எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஆச்சியும் அய்த்தானும்

வழக்கமான தங்கமணி ரங்கமணி கதைதான். ஒரு உப்பு சப்பில்லாத கதைன்னு நீங்க சொல்லிடக் கூடாதுல்ல.. அதுனால ஒரு ஒட்டுதலா செம ஆய்லியான கதைங்க.

ஒண்ணுமில்லங்க.. ஆச்சி சமையல் எக்ஸ்பர்ட். ஒரு நாள் ஆச்சி எலுமிச்சம்பழச் சாதம் பண்ணுனாங்க. சாதத்த குக்கர்ல வச்சிட்டு ஒரு கப்புல கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,கொஞ்சம் வெந்தயம், வர மிளகாயும், இன்னொரு கப்புல பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சியும், இன்னொரு கப்புல உப்பு, மஞ்சப் பொடி போட்டு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு வைச்சிருந்தாங்க.

இந்த சாதத்துக்கு தாளிக்கிற நேரத்துலயா வரணும் சோதனை. ஒண்ணுவிட்ட பெரியத்தாவோ, ரெண்டு விட்ட சித்தப்பாவோ, பள்ளிக்கோடம் படிச்ச சிநேகிதியோ, இல்ல செல்லப் புள்ளங்களோ தெரியல., யாரோ ஃபோனைப் போட்டுருக்காங்க ஆச்சிக்கு. ஆச்சியும் செல்லங்கொஞ்சிக்கிட்டே இருப்புச் சட்டியில சாதம் தாளிக்க எண்ணெய் ஊத்துறப்ப சும்மா நாலு ஸ்பூன் ஊத்தாம ஜார்லதான் எண்ணெய் கம்மியா இருக்கது போல இருக்கேன்னு எண்ணெய் ஜாரை கவித்துட்டாங்க.


செல்ஃபோனில பேச்சு சுவாரசியத்துல ( பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறது மட்டுமில்ல. சமைக்கிறது கூட ஆபத்துதாங்க. அடுப்பை அணைச்சிட்டு அப்புறம் கூட சமைக்கலாம்.) எல்லாத்தையும் போட்டு தாளிச்சு ஆறவைச்ச சாதத்தையும் சேர்த்துக் கிளறிட்டாங்க. அத்தோட அத மறந்து போயிட்டாங்க.

அவுக செட்டியார் அதான் அவுக அய்த்தான் செம பசியோட மத்யானம் சாப்பிட வந்தாக. பொதுவா அய்த்தானுக்குக் கோவமே வராது. கடிஞ்சு பேசுனது கூட கிடையாது. தட்டுல சாதத்தைப் போட்டா எண்ணெய் வழியுது. அய்த்தான் கையில எடுத்துப் பிழிஞ்சு பிழிஞ்சுட்டு இதென்ன தண்ணீ மாதிரி இம்புட்டு எண்ணெய் அப்பிடின்னாக.

ஆச்சி என்ன பண்ணாக தெரியுமா. கண்ணே தெரியாதவக மாதிரி, காது கேக்காத மாதிரி மசால்வடையை பிச்சு எலுமிச்சை சாதத்துல தொட்டு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாக.

அய்த்தான் விட்டாங்களா என்ன .ஒவ்வொரு வாய்க்கும் எண்ணெயைப் பிழிஞ்சுகிட்டே இருந்தாக. விட்டா தீபாவளிக்கு தேய்ச்சுக்க எண்ணெயை அதிலேயே எடுத்துடுவாக போல இருந்துச்சு. ஆச்சி அப்புறமும் பார்க்காத மாதிரி சாப்பிட்டுகிட்டு இருந்தாக.

அய்த்தான் பொறுக்க முடியாம அடுத்ததரம் எலுமிச்சை சாதத்தை வேண்டாம்னுட்டு தயிர்சாதமும் வெங்காயம் வெள்ளைப் பூண்டு மண்டியும் வைச்சிக்கிட்டாக.

