எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 ஜூன், 2012

சௌந்தர்யப்பகை..

சௌந்தர்யப்பகை:-
********************

குத்தீட்டி கண்களில்
சுமந்தலைந்து நாகம்
யார் விழியில்
விஷம் பாய்ச்சலாமென.

தன்னினத்தில் ஒன்றுடன்
பார்க்கக்கூடப் பிடிக்காமல்
முன்ஜென்மப் பகையாகிறது
சம்பந்தமற்ற சச்சரவுகளில்..லாவா உக்கிரத்துடன்
வார்த்தைக் கண்ணிகளை
அங்கங்கே புதைத்து
மாட்டும் கால்களுக்காக காத்து

பயணப்பாதைகள் பழக்கமற்று
தாறுமாறாய்த் துள்ளியோடும்
குறுமுயல்கள் கால் சிக்கி
வெடித்து தெறித்துச் சிதற

புதருக்குள் பதுங்கிக்கிடந்த
அரவம் மின்னும்விழிகளோடு
மெல்லெழும்பி ருசிக்கிறது
எதிரியின் நிணநீர்க்குருதியை..

வாயோரம் வழியும்
வெண் சிகப்பணுக்கள்
வீழ்ந்ததின் வேதனையையை
இரும்புச் சுவையாய்க் கிளர்த்த

சரசரவென பொந்துக்குள்
ஒன்றுமறியாத பாவனையில்
அகமகிழ்ந்து திரும்புகிறது
சௌந்தர்யப் பகை வழிய..

 டிஸ்கி:- இந்தக் கவிதை ஜூன் 5 2011 திண்ணையில் வெளியானது.


5 கருத்துகள்:

 1. ம் (:
  வார்த்தைகளின் அகப்பொருள்
  எக்ஸ்சலன்ட் நோ .......கமெண்ட்ஸ் கவிதாயினி

  பதிலளிநீக்கு
 2. Poetess Sister,

  I have some point to say on the title. Sowndarya Pagai - is used to mean a fight between lovers. This is some thing like "OODAL" in Tamil. May be a little more aggressive etc. But it will not go to the extent of Killing the lover. It is limited to Oodal / Pinakkam. A lady killed her husband in OOTY during their honeymoon. It can not be said as Sowndarya Pagai. He was an innocent victim. If you mean "Eelam Tamils" - it is Genocide.

  பதிலளிநீக்கு
 3. நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி குமார்

  நன்றி செய்தாலி

  நன்றி லெக்ஷி. இது தோழிகளுக்குள்ளும் வரலாம் லெக்ஷி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...