எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

காரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈதல் அறக்கட்டளை.

முகநூலில் திரு நாகப்பன் அவர்கள் (எனது மாமா ) பகிர்ந்திருந்த இதை ப்லாகிலும் பகிர்கிறேன். காரைக்குடியின் மிக மிக முக்கியமான விஷயம் அதன் தண்ணீர்.

எந்த ஊரில் எந்த ராஜாங்கத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் எவ்வளவுதான் பாப்புலேஷன் பெருகினாலும் காரைக்குடிக்கு வராது. காரணம் சம்பை ஊத்து. இந்தத் தண்ணீரின் காரணமாகவே காரைக்குடிக்கு வேலை நிமித்தம் வந்தவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகிவிடுவதும் உண்டு.

அதே போல் சம்பை ஊற்றுத்தண்ணீர் சிறுவாணியை விட மிக ருசியாக இருக்கும்.  அதன் நீராதாரம் வழங்கும் ஐந்து கண்மாய்களில் ஒன்று அதலைக் கண்மாய். இதன் அருகே அதலைக் காளி என்ற அம்மன் கோயிலும் உண்டு

இந்தக் கண்மாயைத் தூர் வார முடிந்த அளவு பொருளுதவியோ உடலுழைப்போ நல்குங்கள். நீர் இருக்கும் வரை நீரும் இருப்பீர். :)

ஈதல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவோம்.



சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப்பிதழ்.


அதிகமில்லை ஜெண்டில்மேன்  & உமன். சுமார் 31 வருடங்களுக்கு முன்னான தமிழ்நாட்டு சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மூன்றாவது மாநில மாநாட்டுக்கான அழைப்பை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.

சனி, 29 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட்மிஷன் !


என் அன்பிற்கினிய தோழி ஜெயந்திரமணி மிக அருமையாக எழுதுவார். சிறுகதைகள் சொல்லும் விதம் தெளிவாகவும் அதன் மையக்கருத்து நச்சென்றும் இருக்கும். பொதுவாக நான் படித்த வரையில் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி இவர் எழுதிய ஆழ்துளைக்குழாய் சிறுகதை ஒன்றும் இக்கதையும் இவர் தொடர்ந்து குழந்தைகள் பற்றிய ( பெற்றோர்களுக்கான ) விழிப்புணர்வுச் சிறுகதைகள் படைக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை அதிகமாக்குகிறது. அதையே அவரிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் :)

தொடர்ந்து எழுதுங்கள் ஜெயந்தி. உங்கள் வாசகியாக நானும் தொடர்கிறேன். :)

சாட்டர்டே போஸ்டுக்காக இவரிடம் கேட்ட போது இச்சிறுகதையை அனுப்பி இருந்தார். பள்ளி அட்மிஷனில்தான் எத்தனை வகைக் கதை படைக்கலாம். இது இன்னொரு கோணம். படித்து ரசிங்க. யோசிங்க. :)



/////“நான் என்றால் அது அவரும் நானும்,

அவரென்றால் அது நானும் அவரும்”

சுய விவரம்

நான் தாங்க ஜெயந்தி ரமணி. பிறந்தது முதல் இன்று வரை (62

ஆண்டுகளாக) சிங்காரச் சென்னை வாசி. உங்களுக்கு ஒரு ரகசியம்

சொல்லட்டுமா? முழுநேர அக்மார்க் சென்னைவாசியாக இருந்தும் நான்

தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லை. இருங்க இருங்க சென்னையில

தான் தெருவுக்கு நாலு கடை இருக்கே எப்படி கஷ்டம் வரும்ன்னு நீங்க

யோசிக்கறது புரியறது. ஆனா நான் சொன்ன தண்ணீர் H2O. இப்ப

புரிஞ்சுதா.

புதன், 26 ஏப்ரல், 2017

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.


சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி.

சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி

 

”என்னுடைய வெற்றி மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் என் சகமனிதர்களின் வெற்றி கொண்டாட்டத்திற்குரியது” என்று அனைவரின் துணைக்கோடலையும் கைக்கொண்ட ஒருவரின் முன், தோல்வி துவண்டு போகாதா என்ன ? தோல்விகளைப் படிக்கட்டுக்களாக்கி வெற்றியெனும் சிகரம் நோக்கிப் பயணிப்பவர் வெறும் 34 வயது மட்டுமே ஆன ஸ்பினோஸ் நிறுவனத்தின் டைரக்டர் அபிராம சுந்தரி. ஃபார்மா மற்றும் பயோ டெக் இண்டஸ்ட்ரியில் நகரத்தார் பெண்களில் முதல் தொழில் அதிபர், இந்தியப் பெண்களில் முதல் முதலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டவர், உலகிலேயே மிக இளைய வயதிலேயே இத்தொழிலில் ஈடுபட்டவர் என்ற முப்பெரும் பெருமைக்குச் சொந்தக்காரர் அபிராமி.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.

காரைக்குடியில் வீடுகளுக்கு விலாசப் பெயர் உண்டு. அதே போல் மிக அழகான பெயர்களாக முத்து விலாசம், லெக்ஷ்மி விலாசம், ராம விலாசம் ( இந்தப் பெயரில் ஒரு தியேட்டரும் முத்துப் பட்டணத்தில் இருந்தது. இப்போது மூடிக்கிடக்கிறது ) இது போல் காரைக்குடியிலும் சுற்று வட்டாரங்களிலும் ( கொத்தமங்கலம், ஆத்தங்குடி ஸ்பெஷல் ) ஆயிரம் ஜன்னலார் வீடு, தகரக் கொட்டகை வீடு என்று பல்வேறு அடையாளங்களால் சுட்டப்படும்.

இது முத்து விலாஸ் வீடு.
கானாடு காத்தானில் உள்ள ஒரு வீட்டை ஹெரிடேஜ் ஹோமாக மாற்றி இருக்கிறார்கள். இதன் பெயர் நாராயணா இன்ன்.