தேன் பாடல்கள்: மாதங்களும் வாரங்களும்
கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிக் கூட்டத்தை நான்கே வார்த்தைகளில் கலகலப்பூட்டிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி. இந்தச் சித்திரை மிகப் பிடித்துப் போனதால் மாதங்கள் வாரங்கள் என எனக்குப் பிடித்த சில தேன் பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.
சுஜாதா சொன்னது போல சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை. தமிழ் சினிமாவில் பாடல்கள்தான் அதன் உற்பத்தித் தரத்தின் அளவுகோல். பாடல் ஹிட்டாகி படம் சொதப்புவதும் உண்டு
சித்திரைச் செவ்வானம் பாடல் படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. சித்திரை மாதம் பௌர்ணமி நேரம். வளர்ந்த குழந்தையைப் போலிருக்கும் விஜயாம்மா நடிகர் திலகத்துடன் நடித்த அழகுப் பாடல். "பூமாலைகள் உன் தோளில் விழுந்து ஊரெங்கும் பேர் பாடும் நன்னாளிலே பாமாலைகள் பல்லாக்கு வரிசை ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே” ஈகோ இல்லாத காதல். சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் என அன்பைத் தேடி சிவாஜியும் ஜெயாம்மாவும் பாடுவார்கள்.
