எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க

என்ன மட்டும் ஏன் கோடீஸ்வரி ஆக்கணும்னு துடிக்கிறீங்க.இது நான் பல நாளா ஜி மெயில்ல வந்த ஸ்பாம் மெயில்ஸப் பார்த்துக் கேட்க நினைச்ச கேள்வி.

என்ன மட்டுமில்லாம எல்லாரையும் கோடீஸ்வரர்களா ஆக்கணும்னு நிறைய கோக்கு மாக்கு கம்பெனிகள் முடிவு செய்துட்ட மாதிரி இருக்கு. உங்ககிட்ட ஒரு செல்ஃபோன் இருந்தா போதும். நீங்க கோடீஸ்வரர் ஆக சான்ஸ் எக்கச்சக்கம். இப்பவெல்லாம் அட்வான்ஸ்டா செல்ஃபோனிலேயே உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கிடணும்னு ஏகப்பட்ட பேர் துடிக்கிறாங்க.

1. +************ YOUR GSM NUMBER WON 2.5000,000.00GBP, EQUIVALENT TO 221,963,239.52 INR, FOR PAYMENT EMAIL YOUR BIO-DATA TO UNITED BANK LIMITED VIA:UBLTD@LIVE.COM


2. URGENT: YOUR MOBILE NO HAS WON 700,000.00 GBP AND 2012 CHEVROLETLTZ CAR.SEND YOUR NAME, ADDRESS, MOBILE NO AND AGE TOEMAIL: UK********@hotmail.com

3. GOOD NEWS:- YOUR NUMBER HAS WON {$ 1.000,000.00 } GBP IN COCA COLA UK 2012. TO RECEIVE YOUR SEND YOUR NAME, ADDRESS, AGE PHN NO, TO : ********19@GMAIL.COM.

4. CONGRATS!:YOUR MOBILE# HAS WON $ 500,000 GBP FROM THE **** **** EMPOWERMENT AWARD PROMO UK. SEND NAME,AGE, JOB, MOBILE # EMAIL ADDRESS,ID PROOF TO <********075>@W.CN>

என்னைக் கோடீஸ்வரி ஆக்குற இந்த விஷயங்கள்ல எனக்கு விருப்பம் இருந்தாலும் ( ஹிஹி )  எனக்கு வந்த சில டவுட்டுகளை உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன்.

டவுட் நம் 1 #  :இந்த 4 மெசேஜுலயும், (இது ஒரு சாம்பிள்தான். இந்த வாரமே நாலு வந்திருக்கு. ) . என் செல்ஃபோனுக்கே அனுப்பி என் செல்ஃபோன் நம்பரையே கேக்குறாங்களே ஏன். ?

டவுட் நம்2 # : கோடீஸ்வரி ஆக்குற எல்லாருமே மெயில் விலாசத்தைக் கொடுத்துட்டு இங்க இருக்க குப்பன் சுப்பனுக்கெல்லாம் ஏன் அனுப்புறாங்க. அவங்களுக்கு எல்லாம் ஈ மெயில் ஐடி இருக்கா.

டவுட் நம் 3 # வெத்தில பாக்கு விக்கிறவங்க, பால்காரங்க, பொட்டிக்கடைக்காரங்கன்னு விகிதாசாமில்லாம இந்த மெசேஜை அனுப்புறதால என்ன லாபம். தேவையில்லாம செல்ஃபோன் கம்பெனிங்க தர பல விஷயங்களை தெரியாம கிளிக் பண்ணி (  தினப்படி ஜோசியம்., சாமி படம் அனுப்புறது, ஹாட் பிக்சர்ஸ், ஸ்போர்ட்ஸ், ஹலோ ட்யூன்ஸ் இப்பிடி கண்டதையும் அனுப்பி அவங்க வேற க்ளிக் பண்ணத் தெரியாம க்ளிக் பண்ணி ) கண்டமேனிக்கு காசு அழிஞ்சதுதான் மிச்சம். வெறுமன பேச மட்டும்தான் பலருக்கு செல்ஃபோன். அதுக்கு மேல வேற தேவையே இல்லை.

டவுட் நம் 4. #.இந்த மெயில் மற்றும் மெசேஜ் எல்லாம் இங்கிலீஷ்லயே இருக்கே ஏன். நம்ம நாட்டுல எல்லாருமே 100 % எழுதப் படிக்கத்தெரிஞ்சவங்க. எல்லாருக்கும் இங்க்லீஷ்னா  தண்ணி பட்ட பாடுன்னா.

டவுட் நம் 5. # இவ்வளவு பணத்தையும் அவங்களே வச்சுக்காம நம்மள கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கூவிக் கூவிக் கொடுக்க நினைக்கிறாங்களே.. அம்புட்டு நல்லவங்களா அவங்க..

