எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஜூன், 2012

மற்ற மொழிக்காரர்கள் தமிழை நன்கு உச்சரிக்கின்றார்கள்.-- நடிகை ஊர்வசி..

ஊர்வசியிடம் ஒரு பேட்டி:-

1. பலவருடங்களாகத் தமிழ்த்திரையுலகிலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றிக் கொடி நாட்டுகிறீர்கள்.. இது எப்படி? சினிமாவிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய எப்படி முடிந்தது.? தமிழ் ஹ்யூமர் ஹீரோயினா எப்படி உணர்கிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு என்றால் அது கொஞ்சம் யோசிச்சிருப்பேன். இப்போ பத்து வருடங்களாக சினிமா ஆர்டிஸ்டுகள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நிகழ்ச்சிகளும் பங்கேற்பதால் சகஜமான ஒன்றாகி விட்டது. விஷுவல் மீடியாவில் தற்போதைய காலகட்டத்தின் மாற்றம் என்னன்னா டி வி் என்பது மக்களை ஈஸியா அடைகின்ற மீடியாவாகிவிட்டது, இது தவிர்க்க முடியாத மாற்றம்.


தமிழ் ஹீரோயின் ஹ்யூமரும் செய்ய முடியும். தமிழ் இண்டஸ்ட்ரி மட்டுதான் இதுபோல ஹீரோயின்களுக்கும் காமெடிசீன்ஸ் வைத்திருக்கிறது.

2. நந்தனாவை தமிழுக்குக் கொண்டுவந்தவர் நீங்கள். இதுபோல பலரை அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிந்தோம்.. அவர்கள் பற்றி..

இது ஒன்றும் ஸ்பெஷலானது இல்லை.. தமிழில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் நம்மிடம் அவர்கள் பற்றி ஒப்பீனியன் கேட்பார்கள்.. மீரா ஜாஸ்மின் ., நயன் தாரா., ஆகியோர் பற்றி கேட்கப்பட்ட போது சொல்லி இருக்கிறேன். முதலில் ஒரு படம்தான் டைரக்டர் நடிக்க வைக்கும் படம். அடுத்து அடுத்து அவங்க சக்சஸிவா செஞ்சாங்கன்னா அது முழுக்க முழுக்க அவங்க திறமையை பொறுத்துத்தான் நன்கு நடிக்கவும் பேரெடுக்கவும் முடியும்.

3. நடிப்பு ராட்சசி என கமல் உங்களைச் சொல்லி இருக்கிறாரே.. இது பற்றி.

கமல் கூட நடிக்கும் யாருமே சிறப்பாதான் செய்ய முடியும். இது பற்றி அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நான் மட்டும் கமல் கூட நடிக்கும் போது கொஞ்சம் தள்ளி நின்னுதான் நடிப்பேன். அவர் எனக்கு ஏற்றாற்போல நடித்து அந்தக் காட்சியை சிறப்பாக்கிடுவார். அவர் கூட நடித்த படம் அனைத்தும் பிடிக்கும்.

அவரைப் போல ஒரு கலைஞனைப் பார்ப்பது அரிது. டெடிகேஷன்னு சொல்வோமில்லையா அதுதான். மன்மதன் அம்பு போல மைக்கேல் மதனகாமராஜனிலும் ஒரு டெஸ்ட் முயற்சியாக ஸ்லோமோஷன் சாங் பின்னோக்கி உச்சரிப்போடும் சீன்ஸோடும் இருக்கும். அதை அவர்தான் செய்ய முடியும். மன்மதன் அம்புவில் அந்தப் பாட்டில் திருமணம் முடியும்போது பல்லாண்டு பல்லாண்டு என்று வரும் உச்சரிப்பு கூட திருப்பிப் போட்டு எழுதி ஐயர்களுக்கு ப்ராக்டீஸ் கொடுத்து செய்தது. இந்தியாவிலேயே இது கமலால் மட்டுமே முடியும். அந்த அளவு டெடிகேஷன் உள்ளவர் அவர்.

4. உங்களுக்குப் பிடித்த ஒரு நபர் சொல்லுங்கள்..

வாழ்வில் எல்லா காலகட்டங்களிலும் ஒவ்வொருவரைப் பிடிக்கிறது.. யாரை சொல்வது. சின்னப் பிள்ளையா இருந்தபோது அம்மா., அப்பா., அக்காக்கள்., அப்புறம் பள்ளி., கல்லூரித் தோழிகள்., அப்புறம் கணவர்., இப்போ என் மகள் தேஜாலெக்ஷ்மி., ( குஞ்ஞாத்தா) .12 வயதாகிறது. 7 வது படிக்கிறாள். (மகளைப் பற்றிச் சொல்லும்போது முகம் மலர்கிறார்).