அப்பத்தான் பார்க்குறாப்புல ஆச்சி இருப்புச் சட்டியைக் கிண்டிட்டு அட.. ஆமாம். கொஞ்சம் எண்ணெய் அதிகமாதான் இருக்கு. சாதம் பண்ணி நேரம் ஆச்சுல்ல அதுனால எண்ணெய் எறங்கிருச்சு போல. எப்பவும் வடிச்சு கலப்பேன். இன்னிக்கு குக்கர்ல வச்சேன். அது எண்ணெயை உறிஞ்சல போல அப்பிடின்னே சால்ஜாப்பு சொல்லிகிட்டு இருந்தாங்க.

அது எப்பிடி எண்ணெயை அதிகமா ஊத்திட்டேனு ஒத்துக்கிட முடியும். கவுரக் கொறச்சலாச்சே. ஏதோ அய்த்தான் நல்ல ரங்கமணிங்கறதால பிரச்சனையைப் பெரிசாக்காட்டியும் அய்த்தானும் சுட்டிக் காண்பிக்கிறத விடமாட்டாக. ஆச்சியும் அப்புறம் திருத்திகிட்டாலும் அப்பதைக்கு ஒத்துக்கிட மாட்டாக. ஆனா உப்புப் போடுற விஷயத்துல மட்டும் ஆச்சி கெட்டி. தேவையான உப்பைக் கூட போட மாட்டாங்க. வர்றவங்க கேட்டு வாங்கிப் போட்டுக்கணும்.

இவுக கதை இருக்கட்டும். எப்பவும் சமைக்கும்போது எண்ணெய், உப்பு, புளி கம்மியாவே சமைங்க. பிரஷர், தலைசுத்தல் எல்லாத்துக்கும் காரணம் இவைதான். நாராயணா இருதயாலயாவைச் சேர்ந்த டாக்டர் தேவி ரெட்டி முகநூல் ல தம்பி நவீன் கேபிபி கிட்ட உரையாடும் போது எண்ணெய் என்பது நம் உணவுக்கு தேவை இல்லாத ஒண்ணுனு சொல்லி இருக்காங்க. எந்த எண்ணெயானாலும் உபயோகிக்காமல் இருப்பது நல்லதுன்னும். ஆலிவ் ஆயிலானாலும் கூட உபயோகிக்காமல் இருப்பது நல்லதுன்னும் சொல்லி இருக்காங்க.

இப்ப சமையல் குறிப்பெல்லாம் எண்ணெய் இல்லாமல் வருது. அதை சாப்பிட்டு ரத்த அழுத்தம், ஏறாம பார்த்துக்குங்க. என்னது ஊறுகாய், அப்பளமா.. அதை எல்லாம் 50 வயதுக்கு மேல ரங்கமணி கண்ணுல கூட காட்டாதீங்க. குழந்தைகளுக்குக்கூட உப்பு கம்மியா அப்பளம் , ஊறுகாய் வீட்டுலேயே செஞ்சு தரது நல்லது. நம்ம தசைகள் , சதைகளோட செயல்பாட்டுக்கு உப்புதான் ஊட்டம் அளிக்குது. அதுக்காக தயிர்சோத்துல அள்ளிப் போட்டுக்க வேண்டாம்.

என்னிக்காவது வெளியே சாப்பிடலாம்னு போனா ஹோட்டல்கள்ல கொட்டி இருக்குற உப்புல உப்பிப் போயிடுவோம் போல. ரெண்டு வாய்க்கு மேல வைக்க முடியிறது இல்ல. விசேஷக் காரவீடு, அனுவக் கார வீடுன்னு போனாலும் வடை , பணியாரம் சாப்பிட்டா ஒலகமே அதுல இருக்க எண்ணையிலயும், உப்புலயும் தட்டாமாலை சுத்த ஆரம்பிச்சுடுது.

