எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 2 அக்டோபர், 2016
சனி, 1 அக்டோபர், 2016
சாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்டும் ”வேல்” வார்த்தையும்.
எனது முகநூல் தோழன் கல்யாண். கல்யாண்குமார். அவ்வப்போது போடும் டைரிக் கிறுக்கல்கள் கவிதைகளைப் படித்து ஒரு கமெண்ட் போடுவார். ஒரு நாள் பரிட்சை பூதம் என்ற கவிதை போட்ட போது நீங்க
எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் என்று எழுதி இருந்தார்
(*ஒரு
பூதம்
*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.
*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது. )
இவரது முகநூல் பக்கத்தில் நான் படித்து இப்படியும்
உண்டுமா என யோசித்த வாசகம் “விழுவதும்
எழுவதும் தொடர்கதையாய் இருக்கையில் விலாசம் சொல்வது
வெட்கக் கேடு தானே. ” 87 ஆம் வருடத்தில் இருந்து திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் டைரக்டரா இருப்பதால இவரிடம் நமது சாட்டர்டே ஜாலி கார்னருக்காக வீக் எண்ட் நிகழ்வு பத்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். அவரது பதில் இங்கே.
வியாழன், 29 செப்டம்பர், 2016
புதன், 28 செப்டம்பர், 2016
சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.
சிறுவர் நூல்கள்
– 9. பகுதி – 3.
சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்
இந்தப் பகுதியில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்கள் சிறார்களுக்குப்புத்திக் கூர்மை கொடுக்கும்
நூல்கள்.
பஞ்ச தந்திரக் கதைகள்
பள்ளி ஆசிரியர்கள் எழுதும் சிறுவர் நூல்கள் சிறப்பானவையாக அமைகின்றன. ருக்மணி சேசஷாயி அம்மா அவர்கள் கூட ஒரு ஆசிரியைதான். அல்லும் பகலும் சிறுவர்களின் இயல்புகளையும் அவர்களின் குடும்ப பொருளாதார கஷ்டங்களையும் பக்கம் இருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் அவர்கள் எழுதும் சிறார் கதைகளும் சிறப்பானவையாகவே இருக்கும்.
சனி, 24 செப்டம்பர், 2016
சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்
என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கவிதை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார்.
கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கவிதை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார்.
கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)
புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று.
எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம்
முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818
கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார்
போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