 5. நடிகர்களில் கமல் தவிர்த்து யாரைப் பிடிக்கும் .. ஏன்..?

சார்லி சாப்ளின்தான். பேசும் படம் வராத காலகட்டங்களிலேயே நிறைய செய்தவர் அவர். எல்லாரையும் சிரிக்க வைப்பது என்பதுதான் கஷ்டமான கலை. அதை அவர் செய்ததால் ரொம்பப் பிடிக்கும். மேலும் பணக்காரன்., ஏழை., பெரியவன்., சின்னவன் என அனைத்து மக்களின் உணர்வுகளையும் பேசாத படத்திலேயே கொண்டு வந்தவர் அவர்.

ப்ரூஸ்லீயும் பிடிக்கும். இன்னிவரைக்கும் சண்டைக்காட்சிகள்னா ப்ரூஸ்லி படத்ததான் சொல்லிக்கிட்டு இருக்கோம்.

6. நீங்களும் ஒரு ஹீரோயினா அறிமுகமாகி நகைச்சுவை ரோல்ஸ் ரொம்ப செய்திருக்கீங்க.. எல்லா மனநிலையிலும் அப்படி நடிக்க முடியுமா..

சில சூழ்நிலைகளில் நாம் நடிச்சுக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கும். எனக்காக செட் போட்டு இயக்குனர்., தயாரிப்பாளர்., நடிகர்கள் காத்திருக்கும்போது சொந்தப் பிரச்சனைகளுக்காக அதை ., அந்த உழைப்பு அத்தனையையும் ஒத்தி வைக்க முடியாது. எனவே எனக்கு வருத்தமான மனநிலைகளிலும் வந்து நடிச்சுக் கொடுத்திருக்கேன். அது நம்ம ப்ரொஃபஷனல் டிப்ளமசி. அதை செய்தே ஆகணும்.

7. தமிழ் நன்கு உச்சரிக்கிறீர்களே .. எப்படி..?

நான் தமிழ் நன்கு படித்திருக்கிறேன். தமிழை மத்த மொழிக்காரர்கள்தான் நன்கு உச்சரிக்கிறார்கள். இந்த ழ வை மெட்ராஸில் இருக்கும் மத்த மொழிக்காரர்கள் உச்சரிப்பது போல் தமிழர்கள் கூட உச்சரிப்பதில்லை. இந்த ழ தான் தமிழுக்கே உரிய சொல்.

இந்த முறையில் எனக்கு நன்னனைப் பிடிக்கும். டி வியில் நிகழ்ச்சிகள் செய்யும் வரை அவர் பலருக்கு வகுப்புகள் எடுக்கிறார் என நினைத்தேன். பின்புதான் தெரிந்தது அவர் காமிராவை மட்டுமே பார்த்து வகுப்பெடுக்கிறார் என்பது. என்னைக கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர்.

எனக்கு தமிழ்., தெலுங்கு., மலையாளம்., கன்னடம்., ஹிந்தி., இங்க்லீஷ் எல்லாம் பேச தெரியும்.

கல்கியில் சின்னச் சின்ன வாழ்க்கைக் குறிப்புக்கள் என்ற காலம் எழுதி இருக்கிறேன்.

8. தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடிக்கிறீர்கள்.. அதில் உங்களுக்குப் பிடித்தவர் யார்.

என்னோடு நடித்தவர்களில் மலையாளத்தில் மோகன்லாலைப் பிடிக்கும். ரியல் ஆக்டர்.

அப்புறம்., ஷபனா ஆஸ்மி., ஜெயா பாரதி., ஸ்ரீதேவி பிடிக்கும்.

9. சினிமா., டிவி தொடர்., லைவ் ப்ரோக்ராம் இதில் கஷ்டமானது எது.

மத்ததுக்கெல்லாம் இன்னொரு ஷாட் எடுத்துக்கலாம். லைவ் ப்ரோக்ராம்தான் கஷ்டம். பர்ஃபெக்டா செய்யணும். பொதுவா கஷ்டமில்லாத வெற்றியே கிடையாது.

10. எப்போதாவது இதை ஏன் செய்கிறோம் என்ற சலிப்பான மனநிலை வந்ததுண்டா..

அடுத்து அடுத்து வேலைகள் வந்து கொண்டே இருப்பதால் அப்படி ஏதும் இல்லை.

11. பிடிக்காத உடையணிந்து., அல்லது நடிக்கப் பிடிக்காமல் நடித்தது என்று ஏதேனும் படம் உண்டா..?

