எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஏப்ரல், 2015

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.



ப்ரிய மாமா
”மா” ”மா” நீங்கள்.
இந்தக் கவிதை
உங்கள் மனவீட்டுக்குள்
அரிக்காத வண்ணப்புகைப்படமாய்
இருக்க வேண்டாம்
ஒரு சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள அனுமதியுங்களேன்

எப்படி முடிகிறது உங்களால்
மனத்தடி மண்ணில்
கப்பும் கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க நினைக்கும்
ப்ரிய விதைகளை
ஆழப் புதைக்க

இன்னும் எனக்கு நீங்கள்
ஆச்சர்யம் உண்டுபண்ணும்
மனிதர்தான்

செவ்வாய், 31 மார்ச், 2015

மது.. பாலா..



மது.. பாலா..
==============
”நான் ரொம்ப ஸ்ட்ராங்க்ன்னு  நெனைச்சிண்டு  இருந்தேன் மது. ஆனா நான் ஒரு கூடு. வெறும் கூடு மட்டுமில்ல மதூ.. உளுத்துப்போன கூடு. தட்டினா உதுந்து போயிடுவேன்னு புரிஞ்சிடுத்து மதூ. யெஸ். “ என்று கூறிக் கண்கலங்கிய பாலாவை மதுவால் என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை.

எது பேசினாலும் ஆறுதல் கூறப்போனால் கூட அந்த நேரத்தில் சரியாய்க் கூற முடியாதோ என்றிருந்தது.

“நான் அப்பாடான்னு நிம்மதியா சாஞ்சுக்கவும் ஒரு தோள் வேணும். என் தோள்லே சாயவும் ஒரு ஆள் வேணும். நான் இப்பிடிப் பேசுறது உனக்குத் தப்பாக்கூடப் படலாம் மதூ. “

காதல்னா இவ்வளவு சிரமம் இருக்காது பாலாம்மா.. ‘ எடுக்குறதும் கொடுக்குறதும்தான் ப்யூர் லவ். உரிமையோட இருக்குறதும்தான்.. கெஞ்சிக் கேட்டு வாங்குறதில்லை. “ சொல்ல நினைத்தும் மௌனித்தான் மது.

திங்கள், 30 மார்ச், 2015

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:- ( மலைகள் இதழ் )

பூதமும் பிசாசுகளும் பேய்க்கதைகளும்:-
****************************

பக்கத்தில் நெருக்கி அமர்ந்து
பேய்க்கதைகள்
பேசத்துவங்கினார்கள்
இருள் அடர்ந்த இரவில்.


கம்மாய்ப் பேய்,
ஊரணிப் பேய்,
ஆலமரத்துப் பேய்,
அரசமரத்தடிப் பேய்,
மயானப் பேய்,
முச்சந்திப் பேய்,
எக்ஸார்சிஸ்ட் பேய்

சனி, 28 மார்ச், 2015

சாட்டர்டே போஸ்ட். யாழகிலன் சனா அபிமன்யு இன்று வாழும் ஈழம்.

யாழகிலன் அகிலன் முகநூலில் நட்பாக அறிமுகமாகி என் பிள்ளையானவன். என்னைத் தாயாக வரித்தவன், என் தோழிகளை சித்திகளாகவும் விளித்தவன் . சென்னையில் கயல்விழி இல்லத்துக்குத் திருமணமானவுடன் மருமகள் சனாவுடன் சென்று சந்தித்து வந்திருக்கிறான். சென்னையில் விழி வானலை எஃப் எம் நடத்தி வந்தான். முன்பு ஒரு முறை முகநூலில் சுயவிவரம் பார்த்தபோது  பெயர் மாற்றமும் பால் மாற்றமும் செய்திருந்ததால் நீக்கினேன். அதைப் பார்த்து அம்மா என்னை ஏன் நீக்கினீர்கள் நான் இருக்கும் இடம் அப்படி, அதனால் சுயவிவரங்களை மாற்றினேன் என்றான். கேட்டவுடன் பரிதவித்தது மனது. அப்போது எழுதியது இக்கவிதை.

”என்பிள்ளை யாழகிலன்.”

சில வருடங்களுக்கு முன் இருப்பை மறைத்தும் மறைந்தும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் அவர். புலம் பெயர்தல் பற்றிய அவலங்கள் தெரிந்தபின் குருதி கசிந்தது மனதில்.
 

சென்ற வருடம் அழகுப்பெண் சனாவுடன் திருமணம் நடந்து அபிமன்யு என்ற அழகான வீரனுக்குத் தந்தையாகி உள்ளார் அகிலன்.

வெள்ளி, 27 மார்ச், 2015

தேன் பாடல்கள் . கண்ணழகும் கண்ணனும்.

121. நினைக்கத் தெரிந்த மனமே.

ஆனந்த ஜோதியில் தேவிகா பாடும் பாடல். சோகத்தைப் பிழிந்து உருக வைக்கும் பாடல். எம்ஜியார் தேவிகா புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதில் ஜப்லா என்ற கழுத்து டிசைன் வைத்த ரவிக்கையை அணிந்திருப்பார் தேவிகா.  ” பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா. இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா.. “ என்ற பதில் கிடைக்காத கேள்விகளோடு முடியும் பாடல்.

122. வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன்.

மெல்லிய இசையோடு இருக்கும் பாடல். மனதை வருடும் காட்சிகள்.  கண்ணழகு பார்த்திருந்து .. காலமெல்லாம் காத்திருந்து .. என்று மயங்கிப் பாடுவார் எஸ் எஸ் ஆர் .. விஜயகுமாரியைப் பார்த்து.