எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 ஜனவரி, 2018

அருப்புக்கோட்டையிலிருந்து க சி அகமுடை நம்பியின் கடிதங்கள்.

புதிய பார்வை என்றொரு இதழை நடத்தி வந்தார் எங்கள் கல்லூரியில் படித்த ரத்னம் என்ற அக்காவின் உறவினர். அவர் பத்ரிக்கையிலும் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். !. வேண்டாம் தட்சணைகள், தூது, சாயம் போன வானவில்கள், ஒரு ஊனம் தேவை ஆகிய கட்டுரை, கவிதை, சிறுகதைகள் அதில் வெளியாகின.

அதன் ஆசிரியர் பெயர் அகமுடை நம்பி என்ற அறிவுடை நம்பி, அறிவன் என்ற பெயரிலும் எழுதி வந்தார். அருப்புக்கோட்டையில் விவசாயப் பொறியாளராகப் பணிபுரிந்துவந்த அவர் புதியபார்வையில் சிறப்பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.  பல்வேறு இக்கட்டுக்களுக்கும் இடையில் கைக்காசைப் போட்டு அவ்விதழை நடத்தி வந்தார்.  அருமைமிக்க  அவரின் கடிதங்களைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.







இக்கடிதங்கள் மாபெரும் பொக்கிஷங்கள். இவை கிடைத்ததில் பெருமகிழ்வு அடைந்தேன். இப்போது இவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புதிய பார்வை இதழ் தொடர்ந்து வெளிவருகிறதா எனவும் தெரியவில்லை.

இவர்களுக்கெல்லாம் நம் மேல் எவ்வளவு நம்பிக்கை. பல்லாண்டுகள் கழிந்தாலும் அந்த  நம்பிக்கை வீழாது தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். ஊக்கங்கொடுத்த நல்லுள்ளத்திற்கு  நன்றிகள்.

எனினும் எச்சூழ்நிலையிலும் லாப நோக்கம் கருதாது  இலக்கியம் ஒன்றே குறிக்கோளாய்ச் சிற்றிதழ் நடத்தித் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் அனைத்து இலக்கிய உள்ளங்களுக்கும் சமர்ப்பணமாக இக்கடிதத்தை வெளியிட்டு மகிழ்கிறேன். 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த வருத்தங்கள்.

    உங்கள் வலைக்கு வந்தேன்.படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...