எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

உரையாடல்..

மீன் சுவாசம் போல்
உள்ளிருந்து வெடிக்கும்
ஒற்றைப் புள்ளியில்தான்
துவங்குகிறது
ஒவ்வொரு உரையாடலும்.

குளக்கரையின் எல்லைவரை
வட்டமிட்டுத் திரும்புகிறது.,
ஆரோகணத்தோடு.


மேலே பெய்யும் மழையோ
முள்க்ரீடம் பதித்து
அவரோகணம் செய்கிறது
குளத்தின் மேல்.

தத்தளிகிறது குளம்
ஊசியாய்க் குத்தும்
அபஸ்வரத்தின் குணங்களோடு.

ஒளிய முடியாமல்
தவிக்கும் குளம்
மீன்களைத் துரத்துகிறது.

ஒளியும் மீன்களாய்
உள்ளோடிப் போகிறது
உரையாடலும்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 21. ஆகஸ்ட் 2011 திண்ணையில் வெளியானது.

3 கருத்துகள்:

  1. மிக அருமையான கவிதை......உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஈஸி எடிட்டோரியல் காலண்டர்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...