புதன், 5 மார்ச், 2014

உமாமோகனின் வெய்யில் புராணம்.

சாவியின் வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறீர்களா. படிக்கும்போதே வார்த்தைக்கு வார்த்தை வாய் விட்டுச் சிரிப்போமே. அந்த எஃபெக்டை உண்டு செய்தது உமா மோகனின் வெய்யில் புராணம்.

தலைநகர் டில்லியில் கரோல்பாகில் வசித்திருக்கிறோம் பல வருடங்களுக்கு முன். அங்கே பூசா ரோடையும் அஜ்மல்கான் ரோடையும், கஃபார் மார்க்கெட்டையும் ,கன்னாட் ப்ளேசையும், பாலிகா பசாரையும் பகாட் கஞ்சையும் சுற்றி வந்திருக்கிறோம்.  இன்னும் ஆக்ரா, மதுரா, ஹரித்வார், ரிஷிகேஷ், ஜெய்ப்பூர் எல்லாம்.அவையெல்லாம் உமா மோகன் எழுத்தில் கார்ட்டூன் படங்கள் போல மீண்டெழுந்தன. என்னா கிண்டல் என்னா கிண்டல். செம சூப்பர் போங்க உமா.

”குத்புதீன் ஐபக்கே வந்து அவரைப் பார்த்துட்டுப் போகட்டும். ”

”நெருப்புக்குப் பயந்து அடுப்புல விழுறது..” உண்மைதான் டெல்லியில் மே , ஜூனில் பாலைவன ஒட்டங்கள் போல நாம மூக்கை மூடிக்கிட்டுத்தான் போகணும். இல்லாட்டா எல்லாமே வெந்து போயிரும்.. :) தண்ணீர் தண்ணீர் என்பதே நமது வேண்டுகோளாக இருக்கும். 

“ கித்னா பைசா.. “ ” மிஷன் இம்பாசிபிள் “  ” பிஸ்கட்டை டீயில் நனைச்சுச் சாப்பிடுற மாதிரி இட்லியை சாம்பாரில் நனைச்சு “  “ ஜம்ப் ஜம்ப் ஜம்பி.. “ “ ஜோடா “ -- ஹாஹா. இதெல்லாம் உங்க புக்கைப் படிச்சிட்டு நான் விழுந்து விழுந்து கன்னா பின்னான்னு சிரிக்க என் பையன் அர்த்த ராத்திரில அம்மாவுக்குள்ள மோகினி ஏதும் ஏறிடுச்சோன்னு முழிச்சுப் பார்த்தான். :)

அன்னை இந்திரா காந்தி மரித்த இடத்தில் என் தந்தை தாயுடன் சென்றபோது அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ந்தார்கள்.

அதே போல காந்தி சமாதிக்குச் சென்றபோது விழுந்து வணங்கியே எழுந்தார்கள். உண்மையிலேயே தேசத் தலைவர்கள்மீது அன்பும் அபிமானமும் உள்ள மக்கள் இருந்த காலம் அது.

எங்களை அழைத்துச் சென்ற கைட் பஸ்ஸில் சொன்னார். “ டெல்லி என்பது அநேக தலைவர்களின் சமாதிகள் அடங்கிய ஒரு பெரிய மயானம் ”என்று கிண்டலடித்தார்.

ஹாலிப் பாத், மால் ரோடு பார்த்ததில்லை . இன்னும் சண்டிகட், ரோதங்க் பாஸ், வாகா பார்டர் , சிம்லா, குலு , மணாலி எல்லாம் பார்க்கணும்னு கணவர்கிட்ட வேண்டுகோள் வைச்சிருக்கேன். 

கட்டக் கடைசியா எல்லாப் பொருளும் பாண்டிலேயே கிடைக்குதாமே.. அதைக் கணவர் கண்ணுல மறைச்சுட்டீங்களா.. எவ்வளோ பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா. -- அஹா.

உமா ப்ளீஸ் நீங்க ஹனிமூன் போன குளிர் புராணத்தையும் எழுதுங்க. அது இன்னும் சுவாரசியமா இருக்கும். :)

உமாவின் எழுத்து ரொம்ப சுவாரசியம். நிறைய சிரிக்கணும்னா  இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிச்சுப் பாருங்க. வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும். அதுக்குக் கியாரண்டி நான். :)  யாருக்கும் பரிசளிக்கலாம் கூட.

டிஸ்கி :- உமா மோகனின் வெய்யில் புராணம்.

வெளியீடு :- அகநாழிகை பதிப்பகம்.

விலை :- ரூ. 25.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நானும் கியாரண்டி... ஹிஹி...

உடனே வாங்கி விடுகிறேன் சகோதரி... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

உமா மோகன் சொன்னது…

மிக்க நன்றி தேனம்மை .உங்க புகழ்ச்சி மருட்சியத் தருது-தகுதியைத் தக்க வைக்கணுமே ;)

Thenammai Lakshmanan சொன்னது…

வெல்கம் உமா. :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...