=================================
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 31 மார்ச், 2014
சொர்க்கத்தின் எல்லை நரகம்.
=================================
சனி, 29 மார்ச், 2014
சாட்டர்டே ஜாலி கார்னர். ஒரு சிவில் இஞ்சினியரும், சில பல்புகளும்.
நமக்கும் நம் அண்ணன் தம்பி அக்கா தங்கை பிள்ளைகளிடம் இதுபோல பல்ப் வாங்கிய பெருமை இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வேறு அந்த பல்புகளை நம்மேல் அவ்வப்போது மாட்டி ஒளிவிடச் செய்து மகிழ்வார்கள். !! :).
வெள்ளி, 28 மார்ச், 2014
வியாழன், 27 மார்ச், 2014
தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்
சூர்யாவின் கஜனி படப் பாடல்.அழகும் குறும்பும் துள்ளும் அசினும், இளமையான சூர்யாவும் காட்சியழகு.
கனகா சிவாஜி காம்பினேஷனில் மிகவும் ரசிக்கும் பாடல். ரொம்ப அந்யோன்யமும் அன்பும் வாஞ்சையும் கொஞ்சலும் வழியும் பாடல்.
தலை கூட யார் நடிச்சாலும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னான்னு வொர்க் அவுட் ஆகும் என்பது என் தலைவரின் அசைக்க முடியாத கருத்து. அதே போல சிநேகாவுடன் பாடும் இந்தப் பாடல் செம அழகு. இளமையும் அழகும் அன்பும் கொட்டிக் கிடக்கும் தமிழ் நடிகை சிநேகா. அவர் இன்னும் உயரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும்..
புதன், 26 மார்ச், 2014
அன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா
வலைத்தளக் கவிதைகளைப் பார்த்துவிட்டு சமுதாய நண்பன் என்ற இதழுக்கு என்னுடைய கவிதைகளைக் கேட்டு வாங்கிப் போடச் செய்ததுமல்லாமல் எனக்கு ஒரு வருடத்துக்கான சந்தாவும் கட்டி அந்தப் புத்தகங்கள் என்னை அடையுமாறு செய்திருக்கிறார். என்னுடைய 9 கவிதைகள் சமுதாய நண்பனில் வந்திருக்கின்றன.
செவ்வாய், 25 மார்ச், 2014
அவள் ஆண்டாள்.
திங்கள், 24 மார்ச், 2014
புத்தக வாசம்:-
==================
சனி, 22 மார்ச், 2014
சாட்டர்டே போஸ்ட். மணிமேகலையும் தன்னம்பிக்கைத் தாத்தாவும்.
அவரிடம் அவரது அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டேன். அவரின் பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.
//// உங்க அலுவலகம் சம்பந்தமா மறக்க முடியாத நிகழ்வு எது.. அது உங்க வாழ்க்கையை மாத்துனுச்சா..///
வெள்ளி, 21 மார்ச், 2014
தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்.
31.ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
தியாகராஜனும் சரிதாவும் பாடும் பாடல். மிக அழகான காட்சியமைப்பு. எப்போதும் போலவே நான் தமிழ்ப் பாடல்களின் வரிகளுக்கும் காட்சியமைக்கும் அடிமை.
32. தேன் பூவே பூவே வா
அம்பிகாவும் லதாவின் சகோதரர் ராஜும்பாடும் பாடல். சந்தத்தோடு அழகாக அம்பிகா அபிநயம் செய்வது பிடிக்கும்.
ஐஸ்வர்யா பாடும் பாடல். இவரின் நடனத்துக்கு நான் அடிமை. மிக அழகான முகபாவங்களோடு பாடுவார். ஆட்டமும் காட்சியமைப்பும் இனிமை. மம்முட்டி இவருக்கு ஜோடி.
