எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2022

த மு எ ச மேதின மாநாடும் ”நற்றமிழ் நங்கை” விருதும்

மேதினத்தில் த மு எ சவின் காரைக்குடி கிளை மாவட்ட மாநாடு நடந்தது. அதில் என்னுடன் காரைக்குடியைச் சேர்ந்த 15 படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கினார்கள். நன்றி த மு எ சங்கம். 






 மே ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் காரைக்குடி த மு எ க சங்கத்தின் கிளை மாநாட்டில் தோழர்கள். 

தோழர் திரு. தமிழ்க்கனல் அவர்களின் எழுச்சிமிகு பாடலோடு ஆரம்பித்தது நிகழ்வு. 

தோழர் திரு. நாகநாதன் & தோழர் திரு. சிவானந்தத்தின் வரவேற்பு உரை. 

தோழர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் விழா மிகச் சிறப்பாக நடந்தது. "நற்றமிழ் நங்கை" என்ற விருது பெற்றேன். நன்றி தோழர்களே






மே 1 உழைப்பாளர் தினத்தில் த மு எ க சவின் காரைக்குடி கிளை கூட்டத்தில் புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, கவிதைக் கண்காட்சி ஆகியன 

தோழர் திரு சபாரத்தினம், தோழர் திரு சித்திரவேலு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.






மே 1 காரைக்குடி கிளை த மு எ க சவின் மாநாட்டில் கவியரங்கம் நடைபெற்றது. கவிதை வாசித்த தோழர்கள் திரு. சம்பத், திருமதி காரைக்குடி கிருஷ்ணா, திருமதி தேவி, கலாம் வகுப்பறை ஆசிரியை திருமதி லெக்ஷ்மி ஆகியோர்






மே1 காரைக்குடி கிளை த மு எ க சவின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள். நிகழ்விற்குத் தலைமை தாங்கிய திரு. மோகன், செயலாளர் திரு நாகநாதன், பொருளாளர் திரு சாதிக், சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு சங்கரசுப்ரமணியன் ஆகியோர்.








மே1 த மு எ க சவின் காரைக்குடி கிளை கூட்டத்தில் எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நற்றமிழ் நம்பி, நற்றமிழ் நங்கை ஆகிய பட்டங்கள், சான்றிதழ்கள் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 

முதுபெரும் எழுத்தாளர் திரு சபாரத்தினம், திரு. சாதிக், திரு. தமிழ்மதி நாகராசன், திரு முத்துக்குமார், இந்த ஆண்டுவரை தலைவராய் இருந்த திரு ஜீவசித்தன் ஆகியோர் நற்றமிழ் நம்பி பட்டம் பெற்றனர். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.







மே1 காரைக்குடி கிளை த மு எ க சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் தோழர் திரு தமிழ்மதி நாகராசன் நற்றமிழ் நம்பி விருது பெற்றார். தோழர்கள் திருமதி லெக்ஷ்மி, திருமதி கிருஷ்ணா, திருமதி தென்றல்சாய் ஆகியோர் நற்றமிழ் நங்கை விருது பெற்றார்கள். தோழர் திரு முத்துக்குமார் விருதாளர்கள் சார்பாக நன்றி கூறினார்







மே1 காரைக்குடி த மு எ க சவின் கிளை மாநாட்டில் "நற்றமிழ் நங்கை" விருது கொடுத்துக் கௌரவித்தார்கள். நன்றி தோழர்களுக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும்.  விருது கொடுத்தமைக்கு நன்றி உரையாற்றினேன். வாழ்த்துக்கள் அனைவருக்கும்







இந்த ஆண்டு த மு எ க சவின் காரைக்குடிக் கிளையின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் திருமதி கலைவாணியுடனும், விழாவிற்கு முன்னிலை வகித்த தோழர் திருமதி கவிதாவுடனும். 


வாழ்த்துக்கள் புதிய தலைவியே. Kalai Vani

2 கருத்துகள்:

  1. நிகழ்வை காட்சி ரூபமாக பதிவிட்டமை சிறப்பு. இத்தகைய நிகழ்வுகள் காரைக்குடி பகுதி எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு புதிய திறப்பைக் கொடுக்கும் என நம்பலாம். தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி துரை. அறிவழகன் சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...