எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஜனவரி, 2020

பேபி பூமர்ஸ் + ஜெனரேஷன் எக்ஸ் வெர்சஸ் மில்லென்னியல்ஸ் + ஜெனரேஷன் இஸட்.

பேபிபூமர்ஸும் மில்லெனியல்ஸும்.

அதென்ன பேபி பூமர்ஸ் என்கின்றீர்களா. அவங்க தாங்க 1940 களில் வதவதன்னு பிள்ளைகளைப் பெத்துப் போட்ட சமூகம். அப்ப மில்லெனியல்ஸுன்னா என்னன்னு கேக்குறீங்களா. சொல்றேன். 1980 களில் அரசாங்கம் பெருகிவரும் மக்கள் தொகையைக் குறைக்கக் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டமா ”நாம் இருவர் நமக்கிருவர்”னு அறிவிச்சுது. 2000 ஆம் வருடங்களில் ”நாம் இருவர் நமக்கு ஒருவர்”னு அறிவிச்சுது. இப்ப 2020 களில் நம்ம இளைய சமூகம் நாமே இருவர் நமக்கேன் ஒருவர் அப்பிடின்னு கேக்குற நிலைக்கு வந்திருக்கு. இவங்கதான் இந்த மில்லென்னியல்ஸ்.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

படச்சுருள் - ஒரு பார்வை.


படச்சுருள் – ஒரு பார்வை.


படச்சுருள்

டிஸ்கவரியில் நவம்பர் 2015 இல் வாங்கி வந்த இதழை அன்றே படித்துவிட்டாலும் இன்றுதான் வலைத்தளத்தில் அதைப் பதிவிட முடிந்தது. சினிமாவுக்கென ஒரு இதழ். நடுப்பக்கப் படங்கள் இல்லாமல் அசட்டுப் பிசட்டு ஜோக்குகள், நையாண்டி இல்லாமல் சீரியஸான பேட்டிகளுடன் அதுவும் பெண் சினிமா இயக்குநர்/ஆவணப்பட இயக்குநர், நடிகைகள் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருக்கும் இதழ் இது.

வியாழன், 2 ஜனவரி, 2020

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன். தினமலர் சிறுவர்மலர் - 47.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மூலன்
இக்காலத்தில் ஒருவர் நோய் நொடியின்றி ஐம்பது, அறுபது ஆண்டுகள் முதல் நூறாண்டுகள் வரை எளிதில் வாழலாம். ஆனால் ஒரு மனிதன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் மூவாயிரம் பாடல்களும் எழுதி இருக்கிறார். அவர் யாரென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்கள்தானே குழந்தைகளே. வாருங்கள் அவர் பற்றிச் சொல்லுகிறேன்.
திருவாடுதுறை என்னும் ஊரில் மூலன் என்றொரு ஆயர் இருந்தார். அவ்வூரின் அருகில் இருந்த சாத்தனூர் என்ற ஊரில் வாழ்ந்த குடும்பஸ்தர்களின் ஆநிரைகளை அதிகாலையில் வீடுதோறும் சென்று ஓட்டிக்கொண்டு பகல் பொழுதில் புல்வெளிகளிலும், காடுகளிலும், உழவு முடிந்த வயல்களிலும் மேய்த்து மாலையில் அதனதன் இல்லம் கொண்டு சேர்ப்பது அவர் பொறுப்பு.
அப்படி மேய்த்துவரும்போது ஒருநாள் மாலையாகியது. ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டும். அவை தம் மேய்ப்பரைத் தேடிக் குரல் எழுப்புகின்றன. அந்தியோ மங்கி வருகின்றது. ஆனால் அவரைப் பாம்பு ஒன்று தீண்டியதால் மேய்ச்சல் நிலத்தில் விழுந்து கிடக்கிறார். ஆநிரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தம் மேய்ப்பர் விழுந்து கிடப்பதைப் பார்த்து அவலக் குரல் எழுப்புகின்றன. சில மோந்து பார்க்கின்றன. ஒரு சிலவற்றின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.

புதன், 1 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடிக் கிளை)  கூட்டத்தில் எழுத்தும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வு.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடி-சிவகங்கை ) மாவட்டத்  தலைவர் திருமிகு ஜீவ சிந்தன் அவர்கள் உரையாடும்படிக் கேட்டு  இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகளாக காரைக்குடியில் செயல்படுகிறது இச்சங்கம் . வாராவாரம் சனிக்கிழமைகளில் த.மு.எ.ச. வின் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் முன்பு காலமான த.மு.எ.ச. நிறுவனர் டி. செல்வராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


திங்கள், 30 டிசம்பர், 2019

கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

2441. டெக்ஸ்டர் மாதிரி கீரை.. கீரை.. க்ரீன்ஸ்ஸ்

2442. துபாய் டால்ஃபின் ஷோ. மை க்ளிக்ஸ்

2443.ஒட்டகத்தைக் கட்டிக்கோ @புர்ஜ் கலீஃபா, மை க்ளிக்ஸ்.