எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2022

நித்யகல்யாணி

நித்யகல்யாணி

“தாத்தா..தாத்தா எங்கே இருக்கீங்க “என்றபடி வீட்டுக்குள் ஓடி வந்தாள் கல்யாணி. ஸ்ரீவாரி அபார்ட்மெண்டில் இருக்கும் குட்டி சுட்டிகள் எல்லாம் இன்னும் வெளியில் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தன.

“ என்னடா கல்யாணி.. இங்கே பால்கனியில் இருக்கேன். இங்கவாடா குட்டி “ என்றார் நித்யானந்தன். ஓடிப்போய் ஈஸிசேரில் சாய்ந்திருந்த தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்தாள் கல்யாணி. வங்கி ஒன்றில் தணிக்கையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த நித்யானந்தனுக்கு வயது எழுபது.

”டிவியில் சுதந்திர தின அணிவகுப்பு வருது தாத்தா பார்க்கலாம் வாங்க.”. டிவியில் அணிவகுப்பு சோஷியல் டிஸ்டன்ஸிங் படி நடந்து கொண்டிருந்தது. ”லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் என மார்ச் ஃபாஸ்ட் பழகியபடி தாத்தாவின் கைபிடித்து ஹாலுக்கு அழைத்து வந்தாள்.

மாஸ்க் அணிந்த வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்த தாத்தா “வருஷாவருஷம் உங்க ஸ்கூல் மார்ச் ஃபாஸ்ட்ல, கலை நிகழ்ச்சிகள்ல எல்லாம் கலந்துப்பே. இந்த வருஷம் கொரோனா வந்து கெடுத்துருச்சு “ என்றார் பேத்தியின் தலையை வாஞ்சையாகத் தடவியபடி.

யூ ட்யூபில் 831 - 840 வீடியோக்கள்.

 831.பினாங்கு தண்ணீர்மலையான் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JTuZMV6NRLE


#பினாங்கு, #தண்ணீர்மலையான், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PINANG, #THANEERMALAIYAN, #THENAMMAILAKSHMANAN,



832.ஓம் சக்தி அம்மா l ராமசாமி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=yQuhw2tukGc


#ஓம்சக்திஅம்மா, #ராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன் 

#OMSAKTHI, #RAMASAMY, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 23 டிசம்பர், 2022

கருப்பை நம் உயிர்ப்பை - 1. பெண்ணின் உடல் நலம்.

கருப்பை நம் உயிர்ப்பை


பெண்ணின் உடல் நலம்.

பெண்ணின் உடல் நலம் என்பது ஒரு குடும்பத்தின் உயிர்நாடியைப் போன்றது. பெண்ணின் உடல் நலம் சீராக இருந்தால்தான் குடும்பம் சிறப்பாக நடக்கும். ஒவ்வொரு மனிதரும் பெண்ணின் உடல் அமைப்புப் பற்றியும் அவளின் உடல் உபாதைகள் பற்றியும் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. இன்றும் குடும்ப அமைப்பு சிறந்தோங்கும் இந்தியச் சூழலில் பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது மட்டுமல்ல, பெண்ணைப் பேணிக்காப்பதும் அவசியம்.

கருப்பை நமது உயிர்ப்பை. ஏன் அப்படி? பத்து மாதம் ஒரு கருவை உயிருடன் சுமந்து உலகுக்கு அளிப்பதாலே அது உயிரைத் தாங்கி இருக்கும் உயிர்ப்பை. ஒரு பெண் பூப்படைந்தவுடனே சில வீடுகளில் திருமணத்தை நடத்தி விடுவார்கள். ஒரு மலர் மலர்ந்தவுடன் கசக்கி முகர்வதைப் போன்றது அது. பூப்படைந்து ஆறு வருடம் கழித்த பின்புதான் அப்பெண்ணின் கருப்பை குழந்தையைச் சுமக்கத் தேவையான அளவு பக்குவப்படும். அப்போதுதான் பிறக்கும் குழந்தைகளும் எந்த ஊனமும் இல்லாமல் முழுமையான குழந்தையாய்ப் பிறக்கும்.

வியாழன், 22 டிசம்பர், 2022

கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்

 கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்


ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.

யூ ட்யூபில் 811 - 820 வீடியோக்கள்

811.Siddhu dont like soft toys. :)

https://www.youtube.com/shorts/13m0HBjYapA


#சித்தேஷ், #சித்து, #தேனம்மைலெக்ஷ்மணன், 

#SIDDHU, #SIDDESH, #THENAMMAILAKSHMANAN,



812.திருப்புகழ்_95/95  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=uYNfT8SOVoM


#திருப்புகழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPUGAZH, #THENAMMAILAKSHMANAN,