எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 24 செப்டம்பர், 2012

வீடும் வீடு சார்ந்த இடமும்..சமுதாய நண்பனில்

அடி பம்பு.,
முக்குச் சந்து.,
மிரட்டும் வண்டிகள்.,
பெட்டிக் கடை,
தண்ணீர் லாரி.,
சிதறிய குப்பைத்தொட்டி.,
வறுபட்ட பஜ்ஜிகள்.,
மழைச்சேறு
மனித முகங்களைச்
சுமந்து கிடந்தது
எனக்கான வீடு..


வீட்டின் முகம் மாற்ற
எண்ணக் கோலெடுத்து
வரையத் துவங்கினேன்.
சதுரச் சாலைகள்.,
நாற்புறமும் மரங்கள்.,
கொஞ்சம் அலைச்சத்தம்.,
கார்களுக்கும் ஓய்விடங்கள்.,
பால்கனிப் பறவையெச்சங்கள்.,
புகைப்படக் கண்காணிப்பு.,
சூழக் கிடைத்தது வீடு்.,
சுற்றுப்புற மனிதர்களற்று.

டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

 1. அன்றைய நிலையும் இன்றைய நிலையும் - காட்சிகள் கண் முன் தெரிகின்றன...

  பதிலளிநீக்கு
 2. மிக அழகான கவிதை.....உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...