எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 ஜூன், 2012

நுகர்வோருக்கு கார்டுகள் ( CARDS) கார்டா /கார்டா..( CORDS OR GUARDS) ..

நுகர்வோருக்கு கார்டுகள் ( CARDS) கார்டா /கார்டா..  ( CORDS OR GUARDS)

கிட்டத்தட்ட 20 வருடங்களாக கார்டுகள் சாமானியனையும் ஆட்சி செய்கிறது. இந்தக் கார்டுக் கலாச்சாரத்துக்கு எல்லாரும் உடன்பட வேண்டியதா இருக்கு. க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு., ஏடி எம் கார்டு போன்றவை இன்றியமையாதனவாகிவிட்டன. சட்டைப் பையில் அல்லது பர்சில் செல்போன் இருப்பது போல மக்கள் இப்போவெல்லாம் கார்டுகளோடதான் பயணிக்கிறாங்க. பணம் நிறைய கொண்டுபோவது ரிஸ்கான இடங்களில் கார்டுகள் ஆபத் பாந்தவனா உதவுகின்றன.ஆனா இந்தக் கார்டுகள் மூலமா எல்லாருக்கும் பயன் மட்டுமேதானான்னு பார்க்கலாம்.

முன்னயெல்லாம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே உபயோகித்து வந்த இந்த கார்டுகள் இப்போவெல்லாம் சம்பளப் பட்டியலோ., வருமானப் பட்டியலோ தாக்கல் செய்யும் எல்லாருக்கும் கிடைக்கின்றன.
ஒரு ஹோட்டல் போனாலும் சரி , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும்போதும் சரி, வெளிநாட்டுக்குப் போகும்போதும் சரி.நிறையப் பணம் கொண்டு செல்லும் தேவையை இந்தக் கார்டுகள் குறைத்துவிட்டன. பை நிரம்ப ஷாப்பிங் பண்ணாலும் பர்ஸ் நிரம்ப கார்டுகள் வைத்திருப்பது பத்தல. இதுல க்ரெடிட் கார்டு கலாசாரம்தான் அனைவரையும் படுத்தி வைச்சதுன்னு சொல்லலாம்.

முதன் முதலா க்ரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டபோது அதை உபயோகிக்கத் தெரியாமல் அந்த அந்த சூத்திரம் புரியாமல் உபயோகித்தவர்கள் கடன் என்னும் கொடும் பிடியில் மாட்டி விழி பிதுங்கினார்கள். நிறைய மான அவமானங்களும் நஷ்டங்களும் அனுபவிச்சாங்க. சில பல இறப்புக்களும் கூட நிகழ்ந்திருக்கு.

சில வங்கிகளில் இந்த கார்டு கான்வாஸ் செய்யவென்றே சில க்ரூப்ஸ் இருக்கும். அவங்க எப்போ பார்த்தாலும் எந்த நம்பர் கிடைச்சாலும் போன் செய்து கார்டு வாங்கிக்குங்க என கான்வாஸ் செய்வாங்க.. ( பர்சனல் லோன் வாங்கிக்குங்கன்னு இப்போவெல்லாம் படுத்துற மாதிரி). நம்ம மிஸ்டர் பொதுஜனமும் இலவசமா கிடைக்குதேன்னு சுண்டல் மாதிரி வாங்கி நாலஞ்சு வைச்சிருப்பார் பர்சில. நிறைய கார்டுகளுக்கு வருட சந்தா குறைவுதான். எனவே கிடைச்சத எல்லாம் அடுக்குன்னு பர்சைத் திறந்த லாட்டரி டிக்கட் மாதிரி நிறைய கலர்ஃபுல் கார்டுகள் இருக்கும்.

பொதுவா வங்கிகள் இந்த சேவையை வழங்குதுன்னாலும் வங்கிகளுக்காக விசா, மற்றும்மாஸ்டர் ஆகிய கம்பெனிகள்தான் கார்டுகள் வழங்குகின்றன. என்னுடைய நண்பர் ஒருவர் இந்த க்ரெடிட் கார்டுகளைப் புத்திசாலித்தனமா உபயோகப்படுத்துறார்.

