வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சிப்பியின் ரேகைகள்..

கால் எவ்விப்
பறக்கும் நாரை
நாங்கள் விளையாடி
ஓடிய திசையில்..

கடலலைகள்
நுரைத்துத் துவைத்திருந்தன
எங்கள் காலடித்
தடங்களை

அதே கடலும்
கடலையும் சுவைத்த
சுவை மொட்டுக்கள்
நாவினுக்குள்


உப்புப்படிந்த
காற்றோடு கலந்து
அப்பிக் கிடக்கிறது
அலர்ந்த கூச்சல்கள்

ஒற்றையாளாய்
சிப்பி பொறுக்கியபோது
ஒவ்வொருவர் காலடித்தடமும்
கையில் மிருது ரேகையுடன்.

நீலவானம் சேமித்துக்
கொண்டிருக்கிறது
ஒவ்வொருவர் தேடல்களையும்
மூழ்கியவர்கள் வரும்போது கூற.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 21 ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளிவந்தது.


8 கருத்துகள் :

அமைதிச்சாரல் சொன்னது…

அசத்தல் தேனக்கா..

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்கள்...பகிர்வுக்கு நன்றி..

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் கவிதை...

பால கணேஷ் சொன்னது…

இயற்கையுடன் நானும் இணைந்திருப்பது போன்ற மகிழ்வினை உங்கள் கவிதை வரிகள் தந்து விட்டன. சூப்பர்ப்க்கா.

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

மிக அருமையான கவிதை ....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மாதேவி சொன்னது…

நீலவானும் கடலும் எத்தனைதடவை பார்த்தாலும் புதுவிதமாய் தோன்றும்.

ரசனையான கவிதை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சாரல்

நன்றி காமெடி உலகம்

நன்றி தனபால்

நன்றி கணேஷ்

நன்றி பிரியா

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...