எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2016

ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.

761. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா..

762. living with mere images..


763. சுத்தி இருக்கவங்கள விட்டு எங்கோ இருக்கவங்களத் தேடி ஓடுறோம்.
‪#‎என்ன_டிசைன்_நாம‬

764. மந்திரப் பேழை என நினைத்தால்.
.
.
மரணபயம் காட்டிட்டாங்கடா பரமா..
‪#‎யாரோ‬.

765. Aayiram karangal maraithirunthalum aathavan maraivathillai ...( aathavanukku female gender enna..?..) .. Happy morning dear all.

766. முதலில் புகைப்படங்களை
அழிக்கத் துவங்கினேன்.
வெட்டி வெட்டிக் குப்பையில் போடும்போது
ஞாபகங்களை அழிப்பது எளிதானது.

767. ஆணியன் ரோஸ்டா ஆ ஆ

சனி, 28 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.



341. போரிடுதல் - குழந்தைப் பேறின் போது உடன் இருத்தல் . பிரசுபம் நிகழ உதவி செய்தல். புவாகத் ாய் க்கான் இருப்பார்கள். சிலுகில் மாமியார் நத்ாரோ மற்ற உறினோ அருகிந்து பார்த்ுக் கொள்வைப் போரிடல் என்பார்கள்.

342. . தங்கம் உரசிக் கொடுத்தல் - பிறந்த குழந்தை நாவில் தங்கம் உரசி தொட்டு வைப்பார்கள்

343. பிள்ளையைத் தொட்டிலில் போடுதல் - பட்டுத் தொட்டில் கட்டிப் போடுதல்.

344. எண்ணெய் தேய்த்துப் பாசி கட்டல்.  - பிறந்த குழந்தைகளை பட்டுத் தொட்டிலிட்டு எண்ணெய் தொட்டு வைத்து கழுத்தில் கறுப்புப் பாசி போடுதல்.

345. ராராட்டுப் பாடுதல். – தாலாட்டுப் பாடுதல். இது பற்றி நிறைய எழுதலாம்.
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆராரோ
யாரடிச்சா நீ அழுதே,
அடிச்சாரச் சொல்லி அழு.
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே.
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே.

மற்றும் நிறையப் பாடல்கள் உண்டு. கிடைக்கும்போது பகிர்கிறேன்.

346. . பிள்ளை பிறந்தது கேட்டல். – ஒரு சில்வர் வாளியில் ஓரிரு சீப்பு வாழைப்பழம் இரண்டு தேங்காய் வைத்துக்கொண்டு போய் பிள்ளை பிறந்தது கேட்டு வருவார்கள். 

செவ்வாய், 24 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.



 321. ஆடிச்சீர் - திருமணம் முடிந்த முதல் மூன்று வருடங்களுக்கு ஆடி மாதத்தில் வழங்கப்படும் சீர். ஆனால் இப்போதெல்லாம் முன்பே ஏதோ பணமாகக் கொடுத்து விடுகிறார்கள் . அல்லது இது இப்போது நடைமுறையில் இல்லை எனலாம். 

322. விளையாட்டுப் பொட்டி வேவு - பிள்ளை பிறந்ததும் எடுக்கப்படும் வேவு. விளையாட்டுச் சாமான்களைப் பரப்புவார்கள். வெள்ளி வேவுக் கடகாத்தில் பச்சரிசி தேங்காய் வைத்து ஆயா வீட்டில் இருந்து வேவு இறக்குவார்கள். இதற்கு அப்பத்தா வீட்டில் பலகாரம் செய்வார்கள். 

323. பொங்கல் சீர் :- சிலர் பொங்கல் சீரை வேவாகவும் எடுப்பதுண்டு. 

324. வேவு :- வீட்டு நிலை வாசலில் நடுவீட்டுக் கோலம் போடப்பட்டிருக்கும், அதன் முன் ஸ்லேட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். இந்த ஸ்லேட்டு விளக்கை அந்த வீட்டில் உள்ள திருமணமாகப்போகும் பையன்/பெண்ணின் அப்பத்தாவோ அத்தை முறை உள்ளவர்களோ ஏற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். அதன் முன் வேவு இறக்கும் பங்காளிகள் தலையில் தலைப்பா கட்டி வேவு இறக்குவார்கள். 

325. மாமவேவு :- இது திருமணத்தன்று ஆயா வீட்டில் இருந்து முதல் பையன் அல்லது பெண் திருமணத்தன்று திருமணத்துக்கு முன் வேவு எடுப்பார்கள். இதில் பரங்கிக்காய் , இலைக்கட்டு, பச்சரிசி, தேங்காய், வெல்லம் போன்றவையும் சீராக எடுத்து வரப்படும். 

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...