எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.



அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும்

அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள் 

உன்னை வரைந்த கைகளுக்கே ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பாயென்றால் அதற்குப் புகழுரை எழுதிய எனக்கு உன் மனதின் ஒரு பக்கத்தையாவது பரிசளிக்க மாட்டாயா என்ன ?

இளவேனிலும் முதுவேனிலும் மழையும், குளிரும் முன்பனியும் பின்பனியும் வருவதுதான் வாழ்க்கை சுழற்சி என்றால் உனக்கும் எனக்குமான தொடர்பு முன்பனியோடு மூடிப்போனதென்ன ?. இருக்கட்டும் என்றாவதுன் மனமேகம் விலகும்தானே. முழுநிலவாய் உன்னை அங்கங்கே கண்டும் விடையறியாமல் தவிக்கும் நான் உன் அதிரூபனையும் சிண்ட்ரெல்லாவையும் இரண்டாண்டுகளாய்ச் சுமந்து திரிகிறேன்.

போகட்டும் நான் துரத்தியது மாரீசப் பொய்மானல்ல என்கூடச் சிரித்துத் திரிந்த என் சகப் பெண்மான்தான். இது மானுக்கு மான் எழுதும் மனம் தகர்ந்த மடல் கூட. காரணம் தெரியாமல் கானோடு அலைகின்றேன். சரி போகட்டும் என்னோடு ஏதொன்றும் தெரியாமல். புதையட்டும் என்னுள்ளே என் வருத்தம் உனைத் தாக்காமல்.

இன்றுனது பிறந்தநாளென்று ஊர் சொல்லும். போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரிகள். ஒளிந்து ஒன்றும் பார்க்கவில்லை ஓவியமாய் நீ தெரிந்தாய். உன் சிரிப்பும் உன் நகைப்பும் எதிரொலித்துக்கிடக்குதடி.

உனக்குப் பிடித்த அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் எனக்குப் பிடித்த கதை சொல்கின்றேன் இனி..

”அவன் கடவுளானவன், கர்ப்பத்தின் சூட்டை அணைப்பாகத் தருபவன், அவன் மையல் பேசும் தையல் அவள். அவர்கள் கூரையைக் காதல் மழையால் நனைத்துக் கொண்டிருக்கிறது வானம். தேவகுலமென்று மீட்க தேவதைகள் வந்து தாபக் குளத்தில் அவர்களை நீராட்டிவிடுகிறார்கள். கோர்க்காமல் கிடக்கின்றன வீடெங்கும் அறுந்த மணிமாலையாய் அவர்களின் முத்தங்கள்,  அந்த நனைதலின் சுகம் வேள்வித்தீயில் அணைகிறது.  இருந்தும் முடிசூட்டு விழாவுக்குத் தயாராய் திருவீதி உலாப்போக வந்தேகுகிறது காதல், அவள் வாசிப்பில் பெருநூலாகும் பாக்யம் வாய்க்கிறது தேநீர் ஈந்தவனுக்கு. காட்டுக்கூந்தலில் அலையாடினவனைக் கதிர் அறுக்கக் கூப்பிடும் கள்ளி அவள். முத்தம் வேண்டிக் கொல்லும் கோட்டான் அவன், அவர்களுக்கானவைகளைத் தோற்றுவித்துக்கொண்டு கடவுளானவர்கள் & அரிச்சுவடியில் ஆரம்பித்து அகராதிகளையே எழுதியவர்கள், நீ என் பிள்ளை நான் உன் தாரம் எனத் தாய்மையானவள் அவள், கரங்கள் அடைகாக்க அவளைப் பிரசவிக்கும் அவனும் தாயுமானவன், முத்தத்தில் அவன் மூத்த குடி, அவளோ காதல் தந்த காயங்களோடு களைப்பாறிக் கொண்டிருப்பவள், அவளை ஒளித்துக் கொள்ள மறுக்கிறதாம் குளம், மோகக் குளத்தில் புரவிகள் மேவ வெட்கம் அணிந்தவள் விரட்டுகிறாள், அண்டபகிரண்டமும் ஆண்டவளாகிறாள், அவர்கள் உடன்கட்டை ஏற நீறுபூத்துக் கொண்டிருக்கின்றன உடல்கட்டைகள், அவன் நெஞ்சுக்கூட்டில் சாயும்போதெல்லாம் கூடுவிட்டுக் கூடுபாய்கிறாள் அவள். அமுதையும் தேனையும் மறுதலித்து அவனைக் குடிக்கிறது அவளின் இதழ்கள்.

கடைசியாக ப்ரியங்களின் தோட்டத்தில் நீ உனக்கென படைத்துக் கொண்ட தேவதை சிண்ட்ரெல்லா “ என முடிக்க அஹா அஹா ஆஹாஹா எத்தகைய தேவதையவள் எனத் தரிசித்துக் கொண்டிருந்தேன்.

இவர்கள் இருவரும்  மேன்மையை மென்மையைச் சமைப்பவர்கள். அன்பாலே சமைந்தவரக்ள். அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும். அடங்காத காதலில் நிரம்பித் ததும்புபவர்கள்.