ஆரம்பக் காலக்கட்டங்களில் ஒன்றிரண்டு படங்களில் பிடிக்காத உடையணிய நேர்ந்தது. அப்புறம் அதுபடி உடையணிவதில்லை. மத்தபடி பிடிக்காத சீன்ஸில் நடிப்பதில்லை.

12. எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க .. நீங்க எப்ப வரப்போறீங்க..

அரசியல் செய்ய மிகப் பெரிய சமாச்சாரம். மிகுந்த அர்ப்பணிப்பு தேவை. நாட்டில் நடப்பது தெரியணும். அதுக்கு நேரம் ஒதுக்கணும். எல்லாரும் வந்துட்டாங்கன்னா அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கு. எனக்கு அதில் இண்டரஸ்ட் இல்லை, நான் பயப்படும் ஏரியா அது.

ஒரு நாள் ஒரு தேசியக் கட்சி அலுவலகம் முன்பு உள்ள பல்டாக்டர் வீட்டுக்கு உறவினரை கொண்டு விட சென்றிருந்தேன். காரை விட்டு இறங்கக்கூட இல்லை. அந்தக் கட்சியின் தலைவர் எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் காரில் அமர்ந்தபடியே பதில் வணக்கம் தெரிவித்தேன். மறுநாள் பத்ரிக்கையில் நான் அந்தக் கட்சியில் சேர்ந்ததாக ந்யூஸ் வந்துவிட்டது. அப்படி ஏதும் நடக்காமலே ஒரு ஸ்கூப் ந்யூஸ் வந்தது.

13. எல்லா காமெடி நடிகர்களும் காமெடி ட்ராக் எழுத என்று வசனகர்த்தா இருக்கிறார்களே. அது போல நீங்கள் உங்கள் படங்களிலும் காமெடி எழுதித்தர என்று தனியாய் வசனகர்த்தா இருந்தால் இன்னும் சிறப்பாய் செய்யலாமே. அப்படி யாரும் இருக்கிறார்களா.

இல்லை.. என்னுடையது படத்தோடு ஒட்டிய காமெடிதான். அது அவர்களுக்கு சரியாய் வருகிறது. எனவே வைத்திருக்கிறார்கள். என்னுடையது படத்தோடு ஒட்டி இருப்பதால் தனியாக செய்தால் படத்தோடு ஒட்டாமல் தனியாக தெரியும். எனவே வைத்துக் கொள்ளவில்லை.

14. மிக அவசியமாக களைய வேண்டிய பிரச்சனை என்று எதைச் சொல்வீர்கள்..

சைல்ட் அப்யூஸ்தான் ( CHILD ABUSE) . குழந்தைகளைக் தவறாகக் கையாள்பவர்களுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத அளவு கடுமையா தண்டனை தரணும்.(அவர் கூறியது இப்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது )

15. தற்போது என்ன என்ன படங்கள்., தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செய்து வருகிறீர்கள்..?

தற்போது நான் நடித்த டைரக்டர் ஸ்ரீராமின் படம் “டூ” ,வேங்கை  மற்றும் மாயாண்டி குடும்பத்தார் படம் எடுத்தவர்களின் “பேச்சி” ஆகியவை. மலையாளத்தில் 3., 4 படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். டிவி ஷோ என்றால் திரு&திருமதி. ஆசியாட் டிவிக்காக ஒரு ப்ரோக்ராம் செய்ய பேச்சு நடந்துகொண்டிருக்கிறது.

டிஸ்கி:- இன்றைய நன்றிகள்..

1.2011 சாஸ்த்ரி பவன், மகளிர் தின விழாவின்  ( கர்ப்பத்துக்கு முன்னும் செக்கப் செய்யப்படவேண்டும் )உரையைக் குறிப்பிட்ட "தீக்கதிரு"க்கும்

2.என்னைப் பற்றி அறிமுகம் செய்த "நம் உரத்த சிந்தனை "இதழுக்கும்,

3. என் முதல் நூல் "சாதனை அரசிகள்" பற்றிய நூல் அறிமுகம் செய்த "இந்தியா டுடே"க்கும்,

4. நூல் விமர்சனம் செய்த "திருச்சி பதிப்பு தினமலர் நாளிதழு'க்கும்.

5.சாதனை அரசிகளின் மாதிரிப் படிவம் கேட்டு எழுதிய "திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி"க்கும்,

6. என் இரண்டாவது புத்தகம் "ங்கா"வை வெளியிட்ட தாமோதர் சந்துரு அண்ணனுக்கும், அதன் நூல் அறிமுகம் செய்த "லேடீஸ் ஸ்பெஷலு"க்கும் மனமார்ந்த நன்றிகள்.! 


