எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 செப்டம்பர், 2018

சூதாட்டம் கேடு செய்யும். தினமலர். சிறுவர்மலர் - 34.


சூதாட்டம் கேடு செய்யும்.

நீதி நெறி தவறாமல் நாட்டை பரிபாலனம் செய்து பார்புகழும் ராஜாவா இருந்தும் என்ன, சூதாட்டம் ஆடியதால் நாடு மனைவி பிள்ளைகளை மட்டுமல்ல உருவம் கூட கூனிக்குறுகி கருப்பாக ஆன ஒரு ராஜாவின் கதை பத்தி பார்க்கப் போகிறோம் குழந்தைகளே. பன்னிரெண்டு வருடத்துக்குப் பின்னாடி அவர் தன் சுய உருவம் பெற்று இழந்த அனைத்தையும் அடைந்தார் என்றாலும் அந்தப் பன்னிரெண்டு வருட காலமும் ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சாரு.  எல்லாம் சூது  படுத்திய பாடு. அது என்னன்னு பார்ப்போம் குழந்தைகளே.

நிடாத நகரை ஆண்ட நிசத் என்ற அரசருக்கு இரு மகன்கள். நளன் மற்றும் குவாரா. இந்த நளன்தான் இக்கதையின் நாயகன். ஒரு முறை நளன் தன்னுடைய தோட்டத்தில் உலவும்போது சில அன்னபட்சிகளைக் கண்டான். அவற்றுள் ஒன்று நளனின் அழகைக் கண்டு வியந்து ’அவனுடைய அழகுக்கீடானவள். அவனுக்கு மனைவியாகும் தகுதிவாய்ந்தவள் விதர்ப்பதேசத்து அரசிளங்குமரி தயமந்தியே’ என்று கூறியது. தமயந்தியிடமும் தூது சென்று நளனின் அழகு பற்றி சிலாகித்தது.

திங்கள், 3 செப்டம்பர், 2018

கோலமிட்டு சாந்தமடைவோம்.

ஸைமாட்டிக்ஸ் என்னும் தனிப்பிரிவு அதிர்வுகளுக்கும் கோலங்களுக்கும் உள்ள உறவை விளக்குகிறது.

///ஒரு உலோகத் தகட்டில் சிறிது மணலைத் தூவி அதை அதிர்வு ஏற்படுத்தக் கூடிய ஜெனரேட்டரோடு இணைத்தால் ஒவ்வொரு ஒத்ததிர்வுக்கும் ஏற்ப மணல் துகள்கள் வெவ்வேறு வடிவமைப்புப் பெறுகின்றன. இப்படி அதிர்வானது வெவ்வேறு வடிவமைப்புகளை உருவாக்குவது போல இந்த வடிவமைப்பில் அமைந்த கோலங்களைப் பார்க்கும் மனிதருக்குள் அவை நல்ல அதிர்வுகளை உருவாக்கும். அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுக்கும். இதைக் கொண்டு சிக்கலான மனநிலை வியாதி கொண்டவரையும் குணமாக்கப் பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வண்ணங்கள் வடிவங்கள் கொண்டு மனித மனங்களில் மாற்றங்கள் நிகழ்த்த இயலும் என்று நரம்பியல் அறிவியல் நிரூபித்துள்ளது. இதற்கு ஸைமோதெரஃபி என்று பெயர். ////

எனவே கோலமிட்டு சாந்தமடைவோம் அன்புத் தோழியரே. 

இது இருதய கமலம் கோலம். இருதயம் சிறப்பாக ஆரோக்கியமாக செயல்பட இந்தக் கோலத்தைப் பூஜையறையில் போட்டு வணங்கினால் நல்லது.

காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.


1001. வெள்ளன்னவே - சீக்கிரமாகவே. விடியற்காலையிலேயே, அதி விரைவாக.

1002. தொட்டுக்க - இட்லிக்கு சாதத்துக்குத் தொட்டுக்க வைக்கும் பதார்த்தைக் குறிப்பது. வெஞ்சனம், துவையல், அவியல், குருமா, சாம்பார், பச்சடி, சட்னி, குழம்பு,  அல்லது க்ரேவி போல.  


1003.அவங்காய்ந்தது - காணாததைக் கண்டது போல் நடந்துகொள்பவர்களைக் குறிப்பது. குறிப்பாக உணவு கிடைக்கும்போது.,  உணவுக்கில்லாமல் பட்டினி கிடந்தது போல் நடந்து கொள்ளும் முறை. வரட்சி, தீசல் பிடித்தது. 


1004. அண்டசாரல - பத்தவில்லை. ஒருவருக்கு எதையாது கொடுக்கும்போது அதை அவர் போதாது என கொடுத்தவரை உணர வைத்தல். அல்லது உணர்தல். ஒரு பொருள் எவ்வளவு உண்டாலும் அல்லது கிடைத்தாலும் ஒருவருக்கு அதில் திருப்தி இல்லை/பத்தவில்லை. அல்லது அது உடம்பிலோ மனசிலோ சாரவில்லை என்றும் கொள்ளலாம். 


1005. பச்சைவாடை அடிக்குது - குழம்பு கொதிக்கும்போது பச்சைவாடை போகும் வரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கச் சொல்வார்கள். மசாலா வேகாத வாடைதான் ”பச்சை வாடை”. குழம்பில் மல்லித்தூள் பச்சை வாடை அடிக்கும் எனவே புளி சாம்பார்ப்பொடி போட்டு நன்கு கொதித்த பின் இறக்கச் சொல்வார்கள். வெங்காயக் கோஸ், குருமா போன்றவற்றிலும் தேங்காய் வரமிளகாய் சோம்பு மசாலா நன்கு கொதித்த பின் இறக்கவேண்டும். இல்லாவிட்டால் பச்சை வாடை அடிக்கும். உண்ண முடியாது. 



தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தினமலர். சிறுவர்மலர் - 33.


தந்தை சொல்லைக் காத்தவன்/தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.

ந்தை சொல்லைக் காக்கவேண்டும் தாயையும் காக்க வேண்டும். என்ன செய்வது?  முதலில் தந்தை சொல்லைக் கேட்போம் பின் தாயைக் காப்போம் என முடிவெடுத்துக் கீழ்ப்படிந்தான் ஒரு இளம் துறவி. அவன் பெயர் பரசுராமன். அவன் சந்தித்த இக்கட்டு என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

திரேதாயுகத்தில் ஜமதக்கினி என்ற முனிவர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் ரேணுகாதேவி. அவர்களுக்கு நான்கு மகன்கள். நான்காவது மகனின் பெயர்தான் பரசுராமன். அவன் தாய் தந்தை இருவர் மேலும் பாசம் கொண்டிருந்தான்.

சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவருக்கு கோடாலி போன்ற பரசு என்றொரு ஆயுதம் கிடைத்தது. அந்த ஆயுதத்தைத் தன் வலது கையில் எப்போதும் வைத்திருப்பார். தலையில் ஜடாமுடியும் துறவிகளுக்கே உரிய காவி உடையும் அணிந்திருப்பார். உடல்பலமும் மனோபலமும் மிக்கவர்.
Related Posts Plugin for WordPress, Blogger...