புதன், 19 செப்டம்பர், 2012

மழையாய் பாடுதல்

மழையை உறிஞ்சிச்
சுவைத்துக் கொண்டிருந்தேன்..

நீர்ச்சுவை என் மொட்டுக்களில்
தாமரைத் தண்டாய்.

குழந்தையின் எச்சில் போல
சுவையற்றிருந்தது அது.

நீர்க்கதிரைச் பாய்ச்சி
நிலத்தை உழுது கொண்டிருந்தது.


எண்ணெய் தேய்த்துப் பாசிகட்டிய
குழந்தையின் மணத்தை ஒத்திருந்தது.

காய்ந்திருந்த பழைய விதைகளும்
நீருஞ்சிப் பெருக்கத்துவங்கின.

மண்புழுக்களும் என்னோடு சேர்ந்து
சேற்றை ருசித்துக் கொண்டிருந்தன.

ஒரு பட்டன் தவளையைப்போல
திடீர் விதையாய் முளைத்திருந்தேன்.

உழன்று உழன்று செம்புலச் சேறாய்க்
குழன்றபடி ஓடினேன் பூமியையும் ருசித்து.

தாகம் அடங்கி மரங்களில் இலைகளில்
வரவை எழுதினேன், சொட்டுக் கையெழுத்தில்.

தாழ்வாரங்களிலிருந்து க்ரீடம் அணிந்த
குட்டி ராணி்கள் குதித்தபடி இருந்தார்கள்.

மழையின் சலசலப்பு அடங்கியதும்
சில்வண்டுகளைப் போல பாடத்துவங்கினேன்.

எப்போதும் பாடும் பாடலை
அது ஒத்திருந்து கொஞ்சம் முற்றியதாய்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 14 ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளிவந்தது.

7 கருத்துகள் :

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் அருமை கவிதாயினி

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

அருமையான வரிகள்...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Ranjani Narayanan சொன்னது…

'சும்மா' என்று வலைப்பூவின் தலைப்பு சொன்னாலும் ஆழமாக, அறிவுபூர்வமாக இருக்கிறது உங்கள் கவிதைகள் மற்றும் கட்டுரைகள்.

பாராட்டுக்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைத்தது...

Tamilraja k சொன்னது…

புது உணர்வு இதைப் படிக்கையில் ஏற்படுகிறது

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செய்தாலி

நன்றி ஈஸி எடிட்டோரியல் காலண்டர்

நன்றி ரஞ்சனிம்மா

நன்றி தனபால்

நன்றி தமிழ்ராஜா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...