”கல்லாகவே இருந்திருக்கும் கல், சொம்பு நீரால் தீர்கிறது பெருந்தாகம், ஒற்றுமை வேண்டும், உயிர்வலி அறிதல் வேண்டும் , புழக்கடைகள் இல்லாத புழக்கம்,ரத்தத்தில் தோய்ந்த மண், மரங்களை வெட்டிய இடத்தில் வரையேட்டோடு மனிதனின் மூளை, எல்லை பார்த்துப் பாதையைக் கட, பெரிதினும் பெரிது கேட்டோம், கொழுத்த நிலையில் இருக்கும் ப்ரியங்கள், விஞ்ஞானம் குடியேற தன் ஞானம் துறந்த வானம்,நூல்களில் நூலானவள், படிப்பினையில் பல்கலைக் கழகமானவள், கூடைக்குள் கோழியாய் கொக்கரிக்கும் மனம் கொண்ட சுதந்திர தேவி,சிறுபான்மை இனம் களையுங்கள் தினமெடுப்பவர்களே, வாழும் அன்பை உயிர்ப்பிக்க நேரமில்லை தோழா, பருவகாலங்கள் மட்டுமே பருகிக் கொண்டிருக்கிறது என் பருவத்தை, என்று குத்துவிளக்காகும் இந்த வீதி விளக்குகள், பெண்மை மறந்த போராளி, கன்னித் திரை கிழியா காதல் வாழும் சொர்க்கம், இங்கிதம் தெரியாத மழை, பொதுக்கழிப்பிடமாய் இல்வாழ்க்கை, வாய்கட்டாமல் தின்று வாய்க்கரிசி வாங்கும் நாட்கள், நானும் ஒரு வீராங்கனைதான், முழங்கைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கண்ணீரும் காதலும், சில்லறை வணிகம் என்ற பெயரில் சீரழிந்து விடுவோமோ, பிரித்து மேயத் தெரியவில்லை ப்ளாஸ்டிக் பைகள் வேண்டாமே., தாழப் பறத்தல் என்பது தரை இறங்க அல்ல, ”

என சொல்லாட்சியிலும் பொருளாட்சியிலும் மிரட்டும் கவிதைக்குச் சொந்தக்காரி இந்த அதிரூபனின் காதலி. காதலில் மட்டுமல்ல, இயற்கை, சுற்றுச்சூழல் சீரழிவு, விலங்குகள் பாதுகாப்பு, மனிதருக்குள்ளே வர்க்க பேதம், எனவும் நிறைய யோசிக்க வைத்தவள் இந்த அதிரூப சுந்தரியும்.

மிக மிக ரசித்த கவிதை.

தொட்டில் தாவரம்.

எப்போது

வித்திட்டாய்

தெரியவில்லை

இப்போது

முளைவிட்டேன்

தொட்டித் தாவரமாகவே

இருந்து

தொலைகிறேன்

பெரிதாய் கிளை விட்டு

மண்ணில் வேரூன்ற

மனமில்லை

உன்னில்

கிளைத்த எனக்கு.

ஆம் தமிழ் நீ இங்கு சுகம் நான் அங்கு சுகமா. இனிய பிறந்தநாள் வாழ்த்துகளடி, அன்பு முத்தங்களும். 

நூல் :- அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும். 

ஆசிரியர் :- தமிழரசி

பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், சென்னை

விலை:- ரூ 70/-


சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.


சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்

பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள்

அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை தனது சாதுர்யப் போக்கால் நாசுக்காகச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் துயருக்கு இரங்கி, மாபெரும் சக்கரவர்த்தியும் உணர்ந்து செயல்படும் வண்ணம் அமைந்தவை பீர்பால் கதைகள்.

அக்பர் பாதுஷா, அவரின் அமைச்சர் பீர்பால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. மகேஷ்தாஸ் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றிய கதைகள் எல்லாம் சிரிப்பூட்டும் சிந்தனைக் கதைகள். இதை மொழி பெயர்த்தவர் திரு. ஏ. எஸ். வழித்துணை ராமன்.

புதன், 21 செப்டம்பர், 2016

கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.

1001.நீர் நிறைய மீனிருக்க
மனங்கொத்திப் பறக்கிறது
வலசைப் பறவை.

1002. கடைசி விருந்தைப் போல
மறக்காத ஓவியமாகிறது
கடைசி உரையாடலும்.

1003.நிலையற்ற சந்திரனையும்
நறுங்கும் சூரியனையும் தூரப் போட்டு
நட்சத்திரங்கள் சிதறும்
சொற்சித்திரங்களில்
லயிக்கிறது பூமி.

1004.விதையாய் முளைத்துப் பெருகும்
உன் ஞாபகங்களை
எப்படிப் புதைப்பது.

1005.கடலில் நீந்திய மீனுக்குத் தொட்டிச் சிறை.பெருநகரத்தில் உலவியவனின் தீபகற்பமாய்க் குடும்பம்.  தனித்தனித் தீவுகளாய் மனிதம். அலையில் மின்னும் சூரியனாய் நம்பிக்கை

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1



சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1

வா மணிகண்டன் சொன்னது போல சினிமாவாகவோ, வீடியோவாகவோ, தொலைக்காட்சி கார்ட்டூனாகவோ பார்க்கும்போது ஏற்படும் சிந்தனையற்ற மொந்தைத்தனத்தைவிட அவற்றையே புத்தகங்களில் படிக்கும்போது மனக்கண்னில் தோன்றும் சித்திரங்கள் உருவாக்கும் அதிசய உலகம் அற்புதமானது. புத்தக வாசிப்பு கற்பனா சக்தியை மேம்படுத்தும். கிரியேட்டிவிட்டியையும் தூண்டும்.