மாதாமாதம் பில்லிங் டேட் வந்து 22 ஆம் தேதிக்குள் கட்டவேண்டுமென்றால் அவர் கட்டவேண்டிய தொகைகளை 20 அல்லது 22 ஆம் தேதிக்குள்ளேயே கரெக்டாகக் கட்டி விடுவார். மேலும் தேவையான தொகைகளை 23 ஆம் தேதியிலிருந்து கார்டு மூலம் பெற்றுக் கொள்ளத் துவங்குவார். இங்கே தொகைன்னு சொன்னது அதன் மூலம் பெற்ற சேவையை மட்டுமே. அதன் மூலமா அவர் ஒரு போதும் பணமாக எடுப்பதில்லை.

ஆயிரம் ரூபாய் எடுத்தாலும் அதற்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் கட்டவேண்டும். எனவே அவர் பணமாக ஒரு போதும் எடுப்பதில்லை. ஒரு பொருள் வாங்க அல்லது ஒரு ஹோட்டலுக்கு செல்ல அவர் 23 ஆம் தேதியிலிருந்து பில்லிங் டேட் வரை அந்த சலுகைகளை ஒரு பைசா சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் அனுபவித்து விட்டு தன்னுடைய அக்கவுண்டிலிருந்து 20 ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதிக்குள் ஞாபகமாக மாற்றி தான் பெற்ற சேவைக்கானதைக் கட்டி விடுவார். எனவே ஒரு பைசா கூட வட்டியோ சர்வீஸ் சார்ஜோ இல்லாமல் இப்படி புத்திசாலித்தனமான அவர் அந்த சலுகைகளை அனுபவிப்பதற்கு அவருடைய நேர்மையான அணுகுமுறையும் ஒரு காரணம்.

இதன் மூலம் அவர் கார்டுகள் வைத்துவரும் பொதுத்துறை வங்கி அவருடைய லிமிட்டை 25,000/- ( சில்வர் கார்டு). 50.000/- ( கோல்டு கார்டு). `என உயர்த்தி தற்போது அவருக்கு 1.00.000/- ( ப்ளாட்டினம் கார்டு) வழங்கியுள்ளது.

சோம்பேறித் தனத்தாலோ அல்லது மறதியாலோ இந்த க்ரெடிட் கார்டு உபயோகிப்போருக்கு சர்வீஸ் சார்ஜ் மற்றும் வட்டி மற்றும் ஃபைன் தொகை வசூலிக்கப்படும். முன்னே எல்லாம் இந்த கார்டுக்கான தொகைகளை வசூலிக்க கடுமையான முறைகள் பின்பற்றப்பட்டன. இப்போ நுகர்வோர் சட்டம் மூலமா இந்தத் தொல்லைகள் குறைஞ்சிருக்கலாம். ஆனா நாம் வாங்கிய பணத்தை உரிய நேரத்தில் முறைப்படி செலுத்தவேண்டும். அதுதான் நியாயம். இல்லாவிட்டால் கார்டு எல்லாம் வைத்துக் கடன் வாங்கி வரவு எட்டணா, செலவு பத்தணா என செலவைப் பெருக்கி அவதிப்படக்கூடாது. குடும்பத்தாரையும் கடனில் மூழ்க வைத்து அவதிப்படுத்தக் கூடாது.

நம்முடைய லிமிட் என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப கார்டுகளைப் பயன்படுத்துதல் புத்திசாலித்தனம். இதில் டெபிட் கார்டு, மற்றும் ஏடிம் கார்டுகள் நம்முடைய தொகையையே நமக்கு பெற உதவுகின்றன. இதிலும் சில கோல்மால்கள் நடக்கின்றன. ஏடிம் செண்டர்களில் நாம் பணம் பெற்றபிறகு எல்லாவற்றையும் கவனமாக அழிக்கவேண்டும். முடிந்தவரை கார்டுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். லேசான தடயம் கிடைத்தால் கூட போலி கார்டுகள் தயாரித்து அல்லது திருடிய கார்டுகள் மூலம் சில இடங்களில் பணம் திருடும் கும்பல்கள் இருக்கின்றன.

நம்முடைய ஒவ்வொரு ட்ரான்ஷாக்‌ஷனையும் நாம் நம்முடைய மொபைலுக்கு வங்கித் தொடர்பு கொடுப்பதன் மூலமா அறிந்து கொள்ளலாம். ஒரு வேளை நம் கார்டு தொலைந்து போய்விட்டால் வங்கியின் கார்டு டிவிஷனுக்கு போன் செய்து தெரியப்படுத்தி பழைய கார்டுக்கான ட்ரான்ஷாக்‌ஷனை நிறுத்தி வைக்கலாம். மேலும் புதுக் கார்டுக்கும் அப்ளை செய்யலாம்.