யப்பா முடியலப்பா. இந்த மாதிரி ராண்டமா ( RANDOM ) நம்பர்களை செலக்ட் பண்ணி மெயில் மற்றும் மெசேஜ் அனுப்ப உங்களுக்குத் தில் இருக்கலாம்.  ஆனா அதை அழிச்சு அழிச்சு எங்க கைஎல்லாம் தேய்ஞ்சு போயி எங்களுக்கு தெம்பில்லை. எனவே அனுப்பாதீங்க.

இதுல என் மோட்டார் பாலிசி வேற நான் ரினியூ பண்ணனும்னு இப்ப மெசேஜ். மோட்டார் கார் எல்லாம் எங்கிட்ட இல்லப்பா. செவர்லெட் காரு எங்க ஐயா காலத்துல வீட்டுல இருந்துச்சாம். நான் என்னன்ன செவலைக் காளையைத்தான் பார்த்திருக்கேன்.


அப்பிடியே என்னைக் கோடீஸ்வரி ஆக்கியே தீரணும்னு அடம் பிடிச்சீங்கன்னா இந்த ஃபேஸ் புக் லிங்கைப் பார்த்துட்டு முடிவு செய்ங்க. நாள்ல  2 மணி நேரமாவது நான் இங்கதான் உலாத்துறேன். அதுவே என் மதிப்பு ஷேர் மார்க்கெட்ல  $ 207 தான் மதிப்பிடுது. ஏனா அதனோட இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்க்ஸ் --- இந்த வார சந்தை மதிப்பைப் பொறுத்து  $ 27, இருக்கு.

கற்போம்.காம் க்கு நன்றி.

எப்பவும் என்னோட வலைத்தள போஸ்டு நெட்வொர்க்ஸ் ப்லாக்ஸ் மூலமா ஃபேஸ்புக்குல வெளியாகிடும். அதை நண்பர்களுக்கு மட்டும் என்ற செட்டிங்க்ஸில் இருந்து பப்ளிக் என்ற செட்டிங்குக்கு மாற்றுவேன். இது தினசரி நடைமுறை. ஆனா இன்னிக்கு அது என்னிடம் ப்ரமோட் பண்ண சொல்லி கேட்டது. க்ளிக்கினால் பணம் கொடு என்கிறது. இப்படி இலவச சேவை அளித்த ஃபேஸ்புக்கே எல்லாத்துக்கும் காசு கேக்கும்போது என்ன கோடீஸ்வரி ஆக்கணும்கிற ஒங்க யோசனையை நானே மறுதலிக்க வேண்டியதா இருக்கு. மன்னிச்சுடுங்க கோடி கோடியா கொட்டிக் கொடுக்க நினைச்ச மெசேஜர்களே.
 ***********************************************************


ஒரு மகிழ்ச்சியான செய்தி :-TRICHY TIRUNELVELI, THOOTHUKKUDI 106.4 HELLO FM LA Jeya Kalyani RJ interview seithangka.. for Anjeraipetti programme.:)  (SATHANAIP PENGAL ENDRA THALAIPPIL) broadcasted at 1. 30 pm TODAY. .!

10 கருத்துகள்:

 1. ஹா... ஹா... மீ டூ இந்த விஷயத்துல ஸேம் பிளட்!

  பதிலளிநீக்கு
 2. எச்சரிக்கை பகிர்வு... நன்றி...

  தெரியாமல் கிளிக் செய்தால் வைரஸ் தாக்க வாய்ப்புண்டு...

  பதிலளிநீக்கு
 3. ஏன் இப்படி கோடீஸ்வரி ஆவதில் வெறுப்பு? ஒரு தடவைதான் ஆகிப்பாருங்களேன்? அப்புறம் இருக்கவே இருக்கிறார், நமது போலீஸ் கமிஷனர்!

  பதிலளிநீக்கு
 4. Ha,. Ha... Ha... Mudiyalanga... Yemarukiravar irukum varai idhu thodarnthu kondu than irukum...

  பதிலளிநீக்கு
 5. Ha,. Ha... Ha... Mudiyalanga... Yemarukiravar irukum varai idhu thodarnthu kondu than irukum...

  பதிலளிநீக்கு
 6. Ha,. Ha... Ha... Mudiyalanga... Yemarukiravar irukum varai idhu thodarnthu kondu than irukum...

  பதிலளிநீக்கு
 7. Ha,. Ha... Ha... Mudiyalanga... Yemarukiravar irukum varai idhu thodarnthu kondu than irukum...

  பதிலளிநீக்கு
 8. நன்றி கணேஷ்

  நன்றி சுகுமார்

  நன்றி தனபால்

  நன்றி கந்தசாமி சார்

  நன்றி மகேஸ் செல்லா

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...