எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 ஜனவரி, 2023

பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

2.பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை நிகழ்வு

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண், எதிர்கால குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக `பூப்பு நீராட்டு விழாக்கள்’ கிராமம், நகரம் என வித்தியாசமில்லாமல் இப்போது நடத்தப்பட்டு வருகின்றன. க்ரீடங்கள், நகைகள், பட்டாடைகள் அணிவித்துப் பலவித அலங்காரங்கள் செய்து மேடையில் அம்மன் உருவில் காட்சிப் பொருளாகப் பெண்ணை ஆக்கிவிடுகின்றன.

விழாவாகக் கொண்டாடவில்லையென்றாலும் இதற்குரிய சடங்குகள் பெரும்பாலான சமூகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாம் பூப்படைதலைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள்.

புட்டு சுத்துதல் என்றும், நலுங்கு வைத்து நீராட்டல் என்றும் சில சமூகத்திலும், பெண் சடங்கானதைப் பேரனுண்டா எனக் கேட்டு இல்லம் வரும் உறவினர்களுக்கு மிட்டாய்த்தட்டு வைத்தும், ரொட்டி சுட்டு ருதுவான பெண்ணின்மேல் நொச்சி இலையில் வைத்து சடங்கு கழித்தும்,
உறவினர்களுக்கு வடித்தும் இந்நிகழ்வைச் சில சமூகத்தினரும் தம் இல்லங்களிலேயே கொண்டாடுகின்றார்கள்.
பூப்படைதலைக் கொண்டாடும் நிகழ்வாகவும் மாதாந்திரத் தீட்டைத் தீண்டத்தகாக நிகழ்வாகவும் ஆக்கி வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.

யூ ட்யூபில் 891 - 900 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 891.நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு l  நூல் பார்வை l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Ws7i4uaZJdw


#நாட்டுக்கோட்டை, #நகரத்தார்வரலாறு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATTUKKOTTAI, #NAGARATHAR, #THENAMMAILAKSHMANAN,



892.மந்திரப்பூனை l வைக்கம் முகம்மது பஷீர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=j4gT6CP6ytM


#மந்திரப்பூனை, #வைக்கம்முகம்மதுபஷீர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MANTIRAPOONAI, #VAIKKOMMUHAMADBASHEER, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 10 ஜனவரி, 2023

நித்யகல்யாணி – 2.

 நித்யகல்யாணி – 2. 

“கல்யாணி கல்யாணி. வெய்யில் வந்திருச்சு பாரு “ என்று எழுப்பினார் பாட்டி பகவதி. “என்ன பாட்டி இப்பவே எழுப்புறீங்க.. இன்னும் கொஞ்சம் தூங்குறேன். அதான் ஸ்கூல் இல்லீல்ல. தாத்தா எங்கே ? “ என்றபடி புரண்டு படுத்தாள் கல்யாணி.

”தாத்தா மாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்கப் போயிருக்காரு. நீ எந்திருச்சுப் பல் தேய்ச்சுட்டு வா. “ என்றபடி பாட்டி உள் சென்றார். கல்யாணி எழுந்து பல் தேய்த்துவிட்டு பாட்டி கொடுத்த நாட்டுச் சர்க்கரை போட்ட பாலை அருந்திக் கொண்டிருக்கும்போது தாத்தா நித்யதேவன் வீட்டிற்குள் நுழைந்தார்.

“தாத்தா எங்கே போனீங்க. தர்ப்பணம்னா என்ன ? “ என்றாள் கல்யாணி. தாத்தா பேத்தியின் கைபிடித்துப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார். “ இறந்துபோன நம்ம முன்னோர்களுக்குக் கொடுப்பதுதான் தர்ப்பணம்.”

“அப்பிடின்னா என்ன செய்வாங்க தாத்தா “.

”இறந்து போன நம்ம முன்னோர்களுக்கு மாதம் ஒரு முறை அவங்க இறந்த திதியில் கொடுப்பது திவசம். வருடமொருமுறை கொடுப்பது தர்ப்பணம். எள்ளும் அரிசிமாவும் கலந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைத்து நம்முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் கரைத்து விடுவதுதான் தர்ப்பணம்.”

“நாம அதை ஏன் செய்யிறோம் தாத்தா”.

யூ ட்யூபில் 881 - 890 வீடியோக்கள்.

 881.விராலிமலை திருப்புகழ் l  திருமுறை 7 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=rZ6BJvDI01I


#விராலிமலை, #திருப்புகழ், #திருமுறை7, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VIRALIMALAI, #THIRUPPUGAZH, #THIRUMURAI, #THENAMMAILAKSHMANAN, 



882.திருவகுப்பு - 2  l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=BG5urCQ_muM


#திருவகுப்பு, #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVAGUPPU, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 9 ஜனவரி, 2023

யூ ட்யூபில் 871 - 880 வீடியோக்கள்.

 871.பெருவாழ்வு அருள்நோக்கு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=y_5GWJtPS1g


#பெருவாழ்வு, #அருள்நோக்கு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUVAZHVU, #ARULNOKKU, #THENAMMAILAKSHMANAN, 



872.வருகைப்பத்து l அருளிசைமணி மீயன்னா சேவுகன்செட்டி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ZG0tIFc9S9Y


#வருகைப்பத்து, #சேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VARUGAIPATHU, #SEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,