புதன், 13 ஜூன், 2012

எக்ஸிட் இண்டர்வியூ. மனித வளமும் மனித நேயமும்.

ஒரு கம்பெனியில் சேரத்தான் இண்டர்வியூன்னு கேள்விப்பட்டிருப்பீங்க பொதுவா. ஆனால் ஒரு கம்பெனி அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறவும் இண்டர்வியூ உண்டு. இண்டர்வியூ நேர்காணல் என்றால் எக்ஸிட் இண்டர்வியூ அந்த நிறுவனம் அல்லது கம்பெனியை விட்டு வெளியேற ஒரு நேர்காணல். இதன் தேவை என்னன்னு பார்ப்போம்.


பொதுவா ஒவ்வொரு சாஃப்ட்வேர் கம்பெனி மற்றும் நிறுவனங்களில் எல்லாம் HR - HUMAN RESOURCE - னு கேள்விப்பட்டு இருப்பீங்க. இது என்னன்னா அந்த நிறுவனத்துல இருக்குற ஒவ்வொரு ஊழியரும் இவங்க மூலமாதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாங்க. இவங்க எந்தந்தப் பிரிவு வேலைகளுக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு பார்த்து அந்தந்தப் பிரிவுல பணி அமர்த்தப் படுவாங்க.

இந்த ஹியூமன் ரிசோசர்ஸ் இல் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பவங்களுக்கு இன்னும் சில பணிகளும் இருக்கு. ஊழியர்களின் மனித உழைப்பை நிறுவனத்துக்கு ஏற்ப உபயோகப் படுத்தவும் அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய ஆவன செய்வதும் இவர்கள் பொறுப்பு. வேலை சம்பந்தமான பிரச்சனை மற்றும் காண்டீன் உணவில் அதிருப்தி, அவர்களின் வேலை சம்பந்தமான தேவைகளை இவர்கள் நிறுவனத்தின் மூலம் பேசி வாங்கிக் கொடுப்பார்கள்.

இந்த ஊழியர்களின் ட்ரான்ஸ்ஃபர் சம்பந்தப்பட்ட பணிகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது ஹெச் ஆரின் பணி. முக்கியமா இது ஊழியருக்கும் அந்த நிறுவனத்துக்கும் ஒரு பாலம் போன்றது. இது மனித வளத்தை அந்த நிறுவனம் சரிவரப் பயன்படுத்த உதவுகிறது. சம்பளப் பிரச்சனைகள், போஸ்டிங் ஆகியவற்றையும் சீராக்குகிறது. ஃப்ரீ சோனில் இருப்பவர்களை அடுத்த ப்ராஜெக்டில் சரியாக சேர்ப்பதும் இதன் பணி. அதுவரை அவர்களுக்கான இடைப்பட்ட வேலைகள் ஏதும் இருந்தாலும் செய்ய வைக்கும்.

ஆனால் நாம் இங்கே முக்கியமாக குறிப்பிட வந்தது ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களிடம் இது ஒரு நேர்காணல் நடத்தும் . அது அந்த நிறுவனத்தை விட்டு ஊழியர்கள் ஏன் வேறு நிறுவனத்துக்கு செல்கிறார்கள், பதவியில் அதிருப்தியா. சம்பளத்தில் அதிருப்தியா எனக் கேட்காது. அந்த நிறுவனத்தைப் பாதிக்கக் கூடிய பாலிசியின் பொருட்டு வெளியேறுகிறார்களா என்பதை மட்டுமே கவனிக்கிறது.

இன்னும் பெரிய வங்கிகளில் வருடம் ஒரு முறை ரெக்ரூட்மெண்ட் நடக்கிறது. அங்கே வேலை செய்பவர்கள் பணி அழுத்தம் காரணமாக வேறு வங்கிகளுக்கு செல்கிறார்கள். மனித வளத்தை மேம்படுத்தி உபயோகப்படுத்தத்தான் இந்த மனிதவளத்துறை. ஆனால் அது கம்பெனிகளுக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டு ஊழியர்களின் நியாயமான கருத்துக்களைப் பதிவு செய்வதில்லை. ஒவ்வொரு ஊழியரும் ஒவ்வொரு நிறுவனத்திலும் தன் ரிட்டயர்மெண்ட் காலம் வரை பணி புரிய விரும்புவார்.

புது ஊழியர்களுக்கும் 50 வயது தாண்டிய ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான டார்கெட்டுக்கள், ரேட்டிங்குகள் வைக்கும் நிறுவனம் ஊதியம் மற்றும் போனசை சீனியர் ஊழியர்களுக்கு மட்டும் குறைத்துக் கொடுத்து வயதில் சிறிய எக்ஸ்பீரியன்ஸே இல்லாத புது ஊழியர்களுக்கு நல்ல உயர் கல்விக்கூடங்களில் பயின்றதால் மட்டுமே இதை எல்லாம் அதிகரித்துக் கொடுக்கின்றன. கடைசியில் அவர்கள் சில புது முயற்சிகளும் பாலிசிகளும் கடன் கொள்கைகளும் கொண்டு வந்து கம்பெனியையே நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள்.

இப்படி இல்லாமல் வெளியேறும் நேர்காணலும் ஊழியர்களிடம் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். கம்பெனிக்கு மட்டுமல்ல. இது மனித மனமும் வளமும் சேர்ந்தது. ஒரு வருடம் ட்ரெயினிங்க் கொடுக்கப்பட்ட ஊழியராய் இருந்தாலும் சரி. பல்லாண்டுகளாய் அந்த கம்பெனிக்கு உழைத்தவராயினும் சரி அவரது உழைப்பை நிறுவனம் சரியாக பயன்படுத்த எக்ஸிட் இண்டர்வியூ நேர்மையாக இரு பக்கமும் கேட்கப்பட வேண்டும். கம்பெனிக்கு சாதகமாக கண் துடைப்பாக இருக்கக் கூடாது.குறைகள் சரி செய்யப்பட ஆவன செய்ய வேண்டும் . அது சம்பள வித்யாசமான இருந்தாலும் சரி, பதவி மாற்றமாக இருந்தாலும் சரி.

மனித வளம் காக்கும் துறையில் இருப்போர் நேர்மையுடன் மனிதநேயமும் காக்க வேண்டும்.

 டிஸ்கி:- இந்தக் கட்டுரை மார்ச் 15 - 31 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.


3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

This is what happening in most of the organisation.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பெயரில்லா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...