15 கருத்துகள்:

 1. தமிழர்கள் பலரே உச்சரிக்க முடியாத எழுத்துதான் 'ழ'
  ஊர்வசி மிகத் திறமையான ஆர்ட்டிஸ்ட்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பேட்டி தேனம்மை. ழ பற்றி சொல்லியிருப்பது அருமை.

  பதிலளிநீக்கு
 3. இதுவே என் கருத்து; அதுவும் சென்னையில் படித்தவர்கள்; தமிழை இரண்டாவது மொழியாக எடுத்து இருந்தாலும், தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் விட, தமிழை முதல் மொழியாக எடுத்தவர்களை விட, நன்றாகவே பேசுகிறார்கள் எழுதுதிகிரார்கள்.

  மேலும், தமிழில் சரளமாக பாட்டும் கவிதையும் வேறு எழுதிகிறார்கள்!

  பதிலளிநீக்கு
 4. மலையாளிகள் ழகரத்தை அழகாக உச்சரிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ் நாட்டை விட்டு வெளியே உள்ளவர்கள் எல்லோரும் தமிழை நன்றாகத்தான் பேசுகிறார்கள்!

  பதிலளிநீக்கு
 6. தமிழனைத்தவிர மற்ற எல்லோரும் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஊர்வசியின் பேட்டி அருமை.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்.

  தமிழ் நாட்டை விட்டு வெளியே உள்ளவர்கள் எல்லோரும் தமிழை நன்றாக பேசுவதை பற்றிய எனது சொந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

  புதுவையை 1980 வாக்கில் பிரிந்து 25 வருடங்கள் கழிந்து மறுபடியும் புதுச்சேரியை திரும்பி நான் பேசிய தமிழையும் வார்த்தைகளின் தெளிவான முழு உச்சரிப்பையும் கேட்ட இரசித்த அனைவரும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். பிரஞ்ச் மொழியில் போதிய இலக்கண மற்றும் பேச்சு மொழியில் போதிய அனுபவம் திறமை காரணமாக அதே வகை அடிப்படை கோட்பாடுகளை என்னை அறியாமல் தமிழுக்கும் அனுசரிப்பதால் நான் பேசிய பேசும் இப்போதைய தமிழ் தெளிவாக இருக்கிறது. மேலும் எனது தமிழில் ஆங்கிலம் கலப்பது அரிதே. மேலும் நான் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது கிடையாது. இணையம் மூலம் அதிகம் தமிழ் படிப்பதும் இங்குள்ள குடும்பத்தினருடன் தமிழ் பழகுவதுதான் நிலமை.

  நன்றி. வணக்கம்.

  பதிலளிநீக்கு
 9. ”ழ” பற்றி அருமையாகச் சொல்லியிருப்பது பெருமையாக உள்ளது. ;)

  பதிலளிநீக்கு
 10. இங்கே இருக்கும் குஜராத்திகள் முக்கியமாகப் பெண்கள் ஆங்கிலத்தை அப்படியே கீவி ஆக்ஸெண்டுலே பேசுவாங்க. காரணம்..... ரொம்ப சிம்பிள். அவுங்க இங்கே உள்ளுர் குஜராத்தி ஆண்களைக் கல்யாணம் கட்டுனபின்பு இங்கே குடியேறினவுங்க.

  அவுங்களுடைய இந்திய வாழ்க்கையில் ஆங்கிலம் படிக்காத பெண்கள். பெரும்பாலும் கிராமத்து ஆட்கள். அவர்கள் புதுமொழியை இங்கே பயிலும்போது இங்கத்து உச்சரிப்பு நல்லாவே வந்துருது.

  தென்னிந்தியர்கள் ஆங்கிலக்கல்விக்கு பழக்கப்பட்டவர்களாதலால்....நம்ம உச்சரிப்பு உள்ளுர் மக்களுக்குப் புரியாம அவுங்க கஷ்டப்படுவாங்க:-)))))

  பதிலளிநீக்கு
 11. நன்றி ஸ்ரீராம்

  நன்றி ராமலெக்ஷ்மி,

  நன்றி நம்பள்கி

  நன்றி ராபின்

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி துளசி

  நன்றி சசி

  நன்றி கணேஷ்

  நன்றி மாசிலா

  நன்றி கோபால் சார்

  நன்றி மாதேவி

  நன்றி சுரேந்திரன்

  பதிலளிநீக்கு
 12. நன்றி ஸ்ரீராம்

  நன்றி ராமலெக்ஷ்மி,

  நன்றி நம்பள்கி

  நன்றி ராபின்

  நன்றி வரலாற்று சுவடுகள்

  நன்றி துளசி

  நன்றி சசி

  நன்றி கணேஷ்

  நன்றி மாசிலா

  நன்றி கோபால் சார்

  நன்றி மாதேவி

  நன்றி சுரேந்திரன்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...