வியாழன், 20 மார்ச், 2014
சனி, 15 மார்ச், 2014
பண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்
கார் என்பது இன்றைய மத்தியதரக் குடும்பங்களின் கனவாக இருக்கிறது.ஒரு கார் இருந்தா போதும் எங்க வேணாலும் போகலாம். இந்த பஸ், ட்ரெயின் ப்ளைட் டிக்கெட் வாங்கும் அவஸ்தை எல்லாம் இல்லை. ஆனால் பெட்ரோல் விலைதான் ஏறிப் போச்சு. செல்ஃப் ட்ரைவிங் செல்லத் தெரியாவிட்டால்.ட்ரைவரிடம் விட்டால் இன்னும் என்னென்ன கேடு வேறு அதற்கு நிகழுமோ. இந்த பயமும் அனைவரிடமும் உண்டு. அனைவருக்கும் இருக்கும் இந்தக் கார் ஆசையை மெயின் தீமாக வைத்துக் கதை சொன்ன அருண் குமாருக்கும் தயாரித்த கணேஷ் குமாருக்கும் முதலில் ஒரு ஹேட்ஸ் ஆஃப்.
எங்கள் அப்பத்தா வீட்டு ஐயாவிடம் 40 கார்கள் இருந்ததாம். ஆஸ்டின், செவர்லெட், பத்மினி , ப்ளைமவுத், அம்பாசிடர் என்று. அப்ப உள்ள கார்கள் எல்லாம் பிரம்மாண்டமாய் இருப்பதால் அதன் உள்ளே பிள்ளைகள் அமர ரெட்டு சீட்டுப் போட்ட மடக்கு ஸ்டூல்கள் இன்னும் என் அம்மா வீட்டில் இருக்கின்றன.
சாட்டர்டே ஜாலி கார்னர், ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள்.
முக நூல் நண்பர் ஓசை செல்லாவிடம் ஓராறு கேள்விகள் கேட்டோம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக. அவரின் பதில்கள் சுவாரசியம். நீங்களும் படிச்சு ரசியுங்க.
இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பக்கம் தானே தனியா வீட்டைக் கட்டி வாழ்ந்தவர் இவரு .
#1 : இயற்கையோடு இயைந்த வாழ்க்கை எப்பிடி இருக்கு. இதப் பத்தி நிறைய சொல்லுங்க. “
வெள்ளி, 14 மார்ச், 2014
தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.
ரிதமில் வரும் இந்தப் பாட்டு சொல்லொணா சோகத்தைக் கிளப்பும். மீனா தனியாக தன் மகனோடு ஒரு வைபவத்துக்கு வரும்போது இந்தப் பாடல் இடம் பெறும். இதில் நடனம் சிறப்பாக இருக்கும். அருமையான லிரிக்ஸ்க்காகவும் பிடிக்கும்.
22. பூமாலையில் ஓர் மல்லிகை
சிவாஜி கே ஆர் விஜயா. நம்ம ஃபேவரைட் ஜோடியின் பாடல். கணவன் மனைவி போல மிகப் பாந்தமாக இருக்கும் இந்த ஜோடி. பாடலும் இணைவும் இழைவும் குழைவும் அப்படியே. விஜயாம்மாவின் சிரிப்புக்கு நான் அடிமை. அந்த மச்சத்துக்கும்.
23. my bro Naveen Kbb' film song..நெல்லை சந்திப்பு-- இதுதானே எங்கள் வீடு. சந்தோஷம் பொங்கும் கூடு. தாய்தந்தை அன்பில் வாழும் ஜீவன் நாங்களே..
சகோதரர் நவீன் கிருஷ்ணாவின் படப்பாடல். மத்தியதரக் குடும்பத்தின் உறவுகளும் நெகிழ்வுகளுமாக மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும்.
வியாழன், 13 மார்ச், 2014
தற்பால் சேர்க்கையும் கோணல் கோட்பாடும்.:-
புதன், 5 மார்ச், 2014
உமாமோகனின் வெய்யில் புராணம்.
உமாமோகனின் வெய்யில் புராணம்
சாவியின் வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறீர்களா. படிக்கும்போதே வார்த்தைக்கு வார்த்தை வாய் விட்டுச் சிரிப்போமே. அந்த எஃபெக்டை உண்டு செய்தது உமா மோகனின் வெய்யில் புராணம்.
