எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 பிப்ரவரி, 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். கல்யாணி சங்கர் - ஐம்பெரும் பதிவர்களும் ஆதிபதிவர் நா(ன் அ)னானியும் .!


கல்யாணி மேம் வலையுலக ப்ரபலம். நானானி என்ற பெயரில் கமெண்டுகள் அட்டகாசமா இருக்கும் . ஜாலி கேலி கிண்டல் எல்லாம் கலந்த இவர் நம் ஜாலி கார்னருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று ஜூலை 7 , 2014 அன்னிக்கு இவங்ககிட்ட இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டேன் மக்காஸ். ஆனா பாருங்க நெம்ப சீக்கிரமா டிசம்பர்லேருந்து பார்ட் பார்ட்டா அனுப்பினாங்க.

நானும் ராஜபார்ட் ரங்கதுரை மாதிரி ” அம்மம்மா பதில் தருவீங்கன்னு நம்பி  இவள் உங்ககிட்ட வந்துட்டா “ என்று பாடாத குறையாகவும். (ஹிஹி ) "வூட்டாண்டே வந்து வாங்கிக்கிடவா" என்று சாம பேத தான தண்டமில்லாமல் கூவியும் ( ஹிஹி ) பதில் வாங்கிட்டேன். "வூட்டுக்கே வர்ரதுன்னாலும் சர்ர்த்தாம்மே..'வா வாத்யாரே வூட்டாண்ட' “ என்று பதில் கொடுத்த ஜாலி பட்டாசு இவர் . :)

யுரேகா என்று கூவாத குறை. -- ஹலோ சுரேகா(சுந்தர்)  உங்களைக் கூப்பிடல.. :P :P :P  இங்கேயே 5 பதிவர்கள் இருக்காங்க. ஒரு வழியா எனக்கு பதில் கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். :)

இப்பிடி ஒரு கேள்வியை நான் கேக்கவே சீனா சார்  மனைவி செல்வி சங்கர் அவங்களுக்கு  நான் கேட்டகேள்விதான் காரணம். ( அதுவும் சாட்டர்டே ஜாலிகார்னர்தான் -  செல்வி சங்கரின் எண்ணச்சிறகுகள் முளைத்த கதை.)    ஒரே வீட்டில் இருவர் பதிவரா இருப்பது பற்றிக் கேட்டிருந்தேன். அதை முகநூலில் பகிர்ந்தபோது எங்க வீட்டில் 5 பேர் பதிவரா இருக்கோம்னு கல்யாணி மேம் சொன்னாங்க. அட அப்பிடியா யார் யாரெல்லாம் அவங்க. அது பத்தியும் சொல்லுங்கன்னு கேட்டிருந்தேன்.

”எனக்காக சிரமப்பட்டு டைம் ஒதுக்கி ( ஒன்றரை ) மாசமா அனுப்பினதுக்கு தாங்க்ஸ் . உம்மா ”என்று நான்  இன்பாக்ஸில் எழுதி வைக்க அதுக்கு இவர் பதில் “இதில் எனக்கும் சந்தோஷமே! வெறும் உம்மாதானே இருக்கி அணைச்சு இல்லையா? ஹி..ஹி..” என பதிலளிக்க அட.. நமக்கு மேல ஜாலிவாலாவா இருப்பாங்க போலிருக்கேன்னு  ரசிச்சேன். சரி வாங்க இவங்க கொடுத்த சுவாரசியமான பதில படிக்கப்  போகலாம்.

/// கல்யாணி மேம் ,உங்கள் குடும்பத்தில் உள்ள 5 பதிவர்கள் பற்றியும் பதிவுலகம் உங்களுக்கு எப்படி அறிமுகமாச்சு என்பது பற்றியும் கூறுங்களேன்//

வியாழன், 5 பிப்ரவரி, 2015

பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.



தினமணியும் காரைக்குடி புத்தகத் திருவிழாவும் இணைந்து நடத்தின சிறுகதைப் போட்டியில் எனக்கு ஊக்கப் பரிசு கிடைத்தது. அப்போது தினமணிக்கதிரில் புகைப்படத்துடன் சிறுகதை வந்தது.

கரையோர அகதியாய்

இந்தக் கனவுகள்
பசித்துப் பரந்து கிடக்கின்றன.
குளத்தோரப் பாசியாய்

கப்பல்கள் சென்றுவிட்டன
கரையோர அகதியாய்
வானம் வெறிக்கும் நான்

தன்னாராய்ச்சி
அலைகளுக்கு ஓய்வே கிடையாது
இந்த விரல்கள்
அழுதுகொண்டேதான் அசைகின்றன.

என்னுடைய கொலுசுகள்
கண்ணாடிக்கூண்டுக்குள்ளே
சிறைப்பட்டுப் பாதம்
பார்த்துப் பரிதவிக்கும்.

இருட்டு வானம் மெல்லவந்து
குளிர்க்காசைச் சுண்டிப் போடும்.

திங்கள், 2 பிப்ரவரி, 2015

உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.



உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து  ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார்.  ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள்  இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஆகாயத் துளிகள் :-



ஆகாயத் துளிகள் :-

இரயில் வண்டி விளையாட்டு
விளையாடி முடித்த நீர்த்துளிகள்
குடிசையின் பக்கவாட்டு
மண்மேடுகளுக்குக்
க்ரீடம் போட்டன.

மரப்பெண்ணின்
இலைமடியில் வீழ்ந்து புரண்டு
புதிதாகப் பிறந்த
பூக்குழந்தைகளுக்குப்
பூ முத்தம் இட்டன.