வியாழன், 20 செப்டம்பர், 2012

நல்ல மனம் வாழ்க.

தேனே,நலமா? என்ற கேள்விகளோடுதான் துவங்கும் இவரது கடிதம். முகம் பார்த்ததில்லை. லேடீஸ் ஸ்பெஷல் ப்லாகர் அறிமுகத்துக்காக ( நிஜமாவே பெண்களை மட்டுமே அறிமுகப்படுத்தணும்னு ஆரம்பிக்கட்டது அது. )சுயவிவரப் படம் பார்க்கப் போனால் ஒரு கறுப்புப் பூனைக்குட்டி முகம் மறைத்து மியாவ் என ஒலி எழுப்பியது. யாருடா இந்த அப்சரஸ் என நினைத்தேன் ( ஹாஹாஹா கறுப்பு தேவதை என நினைத்தால் இவர் ஒரு வெண்ணிற தேவதையேதான். )


இவங்க எண்ணமும் எழுத்தும் இலக்கியக் குழுமத்திலும் மகளிர் மட்டும் குழுமத்திலும் இருக்காங்க. தினம் சூரியன் உதிக்கிறானோ இல்லையோ ஒரு இடுகை நிச்சயம் போஸ்ட் பண்ணிடுவாங்க. ஆன்மீகமா, சுற்றுலாவா, செல்லப் பிராணிகளா எல்லாக் கட்டுரைகளிலும் சும்மா நகைச்சுவையில் பொளந்து கட்டி இருப்பாங்க.

போதுங்க சஸ்பென்ஸ் இவங்க யாருன்னு சொல்லுங்கன்னு ஹுஸைனம்மாவும், ராமலெக்ஷ்மியும் சொல்வது கேட்கிறது. அவங்க வேற யாரும் இல்ல. செல்லச்செல்லங்கள் மற்றும் இன்னும் இரு புத்தகங்களின் ஆசிரியை துளசி கோபால்தான் அவங்க. இவள் புதியவள், சூரியக்கதிர் அலுவலகத்தில்தான் முதன் முதலில் துளசியையும் கோபாலையும் சந்தித்தேன்.

அங்கே சகோதரர் பாரதிராஜா மற்றும் காயத்ரி, ஞானதேசிகன், கவிமணி, முத்துக்குமார் இன்னும் பலரை சந்தித்தேன். உயர்தர பிஸ்கட்டுகள், அருமையான டீ என்று பாரதிராஜா உபசரித்தார். மிக அருமையான அலுவலகம் . எல்லா அறைகளிலும் குளிர்சாதனம். கம்யூட்டர் வசதிகள். துளசியும் நானும் அனுப்பும் கட்டுரைகள் எதுவும் விட்டுப் போகாமல் போட்டு இருக்கிறார் பாரதிராஜா.

நான் என்னுடைய புத்தக வேலைகளில் பிஸியாகிவிட என்னால் தொடர்ந்து அனுப்ப இயலாமல் போயிற்று. இன்னும் தொடர்ந்து தன்னுடைய கட்டுரைகளை எழுதி வருகிறார் துளசி. ஒரு சிறப்பான விஷயம் என்ன என்றால் அவர் தான் எழுதும் கட்டுரைக்களுக்கான பணத்தை தனக்காக வாங்கிக்கொள்வதில்லை. ஒவ்வொரு வருடமும் இந்தியா வரும்போது இவள் புதியவள், சூரியக்கதிர் அலுவலகத்துக்கு வந்து அவர் எழுதிய முழுத்தொகைக்கான காசோலையைக் கையெழுத்து இட்டு அதை ஒரு அனாதை ஆசிரமத்துக்கு வழங்குமாறு பாரதிராஜாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போதும் அதுதான் நடந்தது. நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

 ” எதுக்கு சும்மா எழுதுகிறாய் என்றோ, ஏன் அதை எல்லாம் ஆசிரமத்துக்கு கொடுக்கிறாய் , நீ எழுதுறதுனால என்ன பிரயோசனம் என்றோ..வெட்டி வேலை, எழுதாமல் இருக்கலாம் “ இந்த மாதிரி அவ்வப்போது கேட்க நேரும் சம்பாஷணைகள் எல்லாம் அவர்கள் இருவருக்குமிடையில் நடக்கவே இல்லை.