தலைநகர் டில்லியில் கரோல்பாகில் வசித்திருக்கிறோம் பல வருடங்களுக்கு முன். அங்கே பூசா ரோடையும் அஜ்மல்கான் ரோடையும், கஃபார் மார்க்கெட்டையும்
,கன்னாட் ப்ளேசையும், பாலிகா பசாரையும் பகாட் கஞ்சையும் சுற்றி வந்திருக்கிறோம்.
இன்னும் ஆக்ரா, மதுரா, ஹரித்வார், ரிஷிகேஷ், ஜெய்ப்பூர் எல்லாம்.
அவையெல்லாம் உமா மோகன் எழுத்தில் கார்ட்டூன் படங்கள் போல மீண்டெழுந்தன.
என்னா கிண்டல் என்னா கிண்டல். செம சூப்பர் போங்க உமா.
”குத்புதீன் ஐபக்கே வந்து அவரைப் பார்த்துட்டுப் போகட்டும். ”
”நெருப்புக்குப் பயந்து அடுப்புல விழுறது..” உண்மைதான் டெல்லியில் மே , ஜூனில் பாலைவன ஒட்டங்கள் போல நாம மூக்கை மூடிக்கிட்டுத்தான் போகணும். இல்லாட்டா எல்லாமே வெந்து போயிரும்.. :) தண்ணீர் தண்ணீர் என்பதே நமது வேண்டுகோளாக இருக்கும்.
“ கித்னா பைசா.. “ ” மிஷன் இம்பாசிபிள் “ ” பிஸ்கட்டை டீயில் நனைச்சுச் சாப்பிடுற மாதிரி இட்லியை சாம்பாரில் நனைச்சு “ “ ஜம்ப் ஜம்ப் ஜம்பி.. “ “ ஜோடா “ -- ஹாஹா. இதெல்லாம் உங்க புக்கைப் படிச்சிட்டு நான் விழுந்து விழுந்து கன்னா பின்னான்னு சிரிக்க என் பையன் அர்த்த ராத்திரில அம்மாவுக்குள்ள மோகினி ஏதும் ஏறிடுச்சோன்னு முழிச்சுப் பார்த்தான். :)
அன்னை இந்திரா காந்தி மரித்த இடத்தில் என் தந்தை தாயுடன் சென்றபோது அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ந்தார்கள்.
அதே போல காந்தி சமாதிக்குச் சென்றபோது விழுந்து வணங்கியே எழுந்தார்கள்.
உண்மையிலேயே தேசத் தலைவர்கள்மீது அன்பும் அபிமானமும் உள்ள மக்கள் இருந்த காலம் அது.
எங்களை அழைத்துச் சென்ற கைட் பஸ்ஸில் சொன்னார். “ டெல்லி என்பது அநேக தலைவர்களின் சமாதிகள் அடங்கிய ஒரு பெரிய மயானம் ”என்று கிண்டலடித்தார்.
ஹாலிப் பாத், மால் ரோடு பார்த்ததில்லை
. இன்னும் சண்டிகட், ரோதங்க் பாஸ், வாகா பார்டர் , சிம்லா, குலு , மணாலி எல்லாம் பார்க்கணும்னு கணவர்கிட்ட வேண்டுகோள் வைச்சிருக்கேன்.
கட்டக் கடைசியா எல்லாப் பொருளும் பாண்டிலேயே கிடைக்குதாமே.. அதைக் கணவர் கண்ணுல மறைச்சுட்டீங்களா.. எவ்வளோ பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா. -- அஹா.
உமா ப்ளீஸ் நீங்க ஹனிமூன் போன குளிர் புராணத்தையும் எழுதுங்க. அது இன்னும் சுவாரசியமா இருக்கும். :)
உமாவின் எழுத்து ரொம்ப சுவாரசியம். நிறைய சிரிக்கணும்னா இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிச்சுப் பாருங்க. வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும். அதுக்குக் கியாரண்டி நான். :) யாருக்கும் பரிசளிக்கலாம் கூட.
டிஸ்கி :- உமா மோகனின் வெய்யில் புராணம்.
வெளியீடு :- அகநாழிகை பதிப்பகம்.
விலை :- ரூ. 25.







