2.பூப்படைதல் & மாதவிடாய் ஒரு இயற்கை
நிகழ்வு
விழாவாகக் கொண்டாடவில்லையென்றாலும் இதற்குரிய சடங்குகள் பெரும்பாலான சமூகங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு நாம் பூப்படைதலைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், இப்போது நடைபெறும் சில பூப்பு நீராட்டு விழா மேடையில் வீற்றிருப்பது இளம் பெண்கள் அல்ல, குழந்தைகள்.
புட்டு சுத்துதல் என்றும்,
நலுங்கு வைத்து நீராட்டல் என்றும் சில சமூகத்திலும், பெண் சடங்கானதைப் பேரனுண்டா
எனக் கேட்டு இல்லம் வரும் உறவினர்களுக்கு மிட்டாய்த்தட்டு வைத்தும், ரொட்டி சுட்டு
ருதுவான பெண்ணின்மேல் நொச்சி இலையில் வைத்து சடங்கு கழித்தும்,
உறவினர்களுக்கு
வடித்தும் இந்நிகழ்வைச் சில சமூகத்தினரும் தம் இல்லங்களிலேயே கொண்டாடுகின்றார்கள்.
பூப்படைதலைக்
கொண்டாடும் நிகழ்வாகவும் மாதாந்திரத் தீட்டைத் தீண்டத்தகாக நிகழ்வாகவும் ஆக்கி
வைத்திருக்கிறது இந்தச் சமூகம்.
