எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
வியாழன், 29 ஆகஸ்ட், 2019
நசிகேதன் கேட்ட கேள்விகள் . தினமலர் சிறுவர்மலர் - 30.
சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர் முடிந்தவரை குழந்தைகளுக்கு விளக்கம் சொல்வார்கள். ஆனால் நசிகேதன் என்ற சிறுவன் எமனிடமே சென்று சில கேள்விகள் கேட்டான். அதற்கு எமனும் பதில் அளித்தார். அக்கேள்விகள் என்னென்ன என்று பார்ப்போம் குழந்தைகளே.
வாஜ்ரவஸ் என்றொரு முனிவர் இருந்தார். அவர் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெற விஸ்வஜித் என்னும் யாகத்தை நடத்தி வந்தார். அவரது மகன்தான் நசிகேதன். மிகுந்த அறிவாற்றலும் அழகும் நிரம்பிய குழந்தை அவன்.
யாகம் நடத்தியவர்கள் யாகத்தின் முடிவில் எளியோர்களுக்குத் தானம் கொடுப்பார்கள். கோதானம் என்று பசு தானமும், பூமிதானம் என்று நிலமும் கொடுப்பார்கள். இது அவரவர் சக்திக்கு உட்பட்டது. ஆனால் வாஜ்ரவஸ் முனிவர் பால் சுரப்பு வற்றிய பசுக்களை கோதானம் கொடுத்தார். தரிசான நிலங்களை பூமிதானம் செய்தார்.
அதைப் பார்த்து நசிகேதன் வருந்தினான். சிறுவனாய் இருந்தாலும் அடுத்தவர்க்குச் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரோடி இருந்தது. அதனால் அவன் தன் தந்தையிடம் சென்று “ தந்தையே என்னை யாருக்குத் தானம் கொடுக்கப் போகின்றீர்கள் ? “ எனக் கேட்டான்.
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019
திங்கள், 26 ஆகஸ்ட், 2019
ரைண்டெர்ம் ( ரைன் டவர் & ரிவர்) .மை க்ளிக்ஸ். RHEINTURM. MY CLICKS.
ட்ரபீஸிய வடிவத்தில் கண்ணாடிச் சுவர்கள் கொண்ட ஒரு டவரைப் பார்த்திருக்கிறீர்களா. அதுதான் ரைன் டவர். ஜெர்மானியர்களின் கட்டுமான அறிவுக்கு எடுத்துக்காட்டாக நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இருந்தாலும் இந்த டவரின் அமைப்பு வெகுவாகவே ஆச்சர்யப்பட வைத்தது. இதில் இரு தளங்கள் உண்டு. முதல் தளத்தில் அப்சர்வேஷன் டெக்கும் இரண்டாம் தளத்தில் சுழலும் உணவகமும் செயல்படுகிறது.
டுசில்டார்ஃப் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டவர் ஒரு தொலைத்தொடர்பு கோபுரம். ஜெர்மனியின் வெஸ்ட்பாலியா என்ற கூட்டாட்சி மாநிலமான டுஸில்டார்ஃபில் அமைந்துள்ளது . 1979இல் இருந்து 1981 வரை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த கான்க்ரீட் டவரின் உயரம் 174.5 மீட்டர்.
170 மீட்டர் உயரத்தில் இதன் அப்சர்வேஷன் டெக் இருக்கிறது. ரேடியோ, டிவி, எஃப் எம் ஆகியவற்றுக்கான ட்ரான்ஸ்மீட்டர் ஏரியல் மேலும் டிவிபி ( டிஜிட்டல் விடியோ ப்ராட்கேஸ்டிங் ) க்கான வான்வெளி ஆண்டனாவும் பதிக்கப்பட்டுள்ளது.
1981 டிசம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த டவரின் அப்சர்வேஷன் டெக் தினமும் காலை 10 மணியிலிருந்து இரவு 11.30 வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.
இதன் மேல் தளத்தில் ஒரு சுழலும் உணவகம் உள்ளது. இந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமானால் அங்கே பியர் அருந்தச் சென்றால் மட்டுமே அனுமதி உண்டு !!! ( பூமி என்னைச் சுத்துதே சுத்துதேன்னு பாடலாமில்ல :)
இந்த கோபுரத்தின் தண்டு மீது ஒரு ஒளிரும் சிற்பம் டிஜிட்டல் கடிகாரமாக வேலை செய்கிறது. இதை ஒளிநேர நிலை என்றழைக்கிறார்கள். வித்யாசமான இதை வடிவமைத்தவர் ஹார்ஸ்ட் ஹெச். பாமன் என்ற சிற்பி. உலகத்திலேயே ரைண்டெர்மில் இருக்கும் இந்த டிஜிட்டல் கடிகாரம்தான் மிகப் பெரிய டிஜிட்டல் கடிகாரம். !
இந்த ரைன் நதி யூரோப்பில் இருக்கும் மிகப் பெரும் நதிகளுள் ஒன்று. வோல்காதான் முதல் நீண்ட நதி. இது இரண்டாவது பெரிய நதி. ஸ்விட்ஜர்லாந்தில் உற்பத்தி ஆகி ரோம், ஃப்ரான்ஸ், இத்தாலி, டச், ஜெர்மனி , நெதர்லாண்ட் என அநேக ஐரோப்பிய நாடுகளில் ஓடி நார்த் சீ எனப்படும் கடலில் கலக்கிறது. இதன் மகாத்மியங்களை இன்னும் வரும் இடுகைகளில் பகிர்வேன். :)

சனி, 24 ஆகஸ்ட், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)