எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 ஜூன், 2012

இவரும் இவரின் “அவரும்” ISR செல்வகுமார்

திரு செல்வகுமார் மறைந்த நடிகர் திரு ஐ எஸ் ஆர் அவர்களின் மைந்தர். இவர் ஐ எஸ் ஆர் மீடியா வென்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வழியாக குறும்படங்கள் , ஆவணப் படங்கள் இயக்கி தயாரித்து வருகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல் சினிமா பற்றி கருத்தரங்கு நடத்துகிறார். மனவளக்கலைப் பயிற்சியும் கொடுக்கிறார்.


கம்யூட்டர் உலகம் என்ற மாத இதழ் நடத்தி வருகிறார். KEEN கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வழியாக ஒரு 1000 மாணவர்களுக்கு ப்ராஜக்ட் பேஸ்ட் ட்ரெயினிங்க் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு. மாஸ்டர் மைண்ட்ஸ் அகாடமி வழியாக ஆன்லைன் டீச்சிங்க் சேவையும் செய்து வருகிறார். இவர் ஒரு ஐடி ட்ரெயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Z TV, JAINS TV, VIJAY TV, NILA TV இவற்றிலெல்லாம் 1000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராய் இருந்திருக்கிறார். யாதுமானவள், மனசு என்ற குறும்படங்கள் இயக்கி தயாரித்திருக்கிறார். என்ன ஆச்சர்யமா இருக்கா.. இன்னும் இருக்கு..இவரின் அவர் பத்தியும் சொல்லணும்.

சக்சஸ் என்ற திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் , நடிகராகவும் பணியாற்றி உள்ளார். அலெக்ஸாண்டர் டூமாஸ் என்ற ஃப்ரெஞ்ச் திரைப்படமும், SHADES OF BHARATHI என்ற ஆங்கிலப் படமும் இயக்கி உள்ள இவர் தற்போது ,”அவர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷேஷம் என்னவென்றால் இது CANNON 7D - HD -- HIGH DEFINITION என்ற ஹை டெஃபனிஷன் ஸ்டில் காமிராவால் எடுக்கப்படுகிறது. வித்யாசமாய் எடுக்கப்பட்டு கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்க வரும் ”அவரை ” வெள்ளித்திரையில் காணுங்கள்..

 DISKY:- THIS INTRO WAS PUBLISHED IN MARCH 1-15 ,2012 ISSUE OF IN AND OUT CHENNAI FORTNIGHTLY.


6 கருத்துகள்:

 1. Super Introduction...Nice Work Thenammai...Happy to know more about you Selvakumar....

  பதிலளிநீக்கு
 2. Super Introduction...Nice Work Thenammai...Happy to know more about you Selvakumar....

  பதிலளிநீக்கு
 3. அண்ணன் இன்னும் ஹீரோவா நடிக்கல. அனேகமா இந்த போட்டோவ பார்த்துட்டு யாரும் சான்ஸ் கொடுத்தாலும் கொடுப்பாங்க :-)

  பதிலளிநீக்கு
 4. அண்ணன் செல்வ குமார் அவர்களின் "அவர்" வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 5. அண்ணன் செல்வகுமார் அவர்களின் "அவர்" வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. நன்றி இளங்கோ

  நன்றி ப்ரபு கிருஷ்ணா

  நன்றி அரவிந்த்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...