எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ப்ளேஸ் டி லா கன்கார்ட் - லக்ஸர் ஸ்தூபி ( இரவில்) - PLACE DE LA CONCORDE - LUXOR OBELISK.

யூரோப் டூரின் எட்டாம் நாள் இரவு  ஃப்ரான்ஸ் சென்றபோது முதலில் சென்ற இடம் இந்த லக்ஸர் ஸ்தூபிதான். ப்ளேஸ் டி லா கன்கார்டில் அமைந்துள்ளது. 

பதினேழாம் நூற்றாண்டின் ஃப்ரெஞ்சுப் புரட்சியில் முக்கியப்பங்கு வகித்த இடம். 

கில்லட் எனப்படும் வெட்டும் இயந்திரத்தால் ஆட்சியாளர்கள், பிரபுக்களின் தலைகள் வெட்டுப்பட்ட இடம். 

நகரின் நடு மையத்தில் அமைந்துள்ள இவ்விடம் ஒரு அச்சமிகு அமைதியில் உறைந்திருந்தது. நாலாபக்கமும் சாலைகள். வண்டிகள் போக்குவரத்து இருந்தும்.

அந்த வண்டிகளும் இந்த இடத்தைக் கண்டதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல் ஓடின. 


விக்டர் ஹியூகோ எழுதிய ஏழை படும் பாடு நூலில் இந்த இடத்தைப் பற்றிய வர்ணனை வரும். கொடுங்கோலன் பதினான்காம் லூயியின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஃப்ரெஞ்சுப் புரட்சி நாட்டையே புரட்டிப் போட்டது. 
 

எவ்வளவு ஒரு கோபமும் உக்கிரமும் இருந்தால் பொது ஜனம் இப்படியான காரியத்தில் ஈடுபட்டிருக்கும். நினைக்கவே நடுங்குகிறது இல்லையா. 

கில்லட் என்று கூகுளில் பார்த்தால் குலை நடுங்கும். கொலை செய்யப்படுபவர்களின் தலை வைக்கப்படும் இடம்,  சரசரவென இறங்கும் கில்லட் ப்ளேடு. அது வந்து வெட்டும் இடம் எல்லாவற்றையும்  படம் வரைந்தே காட்டி இருக்கிறார்கள். 

அந்தக் கடுங்கொலைகள் நிகழ்ந்த இடம் இது என்பதுதான் இந்த ஸ்தூபிகளுக்கும் அந்த நிகழ்வுக்கும் உள்ள சம்பந்தம். 




சொல்லப்போனால் பரிசாகக் கிடைத்த இந்த லக்ஸர் ஸ்தூபிகளை எப்படிக் கொண்டு வந்து நிர்மாணித்தார்கள் என்பது இந்த லக்ஸர் ஸ்தூபிகளிலேயே படம் வரைந்து காட்டப்பட்டுள்ளது.

அதன் வழிமுறைகள், அதன் சிக்கலான கணிதங்கள், பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், போக்குவரத்துகள் அனைத்துமே.  

இதுபற்றி முழுமையான விவரங்கள் இன்னொரு இடுகையில் தருகிறேன்.

நள்ளிரவில் அந்த இடத்தில் இருப்பதே ஒருமாதிரி அமானுஷ்யமாக இருந்தது. 

பதினேழாம் நூற்றாண்டில் நடந்தவை என்றாலும் இன்று நடந்ததுபோல் ஒரு மிரட்சி. அங்கே இருக்கும் ஃப்ரெஸ்ட் என்னும் சிலை அருகில்தான் கில்லட் வைத்து அந்த அடக்குமுறை ஆட்சியாளர்கள், பிரபுக்கள், அடாவடிக்காரர்களைத் தலைவேறு உடல்வேறாகத் துண்டாக்கிப் பழி வாங்கி இருக்கிறார்கள். ஆறாக ரத்தம் பீச்சிட்டு ஓடிய இடம். 

பகைவருக்கு அருள் செய் என்பதெல்லாம் அவர்கள் செய்த கொடுமைகளைப் பட்டியலிடும்போது  இங்கே நடக்க முடியாதவைதான்.

டூரிஸ்ட் பஸ்களும் நாங்களும்தான் அங்கே இருந்த மக்கள் தொகை. அந்த ஸ்கொயர் ஒரு மரண ஸ்கொயர் போல் அச்சுறுத்த இரவு வேறு பயமுறுத்த விறுவிறுவென்று எங்கள் கோச்சில் ஏறி அமர்ந்து ஆசுவாசமானேன். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...