எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ரைண்டெர்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரைண்டெர்ம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ரைண்டெர்ம் ( ரைன் டவர் & ரிவர்) .மை க்ளிக்ஸ். RHEINTURM. MY CLICKS.

ட்ரபீஸிய வடிவத்தில்  கண்ணாடிச் சுவர்கள் கொண்ட ஒரு டவரைப் பார்த்திருக்கிறீர்களா. அதுதான் ரைன் டவர். ஜெர்மானியர்களின் கட்டுமான அறிவுக்கு எடுத்துக்காட்டாக நகரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இருந்தாலும் இந்த டவரின் அமைப்பு வெகுவாகவே ஆச்சர்யப்பட வைத்தது. இதில் இரு தளங்கள் உண்டு. முதல் தளத்தில் அப்சர்வேஷன் டெக்கும் இரண்டாம் தளத்தில் சுழலும் உணவகமும் செயல்படுகிறது.

டுசில்டார்ஃப் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டவர் ஒரு தொலைத்தொடர்பு கோபுரம். ஜெர்மனியின் வெஸ்ட்பாலியா என்ற கூட்டாட்சி மாநிலமான டுஸில்டார்ஃபில் அமைந்துள்ளது . 1979இல் இருந்து 1981 வரை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் இந்த கான்க்ரீட் டவரின்  உயரம் 174.5 மீட்டர்.

170 மீட்டர் உயரத்தில் இதன் அப்சர்வேஷன் டெக் இருக்கிறது. ரேடியோ, டிவி, எஃப் எம் ஆகியவற்றுக்கான ட்ரான்ஸ்மீட்டர் ஏரியல் மேலும் டிவிபி ( டிஜிட்டல் விடியோ ப்ராட்கேஸ்டிங் ) க்கான வான்வெளி ஆண்டனாவும் பதிக்கப்பட்டுள்ளது.

1981 டிசம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த டவரின் அப்சர்வேஷன் டெக்  தினமும் காலை 10 மணியிலிருந்து இரவு 11.30 வரை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது.

இதன் மேல் தளத்தில் ஒரு சுழலும் உணவகம் உள்ளது. இந்த ரிவால்விங் ரெஸ்டாரெண்டுக்குப் போக வேண்டுமானால் அங்கே பியர் அருந்தச் சென்றால் மட்டுமே அனுமதி உண்டு !!! ( பூமி என்னைச் சுத்துதே சுத்துதேன்னு பாடலாமில்ல :)

இந்த கோபுரத்தின் தண்டு மீது ஒரு ஒளிரும் சிற்பம் டிஜிட்டல் கடிகாரமாக வேலை செய்கிறது. இதை ஒளிநேர நிலை என்றழைக்கிறார்கள். வித்யாசமான இதை வடிவமைத்தவர் ஹார்ஸ்ட் ஹெச். பாமன் என்ற சிற்பி. உலகத்திலேயே ரைண்டெர்மில் இருக்கும் இந்த டிஜிட்டல் கடிகாரம்தான் மிகப் பெரிய டிஜிட்டல் கடிகாரம். !

இந்த ரைன் நதி யூரோப்பில் இருக்கும் மிகப் பெரும் நதிகளுள் ஒன்று. வோல்காதான் முதல் நீண்ட நதி. இது இரண்டாவது பெரிய நதி. ஸ்விட்ஜர்லாந்தில் உற்பத்தி ஆகி ரோம், ஃப்ரான்ஸ், இத்தாலி, டச், ஜெர்மனி , நெதர்லாண்ட் என அநேக ஐரோப்பிய நாடுகளில் ஓடி நார்த் சீ எனப்படும் கடலில் கலக்கிறது. இதன் மகாத்மியங்களை இன்னும் வரும் இடுகைகளில் பகிர்வேன். :)


Related Posts Plugin for WordPress, Blogger...