எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 3.

லலித் கலா அகாடமியின் வாயிற்புறம் நிறைய சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான் ஓவியர் வீரசந்தானத்தை முதன் முறையாகப் பார்த்தேன். தாடி மீசையுடன் ஜிப்பா போட்டிருந்தவர் புகைத்துக் கொண்டிருந்தார். உள்ளே ஊர்ப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாதி விற்பனையும் ஆகி இருந்தன.  

அங்கே நான் பார்த்த மிச்ச ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
உள்ளே சென்றதும் விகடன் ஆசிரியர் ரா கண்ணன், சந்திரா, கவின்மலர்  ஆகியோர் இருந்தார்கள்.  நாணயம் விகடனில் என் மாமா நாகப்பன் எழுதுவது பற்றி கண்ணன் குறிப்பிட்டுப் பேசினார். சந்திரா, கவினோடு கைகுலுக்க ஆசைப்பட்டேன் . அணுக்கமான சூழ்நிலை தென்படாததால்  நகர்ந்து சென்று ஓவியங்களை பார்வையிடத் துவங்கினேன். அதன்பின் ஓவியர் கோபுலுவை நடுநாயகமாக அமரவைத்து புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான மனித முகங்கள் சிற்பங்களில் .



பத்மவாசனின் இருமுக மும்முக யானைகள். இந்தியன் இங்க் .

மரத்தடியில் நிற்கும் இரு குதிரைகள். மரம் & பூ எதுவென்று தெரியவில்லை. அக்ரிலிக் பெயிண்டிங்.

விலை 10,000/- & 15, 000/-
அனிதா தாஸின் ஆயில் பெயிண்டிங்கில் அகவும் மயில்.விலை ஒன்றும் அதிகமில்லை 35, 000/- ரூபாய்தான் !. 
ஒரு காலரியில் விதம் விதமான மனிதர்களும் அவர்களின் மனோபாவங்களும்.
குதிரையும் சேவலும் இரு பெண்களும் தோரணங்களும்.

ஆண்  பெண் நடுவில் தொட்டாற்சிணுங்கியாய் ... இறக்கைப் போல சுருளும் எண்ணங்களின் தன்மைகள். நினைவலைகள்.

புராதன பிம்பமான ஒரு பெண்.

குடும்பம், கணவன், மனைவி, குழந்தை கொண்ட வண்ணமயமான உறவுகள்.
இன்னொரு கேலரியில் காஞ்சிப் பெரியவர், விநாயகர், சிவசக்தி, அன்னை தெரசா, அழும் சிறுவன், நண்பர் ஜீவானந்தனின் ஓவியம் ( நீலநிறத்தில் பெண்ணும் மயிலும் உள்ளது. ), பெண் முகம், புல்லுக்கட்டு சுமக்கும் தாயின் முந்தி பிடித்துச் செல்லும் குழந்தை, புக் ஷெல்ப் ஆகியன ஓவியமாய் உள்ளன.
மலர்களும் முகங்களும்.

மீன்களும் மனிதர்களும்

சிந்தனைவயப்பட்டிருக்கும் பெண்.
 பெரியார், மடியில் இருக்கும் குழந்தைக்கு கதை சொல்லும் தாய், மற்றும் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள்
யாளி, சிற்பம் & உருவக வகை ஓவியங்கள். .
நம்ம ஃபேவரைட் , விநாயகரும் ஆஞ்சநேயரும்.

இரு யானைகள் உள்ள ஓவியம் லோகப்பிரியன் . லைன் ட்ராயிங். விலை ரூ. 5000/-   

கோயில் பிரகார வரந்தைகளில் இரு இளம் பெண்கள் நடந்துவருகிறார்கள்.

வாட்டர்கலர் பெயிண்டிங். ஓவியர் இளையபாரதி. விலை ரூ . 20,000/-
மேளதாளத்தோடு சாமி ஊர்வலம்.

டிஸ்கி :-இதையும் பாருங்க.

1. தானே துயர் துடைக்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள்..

2. லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2  

3. லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். -  3. 

5 கருத்துகள்:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. ரசனையான ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்த்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் ஓவியம் ஏதும் வாங்கவில்லையா

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி பாலா சார். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...