவர் அத்திரி மகரிஷி. இவருடைய மனைவி அனுசூயாதேவி. யாரிடமும் அசூயை இல்லாமல் கோபப்படாமல் பழகுவதால் அனுசூயாதேவி அனைவராலும் விரும்பப்பட்டவளாகத் திகழ்ந்தாள்.
அதேபோல் அத்திரி முனிவரும் அனைவராலும் விரும்பப்பட்டார். ஆயுர்வேத மருத்துவம், ஜோதிட சாஸ்த்திரம் ஆகியவற்றில் கரை கண்டவர். இந்த உலகம் தோன்றியபோது இவரும் அவதரித்தார். பல்லாயிரம் குழந்தைகள் பெற்றார். அவர்களுள் பதஞ்சலி, தத்தாத்ரேயர் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
அத்திரி முனிவர் தெளிந்த மெய்ஞானம் கொண்டவர். ஈரேழு பதினாலு லோகத்திலும் அவர் புகழ் பரவிக் கிடந்தது. அவரை மனதில் தியானித்து அவரது மனைவி அனுசூயை மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியதும் பின் முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி அவர்களைத் திரும்ப மும்மூர்த்திகளாக்கியதும் நாம் அறிந்ததே.

புதன், 1 ஏப்ரல், 2020

”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.

இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,
பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.