911. முறுக்கிக்கிறது. - ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேனெனப் பிடிவாதம் பிடித்தல். அல்லது அதில் விருப்பம் காட்டாதிருத்தல். தனக்கு அந்த விஷயம் அற்பமானது சமமானதில்லை எனக் கருதுவது.
912. எகனைக்கு மொகனை - ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொள்ளுதல். (பாட்டில் எதுகை மோனை என்பது போல் )
913. லெக்ஷ்மி குழம்பு - சும்மா குழம்பு என்று ஒரு குழம்பு வைப்பார்கள். சின்னவெங்காயம் ஐந்தாறை நறுக்கிப் போட்டு கடுகு வெந்தயம் தாளித்து உப்புப் புளி கரைத்து சாம்பார் பொடி அல்லது மிளகாய்ப் பொடி போட்டு உடனடியாக வைப்பார்கள். இது சோற்றுக்கும் இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ள ஆகும். காய் இல்லாமல் வைப்பதால் சும்மா குழம்பு. ஆனால் அதை சும்மா என்று சொல்லக்கூடாது என்று லெக்ஷ்மி குழம்பு என்பார்கள்.
914. மொட்டட்டின்னு போட்டுட்டாக. - அக்கறை இல்லாமல் ஒரு விஷயத்தைக் கைவிடுவது. ஒன்றும் இல்லை என்று கருதுவது.
915. வெள்ளமா வைச்சாக - சீர் செனத்தி அதிகம் வைப்பதைக் குறிப்பது. தாய்வீட்டில் பெண்ணுக்கு அதிகமாக சீர் செனத்தி வைப்பதைக் குறிப்பது. வசதி படைத்தோர் ஊசியிலிருந்து கப்பல்வரை சீர் பரப்புவார்கள்.
916. வெள்ளமாக் கொண்டுவந்தா - திருமணத்தின்போது ஆத்தா வீட்டில் இருந்து சீர் செனத்தி அதிகம் கொண்டு வந்தாள் என்று சொல்ல இப்படிச் சொல்வார்கள்.
917. கொட்டான்ல அள்ளி வைச்சாக - சீர் செனத்தி எதுவுமே வைக்காமல் பேருக்குக் கொஞ்சம் போல் அதுவும் தோது இல்லாமல் தமது பெண்ணுக்குப் புழங்கும் சாமான்கள் கொடுப்பதைக் குறிப்பது. சொல்லப்போனால் ஓரிரண்டு கொட்டான்களிலேயே இந்த சாமான்கள் அடங்கிவிடும். ( இப்போதெல்லாம் பெண்ணுக்குத் தாய்வீட்டில் சாமான் பரப்புவதே இல்லை என்பதுதான் உண்மை. )
918. உடுத்திக் குளிக்கிற துண்டு :- குளிக்கும் போது உடுத்தும் துண்டு குத்தாலந்துண்டு என்றும் உடுத்திக் குளிக்கிறதுண்டு என்றும் அழைக்கப்படும். எண்ணெய்க் குளியலின் போது உள் உடைகள் எண்ணெயாகாமலிருக்க இத்துண்டை உடுத்திக் குளிப்பதுண்டு.
919. மேலுக்குக் குளி :- சளிப்பிடித்து இருந்தால் அல்லது உடல் நலம் சரியில்லாதிருந்து ஓரளவு சரியானபின்பு தலைக்குத் தண்ணீர் ஊற்றாமல் சட்டுன்னு மேலுக்குக் குளிச்சிட்டு வா என்பார்கள்.
920. உருமாலை - தலைப்பாகை, துண்டை உருமாலை கட்டுதல், தலைப்பாகையாகக் கட்டுதல், முண்டாசு கட்டுதல், தலைப்பா, டர்பன்.
921. பதக்கம், மகரி - திருமணத்தின்போதும் சஷ்டியப்த பூர்த்தியின் போதும் ஆண்கள் அணியும் பதக்கத்தின் பெயர் மகரி. இது வித்யாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
922. பட்டுக்கயிறு - இடுப்பில் கட்டிக் கொள்ளும் அரைஞாண் கயிறு. இது கருப்பு, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும், தங்கம் வெள்ளியிலும் சிலர் செய்து அணிந்துகொள்வதுண்டு. குழந்தைகளுக்குப் போடும் தங்க அரைஞாண் கயிற்றை குண்டிச் சங்கிலி என்பார்கள்.
