எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 9 மே, 2025

எனது படைப்புகள் வெளியான தொகுப்பு நூல்கள் 1- 5.

பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.

1. நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது. ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள்.

செவ்வாய், 6 மே, 2025

ஏவிசியில்

 ஏவிசி பொறியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தன்று உரையாற்ற அழைப்பு வந்தது.


யூ ட்யூபில் 4141 - 4150 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

4141.முத்திரைகள் பற்றி நான்கு நூல்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=lC6ZPYN1K1E


#முத்திரைகள்பற்றிநான்குநூல்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MUDRAS, #THENAMMAILAKSHMANAN,



4142.பணம் l குபேர யோகமுண்டா l பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eJYJdrclcQg


#பணம், #குபேரயோகமுண்டா, #பாசிட்டிவ்எண்ணங்களைவளர்த்துக்கொள்ளுங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PANAM, #GUBERAYOGAM, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 2 மே, 2025

தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்

 தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்

கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு  வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிக் கூட்டத்தை நான்கே வார்த்தைகளில் கலகலப்பூட்டிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரை மிகப் பிடித்துப் போனதால் மாதங்கள் வாரங்கள் என எனக்குப் பிடித்த சில தேன் பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.

சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு

சித்திரைச் செவ்வானம் பாடல் படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம். வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடிகர் திலகத்துடன் நடித்த அழகுப் பாடல்"பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல  பலகோடி உன் வாழ்விலே” ஈகோ இல்லாத காதல். சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என அன்பைத் தேடி சிவாஜியும் ஜெயாம்மாவும் பாடுவார்கள்.

யூ ட்யூபில் 4131 - 4140 வீடியோக்கள்.

4131.நந்திதேவர் வணக்கம் l  வழிவிடுநந்தி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/SRoZkRlnBbs


#நந்திதேவர்வணக்கம், #வழிவிடுநந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NANDHI, #THENAMMAILAKSHMANAN,



4132.செல்வம் வழங்கும் விநாயகர் மந்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=IGtAgjWFK4U


#செல்வம்வழங்கும்விநாயகர்மந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VINAYAGAR, #THENAMMAILAKSHMANAN,