இதுலயும் திருடுறவங்க  என்கொயரிக்கு ஃபோன் செய்து நம்ம கார்டு பத்தின தகவல்களை அனுப்பும்படியும் தங்கள் தொலைபேசி எண் மாறிட்டதாகவும் வேற ஒரு நம்பரைக் கொடுத்துடுறாங்களாம்.

இதுல முக்கியம் என்னன்னா நாம் நம்ம தகவல் எல்லாம் சீக்ரெட்டா வைச்சிருக்கோம்னு நினைச்சிருக்கோம். நம்ம ஒவ்வொரு முறை கூரியர் அனுப்பும் போதும். மற்றும் கிரெடிட் கார்டு கம்பெனிகள் நமக்கு கார்டு அனுப்பும்போதும் நம்ம பத்தின சரித்திரத்தையே அதுல போடுறோம். பெயர், முகவரி, வீட்டு அல்லது கைபேசி எண்  எல்லாம் கவர்ல யார் வேணும்னாலும்  பார்க்கிற மாதிரி இருக்கும். மேலும் நாம நம்ம வீட்டுக்கு வந்த தபால்களைக் கிழிச்சுப் போடுறது  இல்ல. அதை அப்படியே குப்பையில போடுறதன் மூலமா நாமே நம்மோட பர்சனல் தகவல்களைத் தர்றோம்னு அர்த்தம்.

எனவே கார்டுகள் விஷயத்தில் உஷாரா இருங்க. கார்டுகளையும் அது வந்த கடிதங்களையும் முறையாகக் கையாளுங்கள்.

வெளிநாடுகளில் முக்கியமான 5 சி ( C ) க்களில் காஷ், கார், க்ரெடிட் கார்டு, கண்டோமினியம், கண்ட்ரி க்ளப் ( CAR. CASH, CREDIT CARD, CONDOMINIUM, COUNTRY CLUB) ஆகியவற்றில் மிக முக்கியமானது க்ரெடிட் கார்டு. எனவே உங்கள் க்ரெடிட் அறிந்து டெபிட் செய்து எப்போதும் பணம் பெற்று கார்டுகளின் ( guards) சேவையில் வளமாக வாழுங்கள்.

டிஸ்கி:- இன்றைய நன்றிகள். சிறப்பு விருந்தினராகவும், சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டமைக்கு நன்றிகள்.

1.லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள். (2010)

2. சென்னை சங்கமம்..100 கவிஞர்களுள் ஒருவராக.(2011)

3. சேரன் மிஷ்கினுடன் "யுத்தம் செய்" கலந்துரையாடல்.

4. ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளி ஆண்டு விழா

5. சென்னை போர்ட் ட்ரஸ்டில் மகளிர் தினத்தில் துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ராவுடன் சிறப்பு பேச்சாளராக 2011. இல்

6.சிறப்பு "நீயா நானா" வில் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிய கருத்து. 

7.அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் அரசுப் பள்ளியில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.

8. சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் கமலா செல்வராஜுடன் சிறப்பு பேச்சாளராக 2011. இல்.

9. விக்னேஷ்வரா லேடீஸ் கிளப் . ராமாவரம். சென்னை

10. ஜவஹர் வித்யாலயாவில் நடனப் போட்டியில் நடுவராக..

11. ஸ்ரீ ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் 110 ஆசிரியர்கள் முன் ஆசிரியர் தின உரை.

12. 106.4 ஹலோ எஃப் எம்மில் திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கருத்து.

13. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு. காரசாரம் நிகழ்ச்சியில்

14. ஈரோடு சங்கமம். பெண் வலைப்பதிவராய் சிறப்பு இணையப் பங்களிப்புக்காக.

15.சூசைபுரம் தூய வளனார் பள்ளியில் மகளிர் தின உரை. 2012.

16. சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில்  டாக்டர் சாந்தாம்மாவுடன் சிறப்பு அழைப்பாளராக. மற்றும் மதர் தெரசா அவார்டு 20126 கருத்துகள்:

 1. மிகமிகப் பயனுள்ள விஷயததைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்று,

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. கார்டுகளையும் கத்தி மாதிரி கவனமாப் பயன்படுத்தணும்.

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஸ்ரீராம்

  நன்றி கணேஷ்

  நன்றி கோபால் சார்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி ஹுசைனம்மா.. கத்தி..!!..:)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...