எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


சனி, 26 நவம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பெயிண்ட் பண்ணக் கற்றுத் தரும் விசுவநாதராவ். !

 சுமாரா 2005 லேருந்து வலைப்பூவுல எழுதிக்கிட்டு இருக்கார் நண்பர் விசுவநாத். ஆனா போனவாரம்தான் ஒரு பின்னூட்டம் மூலம் அவரோட ஹாஸ்ய உணர்வைத் தெரிஞ்சிக்கிட்டேன். மஹாராஷ்ட்ரால வசிச்சாலும் தாய் மண்ணையும் மொழியையும் மறக்காம ப்லாக் எழுதிட்டு இருக்கார் .

ப்லாகில் போய் பார்த்தா மனுஷன் நாலடியார், கபீர்தாஸ், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆண்டாள் திருமொழி, அருணகிரிநாதர் திருப்புகழ், கீத கோவிந்தம், சுப்ரபாதம், நாச்சியார் திருமொழி, மதுராஷ்டகம், கந்தபுராணம், அய்யப்பன், பக்த ப்ரகலாதன் , சுதாமர், உத்தவ கீதை, அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்ப நாயனார், வள்ளி திருமணம், சிவபுராணம், ஏனாதி நாயனார், அரிச்சந்திரன், திருவாசகம், சுப்ரமண்ய புஜங்கம் என எல்லாவற்றுக்கும் எளிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல. தான் வரைந்த தெய்வத் திரு உருவங்களையும் இணைத்திருக்கிறார். அரிய சேவை !! 

அதுனால அவர்கிட்ட அவரோட பெயிண்டிங் இண்டரஸ்ட் பத்தி சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டிருந்தேன். ிருவிளையாடல் ுமி சிவன் பாணியில் அவர் அனுப்பிய கேள்வி பதில் வடிவம் பார்த்து அசந்துட்டேன். செம !!! . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :)அப்புறம் ஒரு விம். யார் ுமி யார் சிவன்னு கேக்கக்கூடு. ஏன்னண்டுமே அவர்ான் :)


உங்களப்பத்தி கொஞ்சம் :



மேடம் உங்களுக்கு ராஜராஜ சோழன் தெரியுமா ?

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

546.ஏட்டுப் பள்ளிக்கூடம் , திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம்  என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். அமராவதி புதூர் என்ற ஊரிலும் திருப்பளாய்த்துறை என்ற ஊரிலும் குருகுலக் கல்வி முறை இருந்தது பற்றி என் பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதென்ன ஏட்டுப் பள்ளிக்கூடம். அந்தக் காலத்தில் குழந்தைகளை முதன் முதலில் விஜயதசமி அன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். இதற்கு சூள்பிடி என்றும் பெயருண்டு. 


///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

மாணவர்கள் ஆசிரியருக்குக் குருதட்சணை ( தேங்காய் , பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தட்சணை ) சமர்ப்பித்துக்  கல்வி கற்பிக்க வேண்டி வணங்கி நிற்பார்கள். அப்போது பரப்பிய மஞ்சள் அரிசியில் அல்லது மணலில் கூட  ஆசிரியர் மாணவர்களின் கையைப் பிடித்து ஆட்காட்டிவிரலால்“அரி ஓம்” என எழுத வைப்பாராம். அதன் பின் 547.* ஏட்டில் எழுத்தாணி வைத்து எழுதக் கற்பிப்பார்களாம்.


கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.



கல்கியின் ஐந்து நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.

கல்கியின் நாவல்களைப் பற்றி எழுதுவது திருவண்ணாமலை தீபத்தைப் பற்றி வர்ணனை செய்வதுபோல. அனைவரின் காட்சிக்கும் புலனாகும் ஒன்றை நான் எப்படி தரிசித்தேன் எனப் புளகமுறக் கூறவே எழுதி உள்ளேன்J

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.

வியாழன், 24 நவம்பர், 2016

காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

526. *கோட்டை கொத்தளங்கள் போல இரண்டடுக்கு மூன்றடுக்குக் கொண்டவை. கீழே பத்துப்படி உயர 527 .* செம்புராங்கற்கள். அதன் மேல் முதல் தளம். முதல்தளத்திலிருந்து 528.* கற்படிகள் கொண்ட மாடி அதன் மேல் இரண்டாம் தளமும் 529 .* மரப்படிகள் கொண்ட மூன்றாம் தளமும். கோட்டை போல் உயரமான வீடு இது . இன்னொரு வீட்டின் மதில் கடைசியில் போட்டிருக்கேன். 
530.*வளவு நடை . கீழ்வாசல் வற்றல் வறளி காயப்போட ஏற்ற இடம். மழைத்தண்ணீர் பிடிக்க, துணி காயவைக்க, பொங்கலிட , விளையாட என்று ஏக உபயோகம். ஐம்பூதங்களும் உலாவும் இடம் :)
531. *கீழ்வாசல் இரும்புக் கம்பி அடைத்துக் கூண்டில் உள்பாயும் வெளிச்சம் :)
532.*பித்தளை அல்லது தாமிரத் தாழ்வாரங்களுக்கு முன்னால் சிற்பமாகச் செதுக்கப்பட்ட தேக்குச் சட்டங்கள் - உட்டன் ரீப்பர் - வழியாக டிசைன் டிசைனாக வெளிச்சம் பாய்வது அழகு !
தூண்கள் கூடப் ப்ரகாசமாய்
533. தூண்களின் தாமிரப்பட்டயங்களில் வார்னிஷ் அடிச்சிருக்கு
Related Posts Plugin for WordPress, Blogger...