எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஜனவரி, 2018

தென்றலின் பார்வையில் தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்திய ஆசிய கவிஞர்கள் சந்திப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட  36 நூல்களில் எனது நூலும் ஒன்று.
காரைக்குடியில் கார்த்திகேயன் பள்ளியை நடத்திவரும் தென்றல் சாய் அவர்களும் அங்கே கட்டுரை வாசித்தார்கள். தங்கம் மூர்த்தி கவிதைகளையும் சிலாகித்தார்கள். எங்களுக்கு அங்கே அறிமுகமானவுடனேயே எங்கள் நூல்களை வாங்கி உடன் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
சுறுசுறுப்பின் மறுபெயர் தென்றல் சாய். உடனடியாகப் பாராட்டி அதை முகநூலிலும் எழுதிவிட்டார்கள். டிசம்பர் 14 அன்று அவர்கள் எழுதியதை இன்றுதான் பார்த்தேன். அவ்வளவு சுறுசுறுப்பு நாம :)
உன் கருத்துக்களுக்கு  அன்பும் நன்றியும் தங்கையே. 


////இரு பெண் கவிஞர்களின்
இரு கவிதை நூல்கள்.
அழகப்பா பல்கலைக்கழகம்
கலை பண்பாட்டுத் துறையின்
பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்
40 பெண் கவிஞர்களின்
நூல்கள் வெளியீடு.
ஒவ்வொருவருக்கும் 10 பிரதிகள் மட்டும்
என்பதால், அங்கேயே வாசிப்பு .
அறிமுகங்கள் அன்று தான்
அன்பு முகங்கள் என்றுமே.
தேனம்மை லெட்சுமணன்,
தேன்மொழியாள் என் ஆச்சி.
( செட்டிநாட்டில் ஆச்சி என்பது
அக்காவைக் குறிப்பது வழக்கு).
பேட்டியில் மலர்கின்றன
பரந்த மனப்பான்மையும்
கவிபுனையும் சூழல்களும்.
கவிதைகளில் இழையோடுகின்றன
மிதவாதப் பெண்ணியமும்
வாழ்வின் இயல்புகளும் .
பாதித்த சில வரிகள்:
"கருப்பை சூல் சுமக்க
மகரந்தம் பக்குவமாக்கும்
பருவத்தின் சுழற்சி இது".
"எங்கள் வண்ணங்களை எடுத்துக்கொண்டு
வர்ணங்களைச் சுமத்திப்
பிரித்தாண்டு சென்றார்கள்".
கோவை நறுமுகைதேவி,
கொஞ்சமாய்ப் பேசி
கொஞ்சம் நூலினும் ஒன்றினைக்
கொடுத்துச் சென்ற தோழி.
பேட்டியில் மிளிர்கின்றன
அழகான சொல்லாடலும்
செறிவான ஆளுமையும்.
கவிதைகளில் தெறிக்கின்றன
பெண்ணியமும் கம்யூனிசமும் .
உதாரணத்திற்குச் சில வரிகள்:
"இறுகிய என்னை இளக்க மறுக்கின்றன
வழி நெடுக சிதறிக் கிடக்கும்
உன் இற்றுப் போன சொற்கள்".
"மாமிசக் கடையொன்றினுள்
லாவகமாய்க் கூறிடப்படும்
உயிரினைப் போலவே
துண்டாடிக் குவிக்கிறாய்
என் உணர்வுகளை".
இருவருக்கும் இந்த
இனியவளின் வாழ்த்துகள்.////

அருமை அருமை.. அன்பும் நன்றியும்டா :) 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...