 நல்லமனம் கொண்ட துளசி கோபால் தம்பதியருக்கு இன்று ( கோபால் சாருக்கு 60 வது பிறந்தநாள் விழா). சஷ்டியப்த பூர்த்தி.சென்னையில் இன்று சிறப்பாக நிகழ்ந்திருக்கும். நான் வரவில்லை என்று துளசிக்கு ஏகக்குறை. எனக்கும்தான். என் மனசெல்லாம் அங்கேதான் துளசி. எனக்கும் இன்னும் நம் வலைப்பதிவ சகோதரிகளுக்கும் சேர்த்து இன்னும் இரண்டு கப் பால் பாயாசம் சாப்பிடுங்க!. வலைப்பதிவர் அனைவரின் சார்பிலும் கோபால் சாருக்கும், கோபாலின்( பெருமாளின் நெஞ்சில் துலங்கும்) துளசிக்கும் வாழ்த்துக்கள்.

நல்ல மனம் வாழ்க..! நாடு போற்ற வாழ்க. !!


 வாழ்க வளமுடன், நலமுடன். !

17 கருத்துகள் :

goma சொன்னது…

நாங்களும் வாழ்த்துகிறோம்

goma சொன்னது…

Our good wishes and blessings to the lovely couple

இப்னு ஹம்துன் சொன்னது…

துளசியம்மா கோபால் ஐயா தம்பதிகளுக்கு நல்வாழ்த்துகள்

அப்பாதுரை சொன்னது…

'தேனே நலமா?' - ரசித்தேன். வசதியான பெயர் கொண்ட உங்களுக்கு அதிர்ஷ்டம்.

துளசி-கோபால் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு சொன்னது…

கோபால் சாருக்கும், கோபாலின்( பெருமாளின் நெஞ்சில் துலங்கும்) துளசிக்கும் வாழ்த்துக்கள்.

நல்ல மனம் வாழ்க..! நாடு போற்ற வாழ்க. !!


வாழ்க வளமுடன், நலமுடன். !

நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் தேனம்மை.


கோமதி அரசு சொன்னது…

வலைப்பதிவர் அனைவரின் சார்பிலும் கோபால் சாருக்கும், கோபாலின்( பெருமாளின் நெஞ்சில் துலங்கும்) துளசிக்கும் வாழ்த்துக்கள்.

நல்லமனம் உங்களுக்கு.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

மாதேவி சொன்னது…

மணிவிழாக்காணும் துளசி கோபால் தம்பதியினருக்கு அன்பான வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மணி விழா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...

சே. குமார் சொன்னது…

நல்ல மனம் வாழ்க..! நாடு போற்ற வாழ்க. !!

வாழ்த்துக்கள் அவர்களுக்கும்... இந்தக் கட்டுரையை எழுதிய உங்களுக்கும்...

அமைதிச்சாரல் சொன்னது…

//"நல்ல மனம் வாழ்க."//

அதேதாங்க.. வேற என்ன சொல்லப்போறோம். நெகிழ்ச்சியா இருக்கு.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

ஏங்க, நீங்க ரொம்ப வருசமா எழுதறீங்கன்னு நினைச்சேனே.. துளசி அக்காவை இப்ப‍ தான் பார்க்க‍றீங்களா? இப்ப‍ தான் officialலா வலைப்பதிவர் ஆனீங்கன்னு சொல்லுங்க ! :-)

Vijiskitchencreations சொன்னது…

AMRAAM enakkkum kalwthunka muddy allayed entires varuththan.
Thulasi thamathiyarkku en manamarwtha vaazthtukal.

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான பகிர்வு:)! தம்பதியருக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

பால கணேஷ் சொன்னது…

இந்த விழாவில் முழுமையாகக் கலந்து கொள்ள முடிந்தது என் அதிர்ஷ்டம் தேனக்கா. நீங்க சொன்னது போல மிகச் சிறந்த தம்பதியர் தான். நன்றி.

ஹுஸைனம்மா சொன்னது…

//தேனே,நலமா?//

நல்ல தேனின் சிறப்பே, அது ஒருபோதும் சீர் இழப்பதேயில்லை என்பதுதானே!! :-))

//நல்ல மனம் வாழ்க//
நாடு போற்ற வாழ்க!! :-)))

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோமா

நன்றி இப்னு ஹம்துன்

நன்றி அப்பாதுரை

நன்றி கோமதி அரசு

நன்றி மாதேவி

நன்றி தனபால்

நன்றி குமார்

நன்றி சாரல்

நன்றி பொன்ஸ்.. ஹாஹா ஆமாம்.. 2009 இல் இருந்து எழுதுறேன். இருந்தும் இப்பதான் ஆஃபிஷியல் பதிவரா ஆனேன்.:)

நன்றி விஜி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி கணேஷ்

நன்றி ஹுசைனம்மா..!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...