எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 26 பிப்ரவரி, 2014
செவ்வாய், 25 பிப்ரவரி, 2014
தமிழ் இந்துவில் அன்ன பட்சி.
சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள் எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.
சனி, 22 பிப்ரவரி, 2014
சாட்டர்டே ஜாலி கார்னர். சதீஷ் நாராயணனுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர்.
நான் எழுதுவதை எல்லாம் அவ்வப்போது படிப்பார். அதனால் பல்லவபுரம் லயன்ஸ் கிளப் செகரட்டரியான அவர் தங்கள் க்ளப் ஸ்பான்சர் செய்யும் ராம்குவார் தேவி கன்வர் வித்யாலயாவில் ஆசிரியர் தினத்துக்காக கிட்டத்தட்ட 120 ஆசிரியைகளின் முன் உரையாற்ற அழைத்தார். அது சிபிஎஸ்ஸி திட்டத்தின்படி இயங்கும் பள்ளிக்கூடம் என்பது சிறப்பு.
அவருக்குக் கிரிக்கெட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி.
////உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் வீரர் யாரு. ஏன்.?///
செவ்வாய், 18 பிப்ரவரி, 2014
சாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.
என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.
அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.
சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.
புத்தகத்தைப் பற்றி:
திங்கள், 17 பிப்ரவரி, 2014
கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா.
பெண்களின் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா அல்லது பூசும் நறுமணத் தைலங்கள், சூடும் மலர்கள் சார்ந்ததா என்பது திருவிளையாடல் காலத்துக் கேள்வி.
இன்றைய காலகட்டத்தில் எந்த ஆயில் உபயோகித்தாலும் கூந்தலின் ஆயுள் என்பது டி என் ஏ தீர்மானித்ததுதான் எனத் தோன்றுகிறது. கூந்தலுக்கு நறுமணம் உண்டா எனக் கேட்க வேண்டாம். முதலில் கூந்தலே உண்டா எனக் கேட்கலாம். எல்லாருமே அநேகமா குட்டையாக முடி வெட்டிங். பேபி கட், பாய் கட் என.
சனி, 15 பிப்ரவரி, 2014
சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது.
சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்தது
குழந்தைகளைக் கொஞ்சியபின்னும் நம்மேல் ஒரு குழந்தை வாசம் அடித்துக் கொண்டேயிருக்கும். அது நம் வீட்டுக் குழந்தையாயினும் சரி. பக்கத்து வீட்டுக் குழந்தையாயினும் சரி. ஒரு குட்டிப் பயலின் குட்டிப் பெண்ணின் குழந்தமை வாசம் பட்டு நம் முந்தானையும் கழுத்தும் தோள்பட்டையும் திரும்பும்போதும் அசையும்போது காற்றில் ஒரு குழந்தைமை வாசத்தைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கும். அதே உணர்வுதான் ஏற்பட்டது சாந்தி மாரியப்பனின் சிறகு விரிந்ததைப் படித்ததும்.
மழலைத் தூதுவர்களை ரசிப்பதா. தென்றல் தீட்டும் வானவில்லில் வண்ணங்களை பட்டாம்பூச்சி இறகுகளில் தொட்டுப் பார்ப்பதா, தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் பறவையைப் பிடிப்பதா, எனத் திகைக்கும்போது குழந்தைகள் பறவைகளாகி இங்குமங்கும் நம் எண்ணம் கொறிப்பதும், பறவைகள் குழந்தைகளைப் போன்று தத்தித் தத்திச் சிறகடிப்பதும் நிகழ்கிறது கவிதைத் தொகுதி வாசிக்கும்போது.
”அந்த இரவில’ மிகவும் நெகிழ வைத்த கவிதை.
உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த் தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்.
’’பரஸ்பரம்” கடவுளும் குடிகாரனும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து விடமாட்டார்களா என எண்ணத் தூண்டிய வித்யாசமான கவிதைப் பார்வை.
வென்றுவிட்டதாய்ப்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான் ”வீடென்பது.”
அன்னியோன்யமாய் இருந்து வந்து
அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்
உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப்பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.
இந்தத் தொகுப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்த கவிதை ’எவரேனும்’
தலைசாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
முன் தினம் மின் கம்பத்தில்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
யாரேனும் இருக்கக் கூடுமோ..
குடும்பம், குழந்தைகள் இவற்றைச் சுற்றிவரும் சந்திரனாயும் சூரியனாயும் இருக்கிறார்கள் பெண்கள். அவர்களுக்குக் கிடைத்த சொற்ப வெளியில் தன்னையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை வெற்றியைப் பிரகடனப் படுத்துகின்றன.
வார்த்தைகள் வசப்பட்டு நிற்கின்றன சாந்தி மாரியப்பனின் கவிதைகளில். சில சமயம் நம்மைக் கையகப்படுத்த மாட்டாரா என்ற ஏக்கத்தோடு சில காத்தும் கிடக்கின்றன. பொருத்தமான வார்த்தைகளில் பொருந்த வசீகரமாகச் சொல்லிச் செல்லும்போது அடுத்து நமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என மிச்சமும் பின் தொடர்கின்றன. மொத்ததில் மிகவும் பாந்தமான சொற்களில் மென்மையான ஒரு கவிதைத் தொகுதியைப் படித்த சந்தோஷம் ஏற்பட்டது.
கவிதை வாசிப்பது என்பதும் தானே உணரவேண்டிய ஒரு அனுபவம். உணர்ந்து பாருங்கள்.
கிடைக்குமிடம்.:-
அகநாழிகை பதிப்பகம். சென்னை.
விலை ரூ. 80.
www.aganazhigaibookstore.com