எனவே மெயினா உப்பையும், எண்ணெயையும் முடிஞ்சவரை கம்மியா உபயோகிங்க. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டியதுதான். அதுக்காக உப்பையும் எண்ணையும் கொட்டுனாதான் சிறப்பான சமையல்னு இல்ல. நிறைய சாலட்டுகள், பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கலாம்.

சரி. ஆச்சியையும் அய்த்தானையும் அடுத்து ஒரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

டிஸ்கி:-

செட்டிநாட்டுச் சொல் வழக்கு:-
 
1.  செட்டியார் - கணவரை/ ஆண்மகனைக் குறிக்கும் நகரத்தார் வார்த்தை.

--  ஆண்மகனையும், வயதில் பெரியவரையும் குறிக்கும்/ விளிக்கும் வார்த்தை

2. ஆச்சி :-  செட்டியாரின் மனைவியைக் குறிக்கும் நகரத்தார் வார்த்தை .

--பொதுவாக வயதில் பெரிய பெண்ணைக் குறிக்கும், விளிக்கும் வார்த்தை

-- ( அக்கா ) தமக்கையைக் குறிக்கும் வார்த்தை.

3. அய்த்தான் - ஆச்சியின் கணவர். ( அக்காவின் கணவர் )

4. வெங்காயம் வெள்ளைப்பூண்டு மண்டி - செட்டிநாட்டின் ஸ்பெஷல் ஸைட் டிஷ்,  சாதத்திற்கு தொட்டுக்கொள்வது. சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டி, பச்சைமிளகாய், அரிசிக் கழனி கொண்டு தயாரிப்பது.

5. அவுக , இவுக, எவுக  - அவர்கள், இவர்கள்., எவர்கள் என்பதன் வட்டார வழக்கு.

6. விசேஷக்கார வீடு. அனுவக்கார வீடு - விருந்து வைபவம் நடக்கும் வீடு.

7.  பணியாரம் - வெள்ளைப் பணியாரம், செட்டிநாட்டின் ஸ்பெஷல் உணவு.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


8 கருத்துகள்:

  1. கதை நல்லா இருக்கு. (வெள்ளை பூண்டு மண்டி ரெசிப்பி கொடுங்களேன்)

    கதை சொல்லும் பாயிண்டும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. "ஆச்சியும் அய்த்தானும்" செம சுவையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  3. எலுமிச்சை சாத ரெசிபிக்கு நன்றி.
    மசால்வடை ஒத்துவருமா? ட்ரை பண்ணுவோம். மசால்வடைக்கு எங்கே போறது?

    பதிலளிநீக்கு
  4. ஆச்சியும் அய்த்தானும் கதை மிக அருமை

    பதிலளிநீக்கு
  5. /பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறது மட்டுமில்ல. சமைக்கிறது கூட ஆபத்துதாங்க//

    இத்து பாயிண்ட்!! அது ஆபத்துன்னா, இது பேராபத்து!! :-))))

    //கண்ணே தெரியாதவக மாதிரி, காது கேக்காத மாதிரி பார்க்காத மாதிரி சாப்பிட்டுகிட்டு இருந்தாக. //

    அங்க ஆச்சியும், இங்க ‘(B)பாயம்மா’வும் ஸேம் ப்ளட்!! :-))))

    பதிலளிநீக்கு
  6. நன்றி தென்றல் ரெசிபி போட்டு உங்க முகநூல்லயும் போட்டாச்சு.

    நன்றி மாதேவி

    நன்றி அப்பாதுரை. சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணுங்க.. அவசரத்துக்கு கடையில் கூட ரெண்டு வாங்கிக்கலாம்.

    நன்றி ஜலீலா

    நன்றி ஹுசைனம்மா. ஆமா பாயம்மா..அப்பிடியா.. ஒரே ரத்தமில்லையா.. பெண் ரத்தம்..ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. "ஆச்சியும் அய்த்தானும்" நல்ல நடை.அருமையாக இருக்கிறது.
    ஊருக்கு வெளியே தென்றல் காற்றில் காலாற நடந்ததுபோல் இருந்தது.
    தொடர்க....வளர்க..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...