எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஜூன், 2012

தனியே இருக்கும் ஒருவன்..

தனியே இருக்கும் ஒருவன்.;-
******************************

குடும்பம், குழந்தை, குட்டி என
பிக்கல் பிடுங்கல் இல்லாமல்
பிரம்மச்சாரி வாழ்க்கையை
அனுபவித்துக் கொண்டிருக்கிறான்
தனியே இருக்கும் ஒருவன்.


இரவில் வெகுநேரம் விழிப்பதும்
அலுவலகம் செல்லும்
நேரம்வரை தூங்குவதுமாகக்
கழிக்கிறான் வாரநாட்களை.

பகலில் பழச்சாறுகளிலும்
இரவில் பஃபேக்களிலும்
டிஸ்கோதேக்களிலும்
சுற்றிக் கழிக்கிறான்.

வார இறுதியில் பீர் குடிப்பதும்
மிஸ்டுகால் கொடுக்கும் பெண்ணை
பைக்கில் வைத்துச் சுற்றுவதுமாக
செல்கிறது பொழுது.

மோவாய்வரை கிருதா வளர்ப்பதும்
மீசையில்லாமல் தாடி வளர்ப்பதும்
கொஞ்சமுடியைக் கோரையாக்கிக் கொள்வதும்
ஃபாஷன் என நினைக்கிறான்.

குண்டாக இருந்தால்
வாக்கிங் போவதிலும்
ஒல்லியாக இருந்தால்
ப்ரோட்டீன் பவுடரிலும்
நம்பிக்கை கொள்கிறான்.

சுட்ட கோழியைப் பூராத் தின்று
முடி கொட்டியபின்
தைலம் வாங்க அலைகிறான்.

ஃபிட்னெஸ் செண்டர், ட்ரைவிங் க்ளாஸ்,
ஸ்விம்மிங் க்ளப்,
கிடார் கற்றுக் கொள்ளல் என
பணத்தைக் கரைக்கப் பார்க்கிறான்.

கரைக்கமுடியாப் பணத்தில்
உடைகள்,செருப்புகள், ஷூக்கள்,
கெடிகாரங்கள், செல்ஃபோன்கள்,
வாசனைத் திரவியங்கள்
வாங்கிக் குவிக்கிறான்.

ஒரு பக்கம் அழுக்குத் துணிகள்
ஒரு பக்கம் காயும் துணிகள்
ஒரு பக்கம் அணியும் துணிகள்
இவற்றின் நடுவே
மெத்தையில் துயில்கிறான்.

கண்டிக்க ஆள் இல்லாததால்
கே எஃப் சியில் பல்துலக்கி
கொக்கோ கோலாவில்
வாய் கொப்பளிக்கிறான்.

கல்லூரியில் எப்படி இருந்தோம்
வேலை சென்ற புதிதில்
எப்படி இருந்தோம் என
கண்ணாடி பார்த்து
ரசித்துக்கொள்ளும் ஒருவன்

அம்மா அப்பாவுடன் இருந்ததை
அவர்கள் கண்டிப்பை
மறக்க முயல்கிறான்.
நான் உங்கள் பொம்மை அல்ல
என கண்ணாடி பார்த்துக் கூவியபடி.

சம்பாதிக்கும் பணத்தை எல்லாம்
நன்கு செலவழிப்பது எப்படி
என மட்டுமே கற்ற அவனுக்கு
சிறுதுளி்யாவது சேமிப்பது எப்படி
என்ற வித்தை கடைசிவரை
கைவரவேயில்லை.

டிஸ்கி:- இந்தக் கவிதை பிஃப் 15 - 29  இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது. 

 

7 கருத்துகள்:

 1. இது நம் நவ உலகின்
  நவ பாச்சுலர் கலாச்சாரம் கவிதாயினி

  அப்படிப்பட்ட
  சில மனிதர்களின் முகத்தின்
  அடையாளம்

  பதிலளிநீக்கு
 2. கண்டிக்க ஆள் இல்லாததால்
  கே எஃப் சியில் பல்துலக்கி
  கொக்கோ கோலாவில்
  வாய் கொப்பளிக்கிறான்.//


  இந்தக்காலத்து அநேக இளசுகளின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கவிதை தேனம்மை.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை சகோ ..!

  என்னையும் 'கண்டிக்க' பெற்றோர் அருகில் இல்லாததினால் தான் சில நாட்களில் இரவு 3 மணி வரை கணிப்பொறியை தட்டி பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் .. :)

  பதிலளிநீக்கு
 4. நாங்கள் ஆடியபோது
  எங்களை கண்டிக்க
  எவருக்கும் உரிமை இல்லை
  என்று
  உரக்க கூவிவிட்டு
  தனி மனிதனாய்
  ஆடி அனுபவித்து,ஓய்ந்தபின்
  எங்கள் பிள்ளைகள்
  ஆடும்போது
  எவராலும் சகிக்க
  இயலாமல்......
  சே'
  என்னடா செக்கு வாழ்க்கை......

  பதிலளிநீக்கு
 5. வாலிப வயசுக்காரர்களின் அலம்பல்களை அருமையா படம் பிடிச்சுக் காமிச்சுருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 6. நன்றி செய்தாலி

  நன்றி ஸாதிகா

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி செல்வா

  நன்றி சாரல்

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...