923. கைச்சங்கிலி - ப்ரேஸ்லெட்.
924. வேறுவைத்தல் - மகனுக்குத் திருமணம் முடிந்ததும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கென தனி சமையல் பகுதி, படுக்கை அறை ஒதுக்கிக் கொடுப்பது. ஒரே வீட்டிலேயே வேறு வேறு சமையல் செய்துகொள்வது. இதற்கென டப்பாக்களில்/சம்படங்களில்/சம்புடங்களில் பருப்பு, மளிகை வகையறாவைக் கொட்டிக் கொடுப்பார்கள்.
925. மறுக்கா ஒருதரம் - இன்னொருதரம், மறுபடியும்,
926. நாதாங்கி - கொண்டி. - கொக்கி, இரும்புக் கொக்கி, தாழ்ப்பாள்,
927. காபந்து. - பத்திரப்படுத்துதல். பாதுகாத்தல்,
928. வரளி - கஞ்சத்தனம் பிடித்தவள்/ர், ஒன்றுமே ஈயாதவர், கடுசு, கடுமையாக நடந்துகொள்பவர், எச்சிற்கையால் காக்காய் ஓட்டாதவர்., செழிப்பமில்லாதவர்.
929. வட்டகை & வகுப்பு. :- வட்டகை ஏழு உள்ளது. அது தெற்கு வட்டகை, மேலவட்டகை , கிழக்கு வட்டகை என்று. இதில் உள்ள ஒன்பது கோயில்களின் உட்பிரிவை வகுப்பு என்பார்கள். எ. கா.பிள்ளையார் வகுப்பு ,பெரிய வகுப்பு, தெய்வநாயகர் வகுப்பு.
930. பொருமா மிளகுபொடி. :- வீட்டில் திருமணம் , குடிபுகுதல், பெண் பெரிய மனுஷியாதல், சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி போன்றவற்றின்போது தாய்வீட்டில் இருந்து பொருமா மிளகுபொடி என வத்தல்வரளி வகையறா செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பெண்ணுக்கு அனுவல்சமயம் உதவியாக இருக்குமே என்று. ( உப்புமா, புட்டுமா, கொழுக்கட்டைமாவு, இடியாப்பமாவு, தேன்குழல்மாவு , தேன்குழல் வற்றல், கேப்பை வத்தல், மிளகாய் வத்தல், மிதுக்க வத்தல், கத்திரி வத்தல், அவரை வத்தல், உப்புக்கணம், மாவத்தல், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், கிடாரங்காய் ஊறுகாய், நாரத்தை ஊறுகாய், கும்பகோணம் ஊறுகாய், காய்கறி ஊறுகாய், வெள்ளைப்பூண்டு ஊறுகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாம்பார்த்தூள், இட்லிப் பொடி, கறிவடகம், மிளகுபொடி, ஆகியனவும் மற்ற பலகாரங்களும் செய்து கொடுப்பார்கள் . )
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. காரைக்குடிச் சொல்வழக்கு. லெக்ஷ்மி குழம்பும் பொருமா மிளகுபொடியும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. காரைக்குடிச் சொல்வழக்கு. லெக்ஷ்மி குழம்பும் பொருமா மிளகுபொடியும்.
எத்தனை வார்த்தைகள்/சொலவடைகள் - பலவற்றை இழந்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநிறைய வார்த்தைகள் தெரிந்து கொண்டோம்..
பதிலளிநீக்குகீதா: லெஷ்மி குழம்பு அட எங்க வீட்டுல சின்ன வெங்காயம் போட்ட புளிக் குழம்பு என்று சொல்லுவோம்..
பொருமா மிளகுப்பொடி அறிந்தோம்...என்னவென்று..அப்படியே உங்கள் வட்டார வழக்கும் தெரிந்து கொண்டாலும் நினைவுல இருக்கணுமே!! அதானே பிரச்சனைஆகுதுஇப்பல்லாம்..ஹிஹிஹி
ஆம் வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி கீத்ஸ். அட சின்னவெங்காயம் போட்ட புளிக்குழம்பு. அப்பிடியா. நல்லாத்தான் இருக்கு இதுவும். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!