எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 8 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.



20 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6. 12.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அழைப்பு வந்தது.

பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள், பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்கள் ஆகியோரோடு வலைப்பதிவர் & எழுத்தாளரான என்னையும் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர் திருமதி செந்தமிழ்ப்பாவை அழைத்திருந்தார்கள்.



இந்தக் கருத்தரங்கம் லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.


பேராசிரியர் திரு. நா. இராஜேந்திரன் ( துணைவேந்தர் ) அவர்கள் தலைமை ஏற்றார்கள். இவர் தன்னுடைய வாசிப்பனுபவத்தையும் பல்வேறு பட்ட புத்தகங்கள் பற்றிய நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.

பேராசிரியர் திரு . முருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கருத்தரங்க ஆய்வுக் கோவையை பிரான்சைச் சேர்ந்த தமிழறிஞர் திரு . ஜே. பி. பிரசாந்த் மோரே வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார். இவர் அச்சு இயந்திரம், வீரமாமுனிவர் பற்றியும் நூல்களின் பதிப்பீடு, மற்றும் வரலாறு பற்றிக் கூறினார்.

பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்களும் பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். பேராசிரியர் அய்க்கண் ஒக்கூர் மாசாத்தியார் போன்ற சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் பாடல்களை சிறுகதைக்கு ஒப்பீடு செய்தார்கள். பேராசிரியர் இராகுலதாசன் அவர்கள் சிறுகதை வரலாற்றைக் கூறினார்கள்.

நான் பல்வேறு காலகட்டங்களில் - தசாப்தங்களில் -  சிறுகதைகளின், நாவல்களின் கதைக்கரு/ கருப்பொருள் பற்றியும் அவை மாறுபாடு அடைந்து வருவது குறித்தும் பேசினேன். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கூடக் கடக்காத சிறுகதை நாவல் ஆகியன பெற்ற பரிணாமங்களையும், வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், இணைய இலக்கிய வளர்ச்சி பற்றியும்  கூறினேன்.



அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் துணைவேந்தர்.




திறனாய்வாளர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களில் ஒரு பகுதியினர்.

மாணாக்கியர்.

துணைவேந்தரின் தலைமை உரை.

கருத்தரங்கக் கோவையைப் பெற்றுக்கொண்டபோது.




நான் உரையாற்றியபோது.

சென்ற ஆண்டு இங்கே ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் 36 கவிஞர்களில் ஒருவராகக் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு சிறுகதை, புதினம் ஆகியவை பற்றி உரையாட வாய்ப்புக் கிட்டியது அழகப்பர் என்னும் தெய்வம் அளித்த பெரும்பேறு.

மண்ணின் மைந்தர்களை அழைத்து கௌரவித்த அழகப்பர் பல்கலை என்னும் ஆலயத்துக்கும் துணைவேந்தர் அவர்கட்கும், தமிழ் உயராய்வு மைய இயக்குநர் பாவை விளக்காம் செந்தமிழ்ப்பாவை அவர்கட்கும் அன்பு வந்தனங்கள். 

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...